தைரியம் இருந்தால் நான் சொன்னதுக்குப் பதில் சொல்லுங்கள்... காங்கிரஸாருக்கு நிர்மலா சீதாராமன் குட்டு!

மக்களவையில் பேசிய நிர்மலா சீதாராமன்
மக்களவையில் பேசிய நிர்மலா சீதாராமன்

2008-ம் ஆண்டு நிலவிய உலகளாவிய நிதி நெருக்கடியின் போது காங்கிரஸ் ஆட்சியில் பொருளாதார முறைகேடு நடந்ததால் நாட்டிற்கு கெட்ட பெயர் ஏற்பட்டதாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் குற்றம் சாட்டியுள்ளார்.

நிர்மலா சீதாராமன்
நிர்மலா சீதாராமன்

'இந்தியப் பொருளாதாரம் குறித்த வெள்ளை அறிக்கை மற்றும் இந்திய மக்களின் வாழ்க்கையில் அதன் தாக்கம்' என்ற தலைப்பில் மக்களவையில் நடைபெற்ற விவாதத்தில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று பேசியதாவது:

“யுபிஏ ஆட்சியின் போது நடைபெற்ற காமன் வெல்த் கேம்ஸ் (சி.டபிள்யூ.ஜி), நாட்டிற்கு கெட்ட பெயரை கொண்டு வந்தது. ஆனால், பிரதமர் நரேந்திர மோடி அரசாங்கத்தின் கீழ் இந்தியாவின் ஜி-20 தலைமை, இந்தியாவுக்கு உலகளாவிய மரியாதையைப் பெற்றுத்தந்தது.

மோடி அரசு நேர்மையுடன் செயல்பட்டு, பொருளாதாரத்தை பலவீனமான நிலையிலிருந்து மீட்டு, உலகளவில் முதல் ஐந்து இடங்களுக்குள் கொண்டுவந்துள்ளது. இது விரைவில் உலகின் முதல் மூன்று இடங்களில் ஒன்றாக மாறும்.

சில நெருக்கடிகளுடன் ஒரு அரசாங்கத்தின் பத்து ஆண்டுகளும், வெவ்வேறு நெருக்கடிகளுடன் மற்றொரு அரசாங்கத்தின் 10 ஆண்டுகளும் வெள்ளை அறிக்கையில் ஒப்பீடு செய்து காட்டப்பட்டுள்ளது. அரசாங்கம் அந்த பிரச்சினைகளை உண்மை, நேர்மை, வெளிப்படைத்தன்மை ஆகியவற்றுடன் எதிர்கொண்டு தேசத்தை முன்னிலைக்கு கொண்டு வந்துள்ளது. அதன் முடிவுகள் அனைவருக்கும் தெரிந்துகொள்ளும் வகையில் வெளியிடப்பட்டுள்ளது.

நீங்கள் (காங்கிரஸ்) தேசத்துக்கு முக்கியத்துவம் கொடுக்காமல், உங்கள் முதல் குடும்பத்துக்கு முக்கியத்துவம் கொடுத்தது, வெளிப்படைத்தன்மையைத் தவிர்த்து வேறு விஷயங்களை கருத்தில் கொண்டது ஆகியவற்றால் ஏற்பட்ட விளைவுகள் உங்களுக்கே தெரியும்.

பட்ஜெட் கூட்டத் தொடரில் பங்கேற்ற மத்திய அமைச்சர்கள்
பட்ஜெட் கூட்டத் தொடரில் பங்கேற்ற மத்திய அமைச்சர்கள்

உலகளாவிய நிதி நெருக்கடி ஏற்பட்ட 2008-க்குப் பிறகு நடந்தது மற்றும் கொரோனா காலத்துக்குப் பிறகு நடந்தது ஆகியவற்றின் மூலம் அரசின் நோக்கம் நேர்மையானதாக இருந்தால் நல்ல முடிவுகள் கிடைக்கும் என்பதை தெளிவாகக் காட்டுகிறது. உலகளாவிய நிதி நெருக்கடியைக் கையாள முடியாமல், ஊழல், முறைகேடுகளை தொடர்ந்த கட்சி இப்போது மோடி அரசுக்கு பாடம் நடத்துகிறது”

இவ்வாறு நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசினார்.

நிர்மலா உரையாற்றிய போது குறுக்கிட்ட காங்கிரஸ் எம்பி-க்கள் பலத்த எதிர்ப்பு தெரிவித்தனர். அதற்கும் பதிலளித்த நிர்மலா சீதாரான், “உங்களுக்குத் தைரியமிருந்தால் எனது பேச்சுக்கு இடையூறு செய்யாமல் நான் கூறியவற்றுக்குப் பதிலளியுங்கள்" என்றார்.

இதையும் வாசிக்கலாமே...

ரஜினி மகளை உசுப்பேற்றும் ரசிகர்கள்... ஐஸ்வர்யாவுக்கு தனி கொடி அறிமுகப்படுத்தி அலப்பறை!

அதிர்ச்சி... நேரலையில் சிவசேனா பிரமுகரை சுட்டுக்கொன்றுவிட்டு, கொலையாளியும் தற்கொலை!

ஒலிம்பிக் மெடலுடன் ஈபிள் டவர் பகுதியை எடுத்து செல்லலாம்... பிரான்ஸ் அசத்தல் அறிவிப்பு!

பகீர் வீடியோ... தியேட்டருக்குள் தீவைத்து கொண்டாடிய ரசிகர்கள்!

மின்வாரிய அதிகாரிகள் அலட்சியம்... கால்களை பறிகொடுத்த இளைஞர்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in