கார்த்தி சிதம்பரம்
கார்த்தி சிதம்பரம்

'உத்தராகண்ட் இந்துத்துவ ஈரானின் சோதனைக் கூடம்' - கார்த்தி சிதம்பரம் பாய்ச்சல்

உத்தராகண்டில் பொது சிவில் சட்டம் நிறைவேற்றப்பட்டதைத் தொடர்ந்து "உத்தராகண்ட் இந்துத்துவா ஈரானின் சோதனை கூடமாக" உள்ளது என காங்கிரஸ் எம்.பி கார்த்தி சிதம்பரம் விமர்சித்துள்ளார்.

பொது சிவில் சட்டம்
பொது சிவில் சட்டம்

உத்தராகண்ட் சட்டப் பேரவையில் ஆளும் பாஜக அரசு, பொது சிவில் சட்ட மசோதாவை நேற்று நிறைவேற்றியது. அம்மாநில சட்டப்பேரவையில் நேற்று மாலை முடிவடைந்த இரண்டு நாள் விவாதத்துக்குப் பிறகு இந்த மசோதா குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது. அதன் விதிகளை ஆய்வு செய்ய போதுமான நேரம் கிடைக்கவில்லை என்ற அடிப்படையில் இந்தச் சட்டத்தை அவையின் தேர்வுக் குழுவுக்கு பரிந்துரைப்பதற்கான எதிர்க்கட்சிகளின் முன்மொழிவு நிராகரிக்கப்பட்டது.

இந்த மசோதா தற்போது ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டுள்ளது. அவர் ஒப்புதல் வழங்கிய பின், அம்மாநிலத்தில் பொது சிவில் சட்டம் நடைமுறைக்கு வரும்.

குஜராத், அசாம் போன்ற பல பாஜக ஆளும் மாநிலங்கள் உத்தராகண்ட் சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட பொது சிவில் சட்டம் அடிப்படையில் தங்கள் மாநிலங்களில் சட்டம் இயற்ற ஆர்வம் காட்டி வருகின்றன.

இந்நிலையில் காங்கிரஸ் எம்.பி- கார்த்தி சிதம்பரம் உத்தராகண்ட் மாநிலம் நிறைவேற்றியுள்ள பொது சிவில் சட்டத்தை கடுமையாக விமர்சித்துள்ளார். இதுதொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், "உத்தரகண்ட் இந்துத்துவா ஈரானின் சோதனை கூடம்" என குறிப்பிட்டுள்ளார்.

இதேபோல், பி.ஆர்.அம்பேத்கரின் பேரன் பிரகாஷ் அம்பேத்கர் கூறுகையில், "அரசியலமைப்பு மக்களுக்கு மத சுதந்திரத்துக்கான உரிமையை வழங்குகிறது. எனவே, பொது சிவில் சட்டத்தை திணிக்க முடியாது" என கூறியுள்ளார்.

இதையும் வாசிக்கலாமே...

அத்தை மகளை/மகனை திருமணம் செய்தால் தண்டனை... சர்ச்சையானது பொது சிவில் சட்டம்!

தமிழக அமைச்சர்கள் மீதான சொத்துக்குவிப்பு வழக்கு: நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் பரபரப்பு தகவல்!

அண்ணாமலை அல்ல, அவரது அப்பனே வந்தாலும் அதிமுகவை அழிக்க முடியாது...கொந்தளித்த ஆர்.பி.உதயகுமார்!

நாளை தை அமாவாசை: பூக்களின் விலை கடும் உயர்வு... 1 கிலோ மல்லி ரூ.2,000/-க்கு விற்பனை!

அண்ணாமலை அவதூறு பேச்சு... உயர் நீதின்றம் அதிரடி உத்தரவு!

x
காமதேனு
kamadenu.hindutamil.in