தஞ்சையில் ஒரே நாளில் இருவேறு இடங்களில் பழுதாகி நின்ற அரசுப்பேருந்துகள்... பயணிகள் கடும் அவதி

சாலையில் அச்சு முறிந்து விழுந்து பழுதான அரசுப்பேருந்து
சாலையில் அச்சு முறிந்து விழுந்து பழுதான அரசுப்பேருந்து

தஞ்சாவூரில் ஒரே நாளில் இருவேறு இடங்களில் அரசுப்பேருந்துகள் திடீரென அச்சு முறிந்து பழுதாகி நின்றதால் பயணிகள் கடும் அவதிக்கு ஆளாகினர்.

தமிழ்நாடு முழுவதும் பழைய பேருந்துகளை மாற்றிவிட்டு புதிய பேருந்துகளை பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என பொதுமக்களும் எதிர்க்கட்சிகளும் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். இதனிடையே பல இடங்களில் பேருந்துகளில் சேதம் ஏற்பட்டும், பழுதாகியும் நிற்பது வாடிக்கையாக மாறியுள்ளது. பேருந்துகளை முறையாக பராமரிக்காததும், பல ஆண்டுகளாக பயன்பாட்டில் இருந்து வரும் பேருந்துகளை பழுது நீக்காததுமே இதற்கு காரணம் என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

சாலையில் அச்சு முறிந்து விழுந்து பழுதான அரசுப்பேருந்து
சாலையில் அச்சு முறிந்து விழுந்து பழுதான அரசுப்பேருந்து

இந்நிலையில், இன்று தஞ்சை பழைய பேருந்து நிலையத்திலிருந்து பாபநாசம் நோக்கி அரசுப்பேருந்து ஒன்று பயணிகளுடன் சென்று கொண்டிருந்தது. பழைய பேருந்து நிலையத்திற்கு ஒரு கிலோமீட்டர் தொலைவில் கரந்தை என்ற இடத்தில் பேருந்து சென்றுகொண்டிருந்தது. அப்போது எதிர்பாராதவிதமாக பேருந்தின் அச்சு முறிந்து விழுந்தது. இதனால் பேருந்து அங்கிருந்து மேற்கொண்டு நகர முடியாமல் திணறியது. இதையடுத்து, ஓட்டுநரும், நடத்துநரும், பயணிகளை இறக்கி, வேறு பேருந்தில் செல்ல அறிவுறுத்தினர். தொடர்ந்து பேருந்தை பழுது நீக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.

பழுது நீக்கும் பணியில் ஓட்டுநர், நடத்துநர் மற்றும் ஊழியர்கள்
பழுது நீக்கும் பணியில் ஓட்டுநர், நடத்துநர் மற்றும் ஊழியர்கள்

இதனிடையே தஞ்சை காந்திஜி சாலையில் வந்து கொண்டிருந்த நகரப்பேருந்து ஒன்று திடீரென அச்சுமுறிந்து விபத்திற்குள்ளானது. நல்வாய்ப்பாக இதில் பேருந்து பயணிகளுக்கு பாதிப்பு ஏற்படவில்லை. தகவலறிந்து வந்த போக்குவரத்துத்துறை அதிகாரிகள், பேருந்துகளை பழுது நீக்கும் பணியில் ஈடுபட்டனர். இந்த சம்பவங்களால் பேருந்து பயணிகள் கடும் அவதிக்கு ஆளாகினர்.

இதையும் வாசிக்கலாமே...

கோலிவுட்டில் அடுத்தடுத்து கல்யாணக் கொண்டாட்டம்... திருமணத்திற்கு தயாராகும் பிரபலங்கள்!

மோடி மீண்டும் பிரதமர்... விரலை வெட்டி காளி கோயிலில் காணிக்கை செலுத்திய பாஜக தொண்டர்!

நடுரோட்டில் தலைக்குப்புற கவிழ்ந்த கார்... பதைபதைக்க வைக்கும் வீடியோ!

அதிர்ச்சி... 100 நாள் வேலைத்திட்ட தொழிலாளியிடம் ரூ.40 கோடி ஜிஎஸ்டி கேட்டு நோட்டீஸ்!

காங்கிரஸுக்கும், திமுகவுக்கும் அதிக இடம் கிடைத்தது கவலையளிக்கிறது: தமிழிசை சவுந்தர்ராஜன் பேட்டி!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in