பகீர்... விஷ ஊசி போட்டு போலீஸ்காரரை திருடர்கள் கொன்றார்களா?: ஆதாரங்கள் கிடைக்காததால் மர்மம் நீடிப்பு!

விஷால் பவார்.
விஷால் பவார்.

மும்பையில் திருடர்களைப் பிடிக்க முயன்ற போலீஸ்காரர் விஷ ஊசி போட்டுக் கொலை செய்யப்பட்டதாக கூறப்படும் விவகாரத்தில் ஆதாரங்கள் கிடைக்காததால் மர்மம் நீடிக்கிறது.

மகாராஷ்டிரா மாநிலம், மும்பையில் உள்ள தானேவைச் சேர்ந்தவர் விஷால் பவார்(30). போலீஸ்காரரான இவர் இரவுப்பணிக்காக ரயிலில் ஏப்ரல் 28-ம் தேதி சென்று கொண்டிருந்தார். இரவு 9.30 மணியளவில் மாட்டுங்கா சியோன் ஸ்டேஷனுக்கு இடையே விஷால், ரயிலின் கதவு அருகே நின்று செல்போனில் பேசிக்கொண்டிருந்தார். அப்போது ரயிலின் வேகம் குறைந்த போது, ரயிலுக்கு வெளியே இருந்த ஒருவர், குச்சியால் விஷாலின் செல்போனை தட்டினார். இதனால் விஷாலிடமிருந்த செல்போன் தண்டவாளத்தில் விழுந்தது.

ரயில்
ரயில்

ரயில் மெதுவாக சென்றதால், திருடனைப் பிடிக்க ரயிலில் இருந்து விஷால், இறங்கி துரத்த ஆரம்பித்தார். அப்போது செல்போன் திருடர்கள் மற்றும் போதைக்கு அடிமையான கும்பல் விஷாலை சுற்றி வளைதத்து தாக்கியதாக கூறப்படுகிறது. அப்போது அந்த கும்பலில் இருந்த ஒருவர், விஷாலின் கழுத்தில் விஷ ஊசியை செலுத்தியதுடன் சிவப்பு நிற திரவத்தையும் வற்புறுத்தி குடிக்க வைத்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால் சுமார் 12 மணி நேரம் சுயநினைவை இழந்த விஷால் பவார், இதன் பின் தானேவில் உள்ள வீடு திரும்பினார்.

இதையடுத்து அவரது குடும்பத்தினர் விஷால் பவாரை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அத்துடன் கோப்ரி காவல் நிலையத்தில் புகார் செய்தனர். இந்த நிலையில், விஷாலின் உடல்நிலை மோசமானது. இதையடுத்து அவரிடம் போலீஸார் வாக்குமூலம் பெற்ற நிலையில், அவர் மூன்று நாட்களுக்குப் பிறகு உயிரிழந்தார். இதனால் இவ்வழக்கை போலீஸார், கொலை வழக்காக பதிவு செய்துள்ளனர். பின்னர் இந்த வழக்கு தாதர் ரயில்வே காவல் நிலையத்திற்கு மாற்றப்பட்டது.

இச்சம்பவம் தொடர்பாக 12 குழுக்களை அமைத்து குற்றவாளிகளைத் தேடும் நடவடிக்கையில் போலீஸார் ஈடுபட்டுள்ளனர். அதன்படி தானே முதல் தாதர் ஸ்டேஷன் வரை உள்ள சிசிடிவி காட்சிகள் விரிவாக ஆய்வு செய்யப்பட்டன. ஆனால், சம்பவம் நடந்த நேரத்தில் விஷால் பவார் தண்டவாளப் பகுதியில் இல்லை என்றும், அப்பகுதியில் எந்த கொள்ளை சம்பவமும் நடக்கவில்லை என விசாரணையில் தெரிய வந்துள்ளது.

நள்ளிரவில் தாதர் ஸ்டேஷன் ரயிலில் இருந்து விஷால் இறங்குவது தெரிய வந்துள்ளது. அடுத்த ஆறு மணி நேரமாகியும் அவரைப் பற்றிய எந்தத் தடயமும் கிடைக்கவில்லை. அவர் தாதரில் உள்ள ஒரு மதுக்கடைக்கு சென்றதாக கூறப்படுகிறது.

மேலும் பல்வேறு ரயில் நிலையங்கள் மற்றும் பாலங்கள், நடைமேடைகள், உணவகங்கள் மற்றும் மதுக்கடைகளில் உள்ள சிசிடிவி காட்சிகளை போலீஸார் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். " விஷால் பவார் மரணத்தின் மர்மத்தை அவிழ்க்க நாங்கள் உறுதியாக இருக்கிறோம். உண்மை விரைவில் வெளிவரும்" என்று தனிப்படையைச் சேர்ந்த போலீஸ்காரர் ஒருவர் தெரிவித்தார்.

விஷால் பவாரின் மரணத்திற்கான சரியான காரணத்தை வெளிப்படுத்தும் பிரேத பரிசோதனை அறிக்கைக்காக காவல் துறை தற்போது காத்திருக்கிறது.

இதுதொடர்பாக தாதர் ரயில்வே காவல் நிலையத்தின் மூத்த காவல் ஆய்வாளர் அனில் கதம் கூறுகையில்," தொழில்நுட்ப உதவியுடன் விசாரணைக்காக நகர காவல் துறை மற்றும் ரயில்வே காவல் துறை அடங்கிய குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன, ஆனால் சம்பவம் நடந்த பாதையில் சிசிடிவி கேமராக்களில் எந்த காட்சியும் கிடைக்கவில்லை. இதற்கிடையில், விஷால் பவாரின் இறப்புக்கான காரணம் இன்னும் மருத்துவர்களால் கண்டறியப்படவில்லை. அந்த அறிக்கை வந்தபின் தான் இந்த வழக்கின் மர்மம் நீங்கும்" என்று கூறினார்.

இதையும் வாசிக்கலாமே...

ஜாக்கிரதை... இன்று அக்னி நட்சத்திரம் தொடக்கம்... 40 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவாகலாம்!

தேனியில் யூடியூபர் சவுக்கு சங்கர் அதிரடியாக கைது... பெண் காவலர்கள் குறித்த அவதூறு பேசியதாக வழக்கு!

மாடியிலிருந்து வீசி எறிந்து பச்சிளம் குழந்தை கொலை... தாய் உள்ளிட்ட மூவர் கைது!

200 அடி பள்ளத்தில் கவிழ்ந்த சுற்றுலா வேன்... சிறுமி பலி.. 30 பேர் படுகாயம்!

கேரள ராணுவ அதிகாரியின் மகன் பெங்களூருவில் கடத்தல்... பணத்திற்காக நண்பர்கள் போட்ட பிளான்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in