தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி வட்டி 3 ஆண்டுகளில் இல்லாத அளவு உயர்வு!

இபிஎப்ஓ
இபிஎப்ஓ

2023-24-ம் நிதி ஆண்டிற்கான தொழிலாளர் வருங்கால வைப்பு நிதிக்கு 8.25 சதவீத வட்டி வழங்க தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு
தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு

தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (இபிஎப்ஓ), 2023-24-ம் நிதி ஆண்டிற்கான தொழிலாளர் வருங்கால வைப்பு நிதிக்கு 8.25 சதவீத வட்டி விகிதத்தை நிர்ணயித்துள்ளது. இது கடந்த மூன்று நிதி ஆண்டுகளில் அதிகபட்சமாகும்.

கடந்த ஆண்டு மார்ச் மாதம், இபிஎஃப்ஓ 2022-23-ம் நிதி ஆண்டுக்கு இபிஎஃப் மீதான வட்டி விகிதத்தை 8.15 சதவீதமாக உயர்த்தியது. இது 2021-22-ம் நிதி ஆண்டில் 8.10 சதவீதமாக இருந்தது.

அதற்கு முன்பாக கடந்த 2022 மார்ச் மாதம், 2021-22-ம் நிதி ஆண்டிற்கான இபிஎஃப் வட்டி விகிதத்தை 8.1 சதவீதமாகக் குறைத்திருந்தது. இது கடந்த 1977-78-ம் ஆண்டுக்குப் பின்னர் இதுவரையிலான மிகக் குறைந்த வட்டி விகிதமாக இருந்தது. அப்போது இபிஎஃப் வட்டி விகிதம் 8 சதவீதமாக இருந்தது.

தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி
தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி

2023-24-ம் நிதி ஆண்டிற்கான 8.25 சதவீத வட்டி விகிதத்தை வழங்குவதற்கான முடிவை இபிஎப்ஓ-வின் உச்ச முடிவெடுக்கும் அமைப்பான மத்திய வாரிய குழுவின் (சிபிடி) இன்றைய கூட்டத்தில் மேற்கொள்ளப்பட்டது.

சிபிடி-ன் முடிவைத் தொடர்ந்து, 2023-24-ம் நிதி ஆண்டிற்கான இபிஎப்-க்கான வட்டி விகிதம் நிதி அமைச்சகத்தின் ஒப்புதலுக்காக சமர்ப்பிக்கப்படும். அரசால் அங்கீகரிக்கப்பட்டவுடன், 6 கோடிக்கும் மேற்பட்ட இபிஎஃப்ஓ சந்தாதாரர்களின் கணக்குகளில் வட்டித் தொகை வரவு வைக்கப்படும்.

கடந்த 2020 மார்ச் மாதம், 2019-20-ம் ஆண்டிற்கான வட்டி விகிதம் 7 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு 8.5 சதவீதமாகக் குறைந்து. இபிஎப்ஓ கடந்த 2013-14 மற்றும் 2014-15-ம் நிதி ஆண்டுகளில் அதிக வட்டி விகிதமாக 8.75 சதவீதம் வழங்கியது குறிப்பிடத்தக்கது.

இதையும் வாசிக்கலாமே...

தொடக்கக் கல்வித்துறையில் 1768 காலிப்பணியிடங்கள்...பிப்.14 முதல் விண்ணப்பிக்கலாம்!

அதிகாலையில் அதிர்ச்சி... சுற்றுலா பேருந்து மீது லாரி மோதி 8 பேர் பலி!

கதறும் பயணிகள்... கிளாம்பாக்கத்தில் நடுரோட்டில் அமர்ந்து பொதுமக்கள் விடியவிடிய போராட்டம்!

தமிழ்நாட்டில் 27 இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை!

அரபிக்குத்து பாட்டுக்கு பெல்லி டான்ஸில் தெறிக்க விட்ட கீர்த்தி ஷெட்டி... வைரலாகும் வீடியோ!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in