‘உலகுக்கு சிறந்த தலைவர் மோடி... இம்முறையும் அவருக்கே வாக்களியுங்கள்’ -அமெரிக்காவிலிருந்து ஒரு கணீர் குரல்

அமெரிக்க சந்திப்பொன்றில் பிரதமர் மோடி - பாடகி மேரி மில்பென்
அமெரிக்க சந்திப்பொன்றில் பிரதமர் மோடி - பாடகி மேரி மில்பென்

இந்தியாவின் பிரதமராக மோடியை மூன்றாம் முறையாக தேர்ந்தெடுக்கும் வகையில் இந்தியர்கள் அனைவரும் அவருக்கே வாக்களிக்கும்படி, அமெரிக்கப் பாடகியான மேரி மில்பென் இன்றைய தினம் கோரிக்கை வைத்திருக்கிறார்.

இந்தியாவின் மீதும், இந்தியர்கள் மீது குறிப்பாக பிரதமர் மோடி மீது தீவிர அபிமானம் கொண்ட, இந்தியாவுக்கு வெளியிலான பிரபலங்களில் ஒருவர் பாடகி மில்பென். ’இந்தியாவுக்கு என்றில்லை, உலகுக்கே சிறந்த தலைவர் மோடி’ என்றெல்லாம் புகழாரம் சூட்டியவர். வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் மோடி புகழ் பாடக்கூடியவர்.

கடந்த வருடத்தின் மத்தியில் மோடி அமெரிக்கா சென்றிருந்தபோது, அவர் முன்பாக இந்தியாவின் தேசிய கீதத்தை பாடி, மோடியை மெய்சிலிர்க்க வைத்தார். அதற்காக மில்பென்க்கு மோடி பாராட்டு தெரிவித்தபோது, மொடியின் பாதங்களைத் தொட்டு மில்பென் வணங்கினார். தற்போது இந்தியாவில் மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியுள்ள தருணத்தில், மீண்டும் மோடி புகழ் பாடியிருக்கிறார்.

இம்முறை நேரடியாகவே இந்திய மக்களிடம் வேண்டுகோள் விடுக்கும் மேரி மில்பென், ’மூன்றாவது முறையாகவும் மோடியை பிரதமராக தேர்ந்தெடுங்கள்’ என்று கோரிக்கை வைத்திருக்கிறார். இது தொடர்பாக அவர் பதிவிட்டுள்ள எகஸ் தள செய்தியில், “என் அன்புக்குரிய இந்தியாவே, இன்று நீங்கள் வாக்களிக்கச் செல்லும்போது, ​​உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் தேர்தலில், உங்கள் பிரதமருக்கு வாக்களிக்க உங்களை ஊக்குவிக்க விரும்புகிறேன். அமெரிக்காவில் வாழ்நாளின் மிக முக்கியமான தேர்தலை எதிர்கொள்வது போல, இந்தியாவுக்கும் அதன் எதிர்காலம், இளைஞர்கள், சுதந்திரம் போன்றவை இந்த தேர்தலில் தங்கியுள்ளது.

உங்களில் ஒருவர். நம்பிக்கை மற்றும் பணிவு ஆகியவற்றால் தூண்டப்பட்ட மக்களின் மனிதர். ஒவ்வொரு இந்தியக் குடிமகனும் இந்தியக் கனவுக்கான வாய்ப்பைப் பெறுவதை உறுதிசெய்ய வழிவகுப்பவர். நான் பலமுறை பகிரங்கமாகப் பகிர்ந்துள்ளபடி, இந்தியாவிற்கும், அமெரிக்க-இந்தியா உறவுக்கும், ஏன் உலகிற்கும் பிரதமர் மோடி சிறந்த தலைவர். உள்கட்டமைப்பு, தொழில்நுட்பம், இளைஞர் முன்னேற்றம், பெண்கள் அதிகாரமளித்தல், கிராமப்புற மேம்பாடு ஆகியவற்றில் அவரது கொள்கைகள் இந்தியாவை முன்னேற்றுவதைப் பற்றி பேசுகின்றன.

பிரதமர் மோடிக்கு எனது அன்பும் பிரார்த்தனைகளும். இந்தியாவுக்கும் என் அன்பு. பிரதமர் மோடிக்கு மூன்றாவது முறையாக வாக்களிப்பது உங்கள் எதிர்காலத்தைப் பாதுகாக்கும்” என்று மில்பென் தெரிவித்திருக்கிறார். அமெரிக்கப் பாடகியின் இந்த பதிவு பாஜக அபிமானிகள் மத்தியில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.

இதையும் வாசிக்கலாமே...


#Election2024: ரஜினி முதல் விஜய் வரை... வாக்களித்த பிரபலங்கள் லிஸ்ட்!

கோவையில் பரபரப்பு... திமுக நிர்வாகியை குண்டுக்கட்டாக தூக்கிச்சென்ற போலீஸார்!

பள்ளியில் பாடம் நடத்தாமல் ஃபேஷியல் செய்த தலைமை ஆசிரியை... வைரலாகும் வீடியோ!

ஜோதிகா மிஸ்ஸிங்... குடும்பத்துடன் வாக்களிக்க வந்த நடிகர்கள் சிவக்குமார், சூர்யா, கார்த்தி!

பொள்ளாச்சி, கள்ளக்குறிச்சியில் ஹை ஸ்பீடு... ஒரு மணி நிலவரப்படி 46 சதவீத வாக்குப் பதிவு!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in