ரயில் பயணிகளின் உயிருக்கு மதிப்பில்லை... வெளியான அதிர்ச்சி வீடியோ!

ரயில் ஏற முயற்சிக்கும் போது விழுந்த பெண்கள்
ரயில் ஏற முயற்சிக்கும் போது விழுந்த பெண்கள்

மும்பையில் புழுதிப்புயல் காரணமாக ரயில் சேவைகள் தாமதமானது. இந்த நிலையில் ரயிலில் பெட்டியில் ஏற எண்ணற்ற பெண்கள் ஏற முயன்ற போது பலர் கீழே விழுந்த வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மகாராஷ்டிரா மாநிலம், மும்பை நகரில் நேற்று 40-50 கி.மீ வேகத்தில் புழுதிப் புயல் வீசியது. அத்துடன் மழைப்பொழிவும் இருந்தது. இதில் ராட்சத விளம்பர பேனர் விழுந்து. இதில் 14 பேர் உயிரிழந்தனர். 67 பேர் மீட்கப்பட்ட நிலையில், காயமடைந்த 75-க்கும் மேற்பட்டோருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

விளம்பர பலகை விழுந்த விபத்து.
விளம்பர பலகை விழுந்த விபத்து.

இந்த நிலையில், பலத்த காற்று காரணமாக மும்பையில் உள்ளூர் ரயில் சேவைகள் நேற்று தாமதமானது. குறிப்பாக தானே மற்றும் முலுண்ட் நிலையங்களுக்கு இடையே உள்ளூர் ரயில் சேவைகள் 2 மணி நேரத்திற்கும் மேலாக நிறுத்தப்பட்டன. மாலை 4.15 மணிக்கு புறப்பட வேண்டிய ரயில், மாலை 6.45 மணியளவில் மீண்டும் சேவையில் ஈடுபட்டதாக மத்திய ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.

முன்னெச்சரிக்கையாக, முக்கிய மற்றும் துறைமுக வழித்தடங்களில் பல்வேறு இடங்களில் 15 நிமிடங்களுக்கு புறநகர் சேவைகள் நிறுத்தப்பட்டன. இதனால் பல ரயில் நிலையங்களில் கூட்டம் அலைமோதியது. சில இடங்களில் நெரிசல் காரணமாக ரயில்கள் நிறுத்தப்பட்டதாகவும், பயணிகள் தண்டவாளத்தில் நடந்து சென்றதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் தானே ரயில் நிலையத்தில் ரயில் ஏற ஏராளமான பெண்கள் முயற்சி செய்தனர். அப்போது பல பெண்கள், கீழே விழுகின்றனர். அவர்களை அருகில் இருப்பவர்கள் தூக்கி விட்டு விட்டு ரயிலில் ஏற முயற்சி செய்கின்றனர். ஒரே நேரத்தில் நூற்றுக்கணக்கான பெண்கள் நெரிசல் மிகுந்த ரயில் பெட்டிக்குள் ஏற முயன்ற போது இந்த சம்பவம் நடைபெற்றது.

ரயில் ஏற முயற்சிக்கும் பெண்கள்
ரயில் ஏற முயற்சிக்கும் பெண்கள்

இந்த வீடியோவை கண்ணீர் மற்றும் துன்பம், அதிர்ச்சி என்ற தலைப்பில் மும்பை ரயில் பயணிகள் வெளியிட்டுள்ளனர்.

அந்த வீடியோவில் பயணிகளின் உயிருக்கு மதிப்பில்லை, என்ன நிலைமை இது, 'மும்பைவாசிகளின் பயண அவலங்களில் அதிகாரிகள் அலட்சியம் காட்டுகின்றனர் போன்ற கருத்துக்களை வீடியோவின் நெட்டிசன்கள் பதிவிட்டுள்ளனர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

இதையும் வாசிக்கலாமே...

விடுதலைப்புலிகள் அமைப்பின் மீதான தடை மேலும் 5 ஆண்டுகளுக்கு நீட்டிப்பு... மத்திய அறிவிப்பு!

கர்ப்பிணிகளுக்கான ஃபேஷன் ஷோ... ரேம்ப் வாக்கில் கலக்கிய அமலாபால்!

தனுஷை விட ஐஸ்வர்யா மோசம்; முன்னாள் கணவர் ஓரினச்சேர்க்கையாளர் ...பகீர் கிளப்பும் பாடகி சுசித்ரா!

அதிகரிக்கும் வெயில்; காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை திறந்தவெளி கட்டுமானப் பணிகளுக்கு கட்டுப்பாடு!

கோவையில் பரபரப்பு... பாலியல் வழக்கில் கைதான சிறுவன் தற்கொலை முயற்சி!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in