வாக்குப்பதிவு இயந்திரத்தை உடைத்த ஆளுங்கட்சி எம்எல்ஏ... அதிர்ச்சி வீடியோ!

வாக்குப்பதிவு இயந்திரத்தை உடைத்த எம்எல்ஏ
வாக்குப்பதிவு இயந்திரத்தை உடைத்த எம்எல்ஏ
Updated on
2 min read

ஆந்திராவில் ஆளுங்கட்சியைச் சேர்ந்த ஒய்எஸ்ஆர்சிபி கட்சி எம்எல்ஏ விவிபிஏடி இயந்திரத்தை தரையில் போட்டு உடைத்த வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவில் மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடத்தப்பட்டு வருகிறது. ஆந்திராவில் உள்ள 25 தொகுதிகளுக்கு மே 13-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. அன்றைய தினம் 175 சட்டமன்ற தொகுதிகளிலும் வாக்குப்பதிவு நடைபெற்றது. அப்போது பல இடங்களில் வன்முறை மற்றும் தகாத சம்பவங்கள் நடைபெற்றன. அப்போது வாக்களிக்க வரிசையில் நின்ற வாக்காளர் ஒருவரை எம்எல்ஏ ஒருவர் அறைந்த வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வாக்குப்பதிவு இயந்திரத்தை உடைத்த எம்எல்ஏ
வாக்குப்பதிவு இயந்திரத்தை உடைத்த எம்எல்ஏ

இந்த நிலையில், ஆந்திராவில் ஆளுங்கட்சியான ஒய்எஸ்ஆர்சிபி எம்எல்ஏ ஒருவர் வாக்குப்பதிவு இயந்திரத்தை (விவிபிஏடி) தூக்கி தரையில் அடித்து அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வருகிறது.

மச்செர்லா சட்டமன்றத் தொகுதியின் எம்எல்ஏவும், ஒய்எஸ்ஆர்சிபி தலைவர்களில் ஒருவரான பின்னெல்லி ராமகிருஷ்ண ரெட்டி தான், சிசிடிவி கேமராவில் சிக்கியுள்ளார். ராமகிருஷ்ண ரெட்டி நான்கைந்து பேருடன் வாக்குச் சாவடிக்குள் நுழைந்ததைக் கண்டதும் திடீரென தேர்தல் அதிகாரிகள் எழுந்து நின்றனர். எம்எல்ஏ ராமகிருஷ்ண ரெட்டி விவிபிஏடி இயந்திரத்தை தூக்கி தரையில் அடித்து நொறுக்கினார்.

ஆந்திரா முதல்வர் ஜெகன் மோகனுடன் எம்எல்ஏ ராமகிருஷ்ண ரெட்டி.
ஆந்திரா முதல்வர் ஜெகன் மோகனுடன் எம்எல்ஏ ராமகிருஷ்ண ரெட்டி.

இந்த வீடியோ வைரலானதால், தெலுங்கு தேசம் கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். தோல்வி நிச்சயம் என்பதில் உறுதியாக உள்ளதால், ஒய்எஸ்ஆர்சிபி தலைவர்கள் இப்படி ஒரு சலசலப்பை கிளப்புகிறார்கள் என்று குற்றம் சாட்டியுள்ளனர்.

அத்துடன் ஒய்எஸ்ஆர்சிபி எம்எல்ஏ பின்னேல்லி ராமகிருஷ்ண ரெட்டி வாக்குப்பதிவு இயந்திரத்தை சேதப்படுத்தினார். இது தொடர்பாக தேர்தல் ஆணையம் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். தோல்வி பயத்தில் இப்படி நடந்து கொள்கிறார்கள். ஜூன் 4-ம் தேதி மக்கள் அவருக்கு தகுந்த பாடம் புகட்டுவார்கள் என்றும் தெரிவித்துள்ளனர்.

இதற்குப் பதில் அளித்துள்ள தேர்தல் ஆணையம், 7 வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு இயந்திரங்களை எம்எல்ஏ ரெட்டி அழித்த வீடியோ கிடைத்துள்ளது. அனைத்து வாக்குச் சாவடிகளின் வீடியோ காட்சிகளும் மாவட்ட தேர்தல் ஆணையத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது என்று கூறியுள்ளது.

மேலும், இந்த வழக்கு தீவிரமாக எடுத்துக்கொள்ளப்பட்டு சட்டப்படி நடவடிக்கை எடுக்குமாறு ஆந்திர மாநில தலைமை தேர்தல் அதிகாரி முகேஷ் குமார் காவல் துறைக்கு உத்தரவிட்டுள்ளார்.

இதையும் வாசிக்கலாமே...


வங்கக்கடலில் புயல் சின்னம்... தேனி உள்ளிட்ட 4 மாவட்டங்களில் கொட்டப் போகிறது கனமழை!

சோகம்... போலீஸ்காரருடன் தூக்கில் தொங்கிய இளம்பெண்!

காதலித்ததால் ஆத்திரம்... தங்கையை கோடாரியால் வெட்டிக்கொலை செய்த அண்ணன்கள்

மதுரை எய்ம்ஸ் திட்ட மதிப்பு... ரூ.1,978 கோடியிலிருந்து ரூ.2,021 கோடிகளாக உயர்வு!

உயர் தொழில்நுட்பம் படித்த தமிழர்களைக் குறிவைக்கும் வெளிநாட்டு மோசடிக் கும்பல்... கலெக்டர் எச்சரிக்கை!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in