தெலங்கானா ரேவந்த் ரெட்டி அரசின் முதல் பட்ஜெட் - ரூ.2.75 லட்சம் கோடிக்கு தாக்கல்!

மல்லு பட்டி விக்ரமர்கா, ரேவந்த் ரெட்டி
மல்லு பட்டி விக்ரமர்கா, ரேவந்த் ரெட்டி

தெலங்கானா துணை முதல்வரும், நிதியமைச்சருமான மல்லு பட்டி விக்ரமர்கா, 2024-25ம் ஆண்டுக்கு ரூ.2.75 லட்சம் கோடி பட்ஜெட்டை பேரவையில் தாக்கல் செய்தார்.

தெலங்கானாவில் கடந்த நவம்பரில் நடந்த சட்டப் பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்தது. அம்மாநில புதிய முதல்வராக ரேவந்த் ரெட்டி பொறுப்பேற்றார். இந்நிலையில் தெலங்கானாவில் காங்கிரஸ் அரசின் முதல் பட்ஜெட்டை துணை முதல்வரும், நிதியமைச்சருமான மல்லு பட்டி விக்ரமர்கா, சட்டப் பேரவையில் இன்று தாக்கல் செய்தார்.

விரைவில் மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ளதை கருத்தில் கொண்டு 2024-25ம் ஆண்டுக்கு ரூ.2.75 லட்சம் கோடி மதிப்பில் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. பேரவையில் நிதி அமைச்சர் மல்லு பட்டி விக்ரமர்கா பேசியதாவது: “2024-25ம் ஆண்டில் மொத்த வரவு செலவுத் திட்டத்தில், வருவாய் செலவு ரூ.2,01,178 கோடியாகவும், மூலதனச் செலவு ரூ. 29,669 கோடியாகவும் இருக்கும்.

சட்டப் பேரவையில் பேசிய முதல்வர் ரேவந்த் ரெட்டி
சட்டப் பேரவையில் பேசிய முதல்வர் ரேவந்த் ரெட்டி

சமீபத்திய சட்டப்பேரவைத் தேர்தலில் வழங்கப்பட்ட 6 வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்காக, அரசு ரூ.53,196 கோடியை ஒதுக்கியுள்ளது. ஆட்சிக்கு வந்தவுடன் இரண்டு வாக்குறுதிகள் அரசால் செயல்படுத்தப்பட்டது. மற்ற வாக்குறுதிகள் விரைவில் செயல்படுத்தப்படும்.

கல்வித்துறைக்கு ரூ.21,389 கோடி, சுகாதாரத்துறைக்கு ரூ.11,500 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. விவசாயத்துக்கு ரூ.19,746 கோடி, பாசனத்துக்கு ரூ.28,024 கோடி, நகராட்சி நிர்வாகத்துக்கு ரூ.11,692 கோடி, வீட்டுவசதி துறைக்கு ரூ.7,740 கோடி, தகவல் தொழில்நுட்ப துறைக்கு ரூ.774 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஆதிதிராவிடர் நலத் துறைக்கு அரசு ரூ.21,874 கோடி ரூபாய் ஒதுக்கியுள்ளது. ஹைதராபாத்தில் உள்ள மூசி நதியை அழகுபடுத்துவதற்காக, ரூ.1,000 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.” இவ்வாறு அவர் பேசினார்.

இதையும் வாசிக்கலாமே...

அடேயப்பா... தேர்தல் விளம்பரத்திற்கு ஒரே வருடத்தில் ரூ.432 கோடி செலவழித்த பாஜக!

ஆபரேஷன் தியேட்டரில் ப்ரீ-வெட்டிங் ஷூட்... அரசு மருத்துவர் டிஸ்மிஸ்!

ஹரிஹரனின் இசைக் கச்சேரியில் குளறுபடி... கூட்ட நெரிசலில் சிக்கி பலர் காயம்!

நடிகர் மிதுன் சக்கரவர்த்தி மருத்துவமனையில் அனுமதி!

அட கொடுமையே... மருத்துவமனையில் நோயாளிகள் முன்பாக நடனமாடி ‘ரீல்ஸ்’ வெளியிட்ட மாணவர்கள்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in