போலீஸ் குவிப்பால் பரபரப்பு... உத்தராகண்ட் பேரவையில் இன்று பொது சிவில் சட்டம் தாக்கல்!

போலீஸ் குவிப்பு
போலீஸ் குவிப்பு

உத்தராகண்ட் சட்டப் பேரவையில் இன்று பொது சிவில் சட்ட மசோதா தாக்கல் செய்யப்பட உள்ளதால், சட்டப் பேரவை முன்பு பாதுகாப்புக்காக போலீஸார் குவிக்கப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

உத்தராகண்ட் சட்டப் பேரவையில் இன்று (பிப்ரவரி 6) பொது சிவில் சட்ட (யுசிசி) மசோதா தாக்கல் செய்யப்பட உள்ளது. அதைத் தொடர்ந்து இந்த மசோதா குறித்த விவாதம் நடைபெறுகிறது.

யுசிசி குறித்த மசோதாவை தாக்கல் செய்வதற்காக சிறப்பு சட்டமன்றக் கூட்டத்தொடரில் கேள்வி நேரத்தை தள்ளுபடி செய்வதற்கான முடிவை எதிர்த்து சட்டப்பேரவை அலுவல் ஆய்வுக் குழு கூட்டத்தில் இருந்து எதிர்க்கட்சியான காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கடந்த திங்கள்கிழமை வெளிநடப்பு செய்தனர்.

முன்னதாக யுசிசி மசோதா குறித்து அம்மாநில முதல்வர் புஷ்கர்சிங் தாமி கூறுகையில், “உத்தராகண்ட் மட்டுமல்ல, ஒட்டுமொத்த நாடும் யுசிசி-க்காக காத்திருந்தது. மாநில சட்டப்பேரவையில் யுசிசி மசோதா தாக்கல் செய்யப்படும்போது அவர்களின் காத்திருப்பு முடிவுக்கு வருகிறது. இந்த மசோதா எப்படி பேரவைக்கு கொண்டுவரப்பட்டு நிறைவேற்றப்படுகிறது என்பதை ஒட்டுமொத்த நாடும் கவனித்துக்கொண்டிருக்கும்” என்றார்.

பொது சிவில் சட்டம்
பொது சிவில் சட்டம்

பொது சிவில் சட்டம் என்பது திருமணம், விவகாரத்து, தத்தெடுப்பு, வாரிசுரிமை போன்றவை தொடர்பானதாகும். இதில் தற்போது ஒவ்வொரு மதத்திலும் தனிச்சட்டம் பின்பற்றப்படுகிறது. இதற்குப் பதிலாக அனைவருக்கும் பொதுவான சட்ட நடைமுறையை கொண்டு வருவதே இதன் நோக்கமாகும்.

யுசிசி சட்டம் அரசியலமைப்புச் சட்டம் வழங்கியுள்ள பல்வேறு உரிமைகளுக்கு எதிரானதாக அமைந்துவிடும் ஆபத்து உள்ளது என எதிர்க்கட்சிகள், பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் நாட்டிலேயே முதல் மாநிலமாக உத்தராகண்ட் பேரவையில் இன்று பொது சிவில் சட்ட மசோதா தாக்கல் செய்யப்பட உள்ளது. இதை முன்னிட்டு அசம்பாவிதங்கள் ஏதும் நிகழாமல் தடுக்க சட்டப் பேரவை முன்பு ஏராளமான போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.

இதையும் வாசிக்கலாமே...

'கை'விடப்படும் ஜோதிமணி; கரூரில் களம் காண்கிறாரா அமைச்சரின் மனைவி?

இரட்டை இலை சின்னம் முடங்கும்... அதிமுக முன்னாள் அமைச்சர் பரபரப்பு தகவல்!

தேர்தல் தர்பார் |விஸ்வரூபமெடுக்கும் பாஜக; விஜயைத் துரத்தும் சில்மிஷங்கள்!

பயங்கரம்... கார் ஏற்றி போலீஸ்காரர் கொலை: செம்மரக்கடத்தல் கும்பல் அட்டூழியம்!

வேலூரில் ஏ.சி.சண்முகம் போட்டி... பாஜக கூட்டணியில் யார், யாருக்கு எந்தத் தொகுதி?

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in