கர்நாடகாவில் கொட்டுகிறது மழை... 16 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை!

மழை
மழை

கர்நாடகாவில் பல மாவட்டங்களில் கடந்த இரண்டு நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இந்த நிலையில், 16 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும் என்று மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கர்நாடகாவில் பெங்களூரு, மைசூரு, சாமராஜநகர் உள்ளிட்ட பல மாவட்டங்களில் கடந்த இரண்டு நாட்களாக கனமழை பெய்து வருகிறது. நஞ்சன்கூடில் அதிக அளவு மழை பெய்துள்ளது. கிருஷ்ணராஜசாகர், ஹோனகெரே, மிடிகேஷி, கோலார், பெங்களூரு சர்வதேச விமான நிலையம், பாகமண்டல், தேவனஹள்ளி, கொள்ளேகலா, மாண்டியா ஆகிய இடங்களில் பலத்த மழை பெய்துள்ளது.

மழை
மழை

பெங்களூருவில் இன்று காலையில் பல இடங்களில் மழை பெய்தது, மாலையில் அதிக இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அதன்படி விஜயநகரம், தும்கூர், ஷிமோகா, ராமநகரா, மைசூரு, மாண்டியா, கோலார், குடகு, ஹாசன், சித்ரதுர்கா, தாவங்கரே, சாமராஜநகர், சிக்மகளூர், பெங்களூரு புறநநகர், பெங்களூரு மாநகர், யாதகிரி, விஜயபுரா, ராய்ச்சூர், கலபுர்கி, பிதார், உடுப்பி மற்றும் தட்சிண கன்னடா மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும் என்பதால் மஞ்சள் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

கர்நாடகாவில் பல மாவட்டங்களில் மழை பெய்து வந்தாலும், வெயிலின் அளவும் பல பகுதிகள் அதிகரித்து காணப்படுகிறது. கலபுர்கியில் அதிகபட்சமாக 44.5 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது. ஹொன்னாவரில் 34.3, கார்வாரில் 37.0, ஷிராலியில் 37.8 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது.

இதையும் வாசிக்கலாமே...

சென்னையில் அதிகாலையில் கொட்டித் தீர்த்த மழை... 4 நாட்களுக்கு வெப்பம் குறையும் என அறிவிப்பு!

பெங்களூருவில் பரபரப்பு... ரேவண்ணாவுக்கு திடீர் உடல் நலக்குறைவு!

உலக செஞ்சிலுவை தினம்: பேரிடர் முதல் போர் வரை... கலங்கிய மக்களுக்கு ஓடோடி உதவிய கடவுளின் தூதுவர்கள்

பெண் பத்திரிகையாளர் பரபரப்பு புகார்... சவுக்கு சங்கர் மீது சென்னையிலும் 2 வழக்குகள் பதிவு!

பரபரப்பு... உலகம் முழுவதும் தடுப்பூசியை திரும்பப் பெறுவதாக அஸ்ட்ரா ஜெனிகா நிறுவனம் அறிவிப்பு!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in