உள்நாட்டு விமானங்கள்
உள்நாட்டு விமானங்கள்

கோடை சீசனில் எகிறிய உள்நாட்டு விமானக் கட்டணம்; பயணிகள் திணறல்!

Published on

கோடை வந்தாலே விடுமுறையைக் கழிக்கவும், கோடையிலிருந்து தப்பிக்கவும் சுற்றுலா தலங்களுக்கு பறக்கத் துடிக்கும் மக்கள் அதிகம். ஆனால் கடந்தாண்டைவிட இம்முறை உள்நாட்டு விமானக் கட்டணங்கள் கணிசமாக எகிறியிருப்பது, பயணிகளுக்கு அதிர்ச்சி தந்துள்ளது.

நடப்பு கோடை சீசனில் விமானப் பயணங்களை மேற்கொள்ளும் பயணிகளின் எண்ணிக்கை ஏறக்குறைய ஒரே மாதிரியாக இருந்தபோதும், உள்நாட்டு விமானக் கட்டணங்கள் நடப்பாண்டு 20 சதவீதம் உயர்வு கொண்டுள்ளன. இது கோடையில் பயணங்களைத் திட்டமிடும் பயணிகளை திணறடித்துள்ளன. இதே சூழலில், சர்வதேச விமானக் கட்டணங்கள் எந்த மாற்றமும் இன்றி கடந்த ஆண்டைப் போலவே தொடர்ந்துள்ளன.

விமானப் பயணம்
விமானப் பயணம்

இந்தியர்களின் இந்த கோடைக்கால சர்வதேச விமானப் பயணங்கள் குறித்து ‘இந்திய டிராவல் ஏஜெண்ட்ஸ் அசோசியேஷன் ஆஃப் இந்தியா’வின் துணைத் தலைவர் ஜெய் பாட்டியா என்பவர் கூறுகையில், "இந்தியாவில் இருந்து வணிக வகுப்பு விமானக் கட்டணங்களை அதிகம் பெறுவதை நாங்கள் காண்கிறோம். விஸ்தாரா மற்றும் ஏர் இந்தியா ஆகியவை பாரிஸ், ஜெர்மனி, ஆஸ்திரேலியாவுக்கு அதிக நேரடி சர்வதேச விமானங்களைச் சேர்ப்பதால், இந்தியாவில் இருந்து வெளிச்செல்லும் விமானக் கட்டணங்கள், கடந்த ஆண்டு இந்தியாவிலிருந்து எல்லா இடங்களுக்கும் ஒரே மாதிரியாக உள்ளன" என்று தெரிவித்துள்ளார்.

சிவில் ஏவியேஷன் ரெகுலேட்டர், சிவில் ஏவியேஷன் பொது இயக்குநரகம் ஆகியவை மார்ச் மாதத்தில், கோடைக்கால அட்டவணையில் உள்நாட்டு வாராந்திர புறப்பாடுகளுக்கு ஒப்புதல் அளித்துள்ளது. இது கடந்த ஆண்டு இதே காலத்தை விட கிட்டத்தட்ட 6% அதிகமாகும்.

கோடைக்கால உச்ச பயணத்தின் தேவையைப் பார்க்கும்போது, ​​14 உள்நாட்டு விமான நிறுவனங்களில் 24,275 வாராந்திர உள்நாட்டுப் புறப்பாடுகளுக்கு ஒப்புதல் அளித்துள்ளது. இதுவே 1,922 வாராந்திர சர்வதேச புறப்பாடுகளுக்கும் ஒப்புதல் அளித்தது. இது 5.1 சதவீத வருடாந்திர வளர்ச்சியை குறிக்கிறது.

விமான பயணம்
விமான பயணம்

சர்வதேச அளவில் இந்தியர்களின் பிரபலமான விருப்ப இடங்களாக, ஐரோப்பா, இங்கிலாந்து மற்றும் வியட்நாம் ஆகியவற்றை ஆன்லைன் பயண முகவர்கள் ஒருமனதாக குறிப்பிடப்பட்டுள்ளனர். இதுவே உள்நாட்டில், ஸ்ரீநகர் மற்றும் பாக்டோக்ரா போன்ற குளிர் பிரதேசங்கள் முன்னிலை விருப்பமாக இடம்பிடித்துள்ளன. கூடவே போர்ட் பிளேயர், வாராணசி மற்றும் பாங்காக், ஃபுகெட், சிங்கப்பூர், துபாய், கோலாலம்பூர் ஆகியவை ஏப்ரல் - ஜூன் காலாண்டில் பயணிகளின் பட்டியலில் முன்னிலையில் உள்ளன என்றும் தெரிய வந்துள்ளது.

ஆனால் உள்நாட்டில் கோடை விடுமுறையை உற்சாகத்துடன் கழிக்க விரும்புவோருக்கு, எகிறியிருக்கும் விமானக் கட்டணங்கள் சற்று சவாலாக மாறியுள்ளன.

இதையும் வாசிக்கலாமே...

135 கி.மீ. வேகம்... கரையை கடக்கும் போது சூறையாடிய 'ரெமல்' புயல்: மேற்கு வங்கத்தில் தொடரும் கனமழை!

முதல் முறையாக 50 டிகிரி செல்சியஸ் வெப்பம்... ராஜஸ்தான் மக்கள் அதிர்ச்சி!

திருப்பதி அருகே பயங்கர விபத்து... சாலைத் தடுப்பில் கார் மோதி 4 பேர் பலி!

சோகம்... சரத்குமார் நடித்த 'மாயி' பட இயக்குநர் மாரடைப்பால் மரணம்!

இடைக்கால ஜாமீனை 7 நாள்கள் நீட்டிக்க வேண்டும்: உச்சநீதிமன்றத்தில் கேஜ்ரிவால் மனு

x
காமதேனு
kamadenu.hindutamil.in