லாரி அப்செட்... துள்ளிக் குதித்து அரைபட்ட உயிர் மீன்கள்; வைரல் வீடியோ!

கவிழ்ந்து கிடக்கும் லாரி
கவிழ்ந்து கிடக்கும் லாரி

தெலங்கானாவில் இன்று அதிகாலை மீன் ஏற்றிச் சென்ற லாரி சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதனால் லாரியில் இருந்த டன் கணக்கிலான மீன்கள் சாலையில் சிதறி வாகனங்களில் அரைபட்டன.

தெலங்கானா மாநிலம், வனபார்த்தியில் தேசிய நெடுஞ்சாலையில் இன்று அதிகாலை மீன் ஏற்றிச் சென்ற லாரி ஒன்று கட்டுப்பாட்டை இழந்து சாலையில் கவிழ்ந்தது. இதில், அந்த லாரியில் இருந்த டன் கணக்கிலான உயிர் மீன்கள் சாலையில் சிதறி துடித்தன. அதிகாலை பொழுது என்பதால் மீட்பு பணிக்கு உடனடியாக ஆள்கள் வரவில்லை.

சாலையில் சிதறி கிடந்த மீன்கள்
சாலையில் சிதறி கிடந்த மீன்கள்

இருப்பினும் சாலையில் மீன்கள் துள்ளிக்கொண்டிருந்ததை அந்த வழியே சென்றவர்கள் வீடியோ பதிவு செய்து சமூக வலைதளங்களில் வெளியிட்டனர். அந்த வழியாகச் சென்ற கனரக வாகனங்கள், சாலையில் துள்ளிக்கொண்டிருந்த மீன்கள் மீது ஏற்றியவாறே கடந்து சென்றன. இதனால் டன் கணக்கிலான உயிர் மீன்கள் வாகனங்களில் அரைபட்டு இறந்தன.

இதற்கிடையே, சாலையில் மீன்கள் துள்ளிக்கொண்டிருக்கும் வீடியோ வைரலானதால் அப்பகுதியில் மீன்களை அள்ளிச்செல்ல மக்கள் திரண்டனர்.

இதையும் வாசிக்கலாமே...

'கை'விடப்படும் ஜோதிமணி; கரூரில் களம் காண்கிறாரா அமைச்சரின் மனைவி?

இரட்டை இலை சின்னம் முடங்கும்... அதிமுக முன்னாள் அமைச்சர் பரபரப்பு தகவல்!

தேர்தல் தர்பார் |விஸ்வரூபமெடுக்கும் பாஜக; விஜயைத் துரத்தும் சில்மிஷங்கள்!

பயங்கரம்... கார் ஏற்றி போலீஸ்காரர் கொலை: செம்மரக்கடத்தல் கும்பல் அட்டூழியம்!

வேலூரில் ஏ.சி.சண்முகம் போட்டி... பாஜக கூட்டணியில் யார், யாருக்கு எந்தத் தொகுதி?

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in