பிரதமர் நரேந்திர மோடியின் சாதி குறித்து விவாதம் நடைபெறுவது மிகவும் துரதிர்ஷ்டவசமானது என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறியுள்ளார்.
டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற மத்திய உள் துறை அமைச்சர் அமித் ஷா, "காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு பகிரங்கமாக பொய்களைச் சொல்லும் பழக்கம் இருக்கிறது. இதை அவர் மீண்டும் மீண்டும் செய்கிறார்.
குஜராத்தில் இருந்த காங்கிரஸ் அரசு, 1994ம் ஆண்டில், மோடியின் சாதியை இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பு (ஓபிசி) பட்டியலில் சேர்த்தது. அந்த நேரத்தில், குஜராத்தின் முதலமைச்சராக சபில்தாஸ் மேத்தா இருந்தார். அப்போது காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இருந்தது. அதுவரை, மோடி ஒரு தேர்தலில் கூட போட்டியிடவில்லை. அப்போது அவர் அமைப்பு சார்ந்து மட்டுமே பணியாற்றினார். அவரது சாதி பற்றிய கேள்வி எதுவும் அப்போது எழவில்லை.
அதைத் தொடர்ந்து, குஜராத் அரசு அவரது சாதியை ஓபிசி பட்டியலில் சேர்க்க பரிந்துரைத்தது. கடைசியில் கடந்த 2000-ம் ஆண்டில் மத்திய அரசு ஓபிசி பட்டியலில் பிரதமரின் சாதியை சேர்த்தது. அந்த நேரத்தில், மோடி அதிகாரத்தில் இல்லை. ஒரு எம்பி, எம்எல்ஏ அல்லது பஞ்சாயத்து தலைவராக கூட இல்லை. அவர் 2001ல் முதலமைச்சரானார். இந்த மக்களுக்கு (காங்கிரஸ்) உண்மைகளை சிதைக்கும் பழக்கம் உள்ளது." இவ்வாறு அமித் ஷா பேசினார்.
இதையும் வாசிக்கலாமே...
அடேயப்பா... தேர்தல் விளம்பரத்திற்கு ஒரே வருடத்தில் ரூ.432 கோடி செலவழித்த பாஜக!
ஆபரேஷன் தியேட்டரில் ப்ரீ-வெட்டிங் ஷூட்... அரசு மருத்துவர் டிஸ்மிஸ்!
ஹரிஹரனின் இசைக் கச்சேரியில் குளறுபடி... கூட்ட நெரிசலில் சிக்கி பலர் காயம்!
நடிகர் மிதுன் சக்கரவர்த்தி மருத்துவமனையில் அனுமதி!
அட கொடுமையே... மருத்துவமனையில் நோயாளிகள் முன்பாக நடனமாடி ‘ரீல்ஸ்’ வெளியிட்ட மாணவர்கள்!