அதிர்ச்சியில் தமிழக தலைவர்கள்... வாக்குப்பதிவு சதவீதத்தில் முந்தும் வடகிழக்கு மாநிலங்கள்!

மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவு
மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவு

இந்தியாவில் முதல்கட்ட மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவில் பிற்பகல் 3 மணி நிலவரப்படி வடகிழக்கு மாநிலங்களான திரிபுரா, மேற்கு வங்கம், மேகாலயா உள்ளிட்ட மாநிலங்கள் 60 சதவீதத்தை கடந்துள்ளன.

இந்தியாவில் 18வது மக்களவைத் தேர்தலுக்கான முதல் கட்ட வாக்குப்பதிவு 21 மாநிலங்களில் உள்ள 102 தொகுதிகளுக்கு இன்று நடைபெற்று வருகிறது. மதியம் 1 மணி வரை கிட்டத்தட்ட 40 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.

முதல்கட்ட மக்களவைத் தேர்தல்
முதல்கட்ட மக்களவைத் தேர்தல்

21 மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களில் பெரும்பாலானவற்றில் வாக்குப்பதிவு சுமூகமாகவும், அமைதியாகவும் நடைபெற்று வருவதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இருப்பினும், மேற்கு வங்கம் மற்றும் மணிப்பூரில் வன்முறை, மிரட்டல் மற்றும் தாக்குதல் புகார்கள் பதிவாகியுள்ளன.

இந்நிலையில் பிற்பகல் 3 மணி நிலவரப்படி அதிகபட்சமாக திரிபுராவில் 68.35 சதவீதம், மேற்கு வங்கத்தில் 66.34 சதவீதம், மணிப்பூரில் 62.58 சதவீதம் வாக்குகள் பதிவாகி உள்ளன.

மேகாலயாவில் பிற்பகல் 3 மணி வரை 61.94 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதாக தலைமை தேர்தல் அதிகாரி பி.டி.ஆர் திவாரி தெரிவித்தார். ஷில்லாங் தொகுதியில் 61.18 சதவீதமும், துரா தொகுதியில் 63.23 சதவீதமும் வாக்குகள் பதிவாகின.

மாநிலத்தில் 3,512 வாக்குச் சாவடிகளில் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. ஷில்லாங் நாடாளுமன்ற தொகுதியில் 6 பேர், துரா மக்களவைத் தொகுதியில் 4 பேர் என மொத்தம் 10 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.

இந்திய தேர்தல் ஆணையம்
இந்திய தேர்தல் ஆணையம்

இம்மாநிலத்தில் மொத்தம் 22.67 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர். இவர்கள் இந்த 10 வேட்பாளர்களின் தலைவிதியை தீர்மானிக்க உள்ளனர். தமிழகத்தில் 50.80 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளன. ஒட்டுமொத்தமாக முதல்கட்ட வாக்குப்பதிவில் பிற்பகல் 3 மணி வரை 49.78 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளன. குறிப்பாக சென்னையில் வாக்குப்பதிவு சதவீதம் குறைந்துள்ளது தலைவர்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது.

இதையும் வாசிக்கலாமே...

#Election2024: ரஜினி முதல் விஜய் வரை... வாக்களித்த பிரபலங்கள் லிஸ்ட்!

கோவையில் பரபரப்பு... திமுக நிர்வாகியை குண்டுக்கட்டாக தூக்கிச்சென்ற போலீஸார்!

பள்ளியில் பாடம் நடத்தாமல் ஃபேஷியல் செய்த தலைமை ஆசிரியை... வைரலாகும் வீடியோ!

ஜோதிகா மிஸ்ஸிங்... குடும்பத்துடன் வாக்களிக்க வந்த நடிகர்கள் சிவக்குமார், சூர்யா, கார்த்தி!

பொள்ளாச்சி, கள்ளக்குறிச்சியில் ஹை ஸ்பீடு... ஒரு மணி நிலவரப்படி 46 சதவீத வாக்குப் பதிவு!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in