காபி தோட்டத்தில் பதுங்கியிருந்த காட்டுயானை... நடைபயிற்சி சென்ற தொழிலாளியை தாக்கிக் கொன்றது!

காட்டுயானை
காட்டுயானை

குடகு மாவட்டத்தில் காபி தோட்டப் பகுதியில் நடைபயிற்சி சென்ற தொழிலாளியை காட்டுயானை தாக்கியதில் சம்பவ இடத்திலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

கர்நாடகா மாநிலம், குடகு மாவட்டத்தில் வன விலங்குகளின் அட்டகாசம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் மக்கள் உயிரை கையில் பிடித்துக்கொண்டு நடமாடி வருகின்றனர். ஆனாலும் யானை, கரடி, சிறுத்தை தாக்குதல் தொடர்ந்து கொண்டிருக்கிறது.

நேற்று முன்தினம் ஹொசகுட்டி கிராமத்தில் உள்ள தனது வீட்டில் இருந்து தனது பண்ணைக்கு சென்று கொண்டிருந்த கந்துராஜுவை காட்டு யானை தாக்கியதில் அவர் படுகாயமடைந்தார். அவர் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்த நிலையில், பொன்னம்பேட்டை தாலுகா, பீருகா கிராமத்தில் சாமுண்டி கொல்லி சாலையில் உள்ள காபி தோட்டத்தில் அய்யமடா மாதையா(63) என்ற தொழிலாளி இன்று நடைபயிற்சியில் ஈடுபட்டிருந்தார். அப்போது காபி தோட்டத்திற்குள் பதுங்கியிருந்த காட்டுயானை ஒன்று, மாதையாவை பயங்கரமாக தாக்கியது.

இதில் சம்பவ இடத்திலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த தகவல் அறிந்த வனத்துறையினர் விரைந்து வந்து யானை துரத்தி மாதையாவின் உடலை மீட்டனர். அத்துடன் சம்பவம் நடைபெற்ற பகுதியில் வனத்துறையினர் ஆய்வு செய்தனர்.

இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில்," குடகு மாவட்டத்தில் தண்ணீர் தேடி காட்டுக்குள் இருந்த யானைகள் ஊருக்குள் புகுந்து விடுகின்றன. அவை பயிர்களை நாசம் செய்வதோடு தொழிலாளர்கள் மீதும் தாக்குதல் நடத்துகிறது. இதனால் வீட்டை விட்டு வெளியே வர பயமாக உள்ளது. எனவே, வனத்துறையினர் விரைந்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றனர்.

இதையும் வாசிக்கலாமே...   


இன்றும், நாளையும்.... சென்னை வானிலை மையம் தந்த சர்ப்ரைஸ்!

பரபரப்பு... அமைச்சர் உதயநிதி வந்த ஹெலிகாப்டரை சுற்றி வளைத்த தேர்தல் பறக்கும் படை!

கும்பிடுவது போல கையை வைத்து கொண்டு தானே காருக்குள் இருந்தேன்... போலீஸாருடன் அண்ணாமலை வாக்குவாதம்!

இஸ்ரேல் மீது ஈரான் ஏவுகணைகளால் பயங்கரத் தாக்குதல்... வெள்ளை மாளிகை முக்கிய அறிவிப்பு!

என்னைப் பிரச்சாரம் செய்ய விடாமல் தடுக்கிறார்கள்... பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in