ரிசர்வ் வங்கியின் முடிவு... எஸ் பேங்க் பங்குகளின் மதிப்பு 13 சதவீதம் உயர்வு!

எஸ் வங்கி
எஸ் வங்கி

எஸ் பேங்கில் முதலீடுகளை 9.50 சதவீதம் அதிகரிக்க எச்டிஎப்சி நிறுவனம் முடிவு செய்ததை அடுத்து அந்த வங்கியின் மதிப்பு 13 சதவீதம் உயர்ந்துள்ளது.

ஹெச்டிஎப்சி வங்கி
ஹெச்டிஎப்சி வங்கி

கடந்த டிசம்பர் மாதம் ஹெச்டிஎப்சி வங்கிகளின் காலாண்டு அறிக்கை வெளியானது. அதில், அந்த வங்கியில் உள்ள இருப்புத் தொகையை விடக் கடன் தொகை 110 சதவீதமாக உயர்ந்தது. இதன் தாக்கம் காரணமாகக் கடந்த ஜனவரி மாதம் முதல் ஹெச்டிஎப்சி பங்குகளின் விலை தொடர்ந்து சரிவை சந்தித்து வருகின்றன.

இந்நிலையில், எல்ஐசி உட்பட 6 தனியார் வங்கிகளில் உள்ள முதலீடுகளை அதிகரிக்கத் திட்டமிட்டது. இதற்கான அனுமதியை ஆர்பிஐ அளித்துள்ளது. இதையடுத்து, எஸ் பேங்கில் தனது பங்கினை ஹெச்டிஎப்சி 9.50 சதவீதமாக அதிகரித்தது. இதையடுத்து, இன்று, காலை பங்குச்சந்தை தொடங்கிய போதே எஸ் பேங்கின் பங்குகள் 13 சதவீதம் உயர்ந்தது.

ஹெச்டிஎப்சி, ஆக்சிஸ், ஐசிஐசிஐ வங்கிகள்
ஹெச்டிஎப்சி, ஆக்சிஸ், ஐசிஐசிஐ வங்கிகள்

அதாவது இன்று காலை 23 ரூபாய் 10 காசுகளாக இருந்த ஒரு பங்கின் விலை, 25 ரூபாய் 70 காசுகள் வரை உச்சம் தொட்டது. இந்நிலையில் தற்போது, 25 ரூபாய் 15 காசுகளாக உள்ளது. இதேபோல், ஆக்சிஸ், பந்தன், ஐசிஐசிஐ, இண்டஸ் இண்ட், சர்வோதயா உள்ளிட்ட வங்கிகளிலும் தன்னுடைய முதலீடுகளை 9.50 சதவீதம் அளவுக்கு ஹெச்டிஎப்சி உயர்த்தியுள்ளது.

இந்த அறிவிப்பு வெளியான நிலையில் ஹெச்டிஎப்சி வங்கியின் பங்குகள் தொடர்ந்து சரிவிலேயே உள்ளது. இன்று காலை ஒரு பங்கின் விலை ரூ.1,445.55 ஆகத் தொடங்கியது. ஆனால், தற்போது ரூ.1,444.90 ஆக வர்த்தகமாகி வருகிறது.

இதையும் வாசிக்கலாமே...

'கை'விடப்படும் ஜோதிமணி; கரூரில் களம் காண்கிறாரா அமைச்சரின் மனைவி?

இரட்டை இலை சின்னம் முடங்கும்... அதிமுக முன்னாள் அமைச்சர் பரபரப்பு தகவல்!

தேர்தல் தர்பார் |விஸ்வரூபமெடுக்கும் பாஜக; விஜயைத் துரத்தும் சில்மிஷங்கள்!

பயங்கரம்... கார் ஏற்றி போலீஸ்காரர் கொலை: செம்மரக்கடத்தல் கும்பல் அட்டூழியம்!

வேலூரில் ஏ.சி.சண்முகம் போட்டி... பாஜக கூட்டணியில் யார், யாருக்கு எந்தத் தொகுதி?

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in