’உங்களுக்கு ஓட்டு கிடையாது...’ பிரச்சாரத்தில் பெண்ணின் கன்னத்தில் ’அறைந்த’ காங்கிரஸ் வேட்பாளர்!

பிரச்சாரத்தின் போது மூதாட்டிக்கு அறைவிடும் காங்கிரஸ் வேட்பாளர் ஜீவன் ரெட்டி
பிரச்சாரத்தின் போது மூதாட்டிக்கு அறைவிடும் காங்கிரஸ் வேட்பாளர் ஜீவன் ரெட்டி

தெலங்கானாவில் தேர்தல் பிரச்சாரத்தின்போது, காங்கிரஸ் வேட்பாளர் ஜீவன் ரெட்டி, ‘இந்த முறை உங்களுக்கு ஓட்டு கிடையாது.. பூ சின்னத்துக்கு தான் போடுவோம்’ என்று கூறிய பெண்ணின் கன்னத்தில் அறைந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.

தெலங்கானா மாநிலம், நிஜாமாபாத் மக்களவைத் தொகுதியில் காங்கிரஸ் சார்பில் அக்கட்சியின் மூத்த தலைவர் டி. ஜீவன் ரெட்டி. இவர் நேற்று, ஆர்மூர் சட்டப் பேரவைத் தொகுதியில் உள்ள ஒரு கிராமத்தில் கட்சி பிரமுகர்களுடன் சேர்ந்து பிரச்சாரம் செய்து கொண்டிருந்தார்.

அப்போது நூறு நாள் வேலைத்திட்டத்தின் கீழ் தொழிலாளர்கள் பணிபுரிந்து கொண்டிருந்த களத்துக்கு சென்ற ஜீவன் ரெட்டி, அங்கு பணிபுரிந்து கொண்டிருந்த ஒரு பெண்மணியிடம் ஓட்டு கேட்டார்.

அதற்கு அந்த மூதாட்டி, சமீபத்திய சட்டப் பேரவைத் தேர்தலில், காங்கிரஸ் கட்சிக்கு வாக்களித்ததாகவும், ஆனால் தனக்கு ஓய்வூதியம் கிடைக்கவில்லை எனவும் கூறி கவலை தெரிவித்தார். அப்போது காங்கிரஸ் வேட்பாளர் பி. வினய் குமார் ரெட்டியும் உடன் இருந்தார். இவர் கடந்த ஆண்டு இறுதியில் நடந்த சட்டப் பேரவை தேர்தலில் ஆர்மூர் தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்தார்.

இதற்கிடையே, 'ஓய்வூதியம் கிடைக்காததால், வரும் மே 13ம் தேதி நடைபெற உள்ள தேர்தலில் நாங்கள் 'பூ' சின்னத்துக்கு தான் வாக்களிப்போம் என அந்த பெண்மணி கூறியதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த ஜீவன் ரெட்டி திடீரென அந்த பெண்ணின் கன்னத்தில் அறைந்தார்.

காங்கிரஸ் வேட்பாளர் ஜீவன் ரெட்டி
காங்கிரஸ் வேட்பாளர் ஜீவன் ரெட்டி

இது தொடர்பான வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளன. நிஜாமாபாத் மக்களவைத் தொகுதியின் கீழ் உள்ள 7 சட்டப் பேரவைத் தொகுதிகளில் ஆர்மூர் ஒன்றாகும். நிஜாமாபாத் தொகுதியில் ஜீவன் ரெட்டியை எதிர்த்து பாஜக சார்பில் டி. அரவிந்த் போட்டியிடுகிறார்.

இதையும் வாசிக்கலாமே...

ஜாக்கிரதை... இன்று அக்னி நட்சத்திரம் தொடக்கம்... 40 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவாகலாம்!

தேனியில் யூடியூபர் சவுக்கு சங்கர் அதிரடியாக கைது... பெண் காவலர்கள் குறித்த அவதூறு பேசியதாக வழக்கு!

மாடியிலிருந்து வீசி எறிந்து பச்சிளம் குழந்தை கொலை... தாய் உள்ளிட்ட மூவர் கைது!

200 அடி பள்ளத்தில் கவிழ்ந்த சுற்றுலா வேன்... சிறுமி பலி.. 30 பேர் படுகாயம்!

கேரள ராணுவ அதிகாரியின் மகன் பெங்களூருவில் கடத்தல்... பணத்திற்காக நண்பர்கள் போட்ட பிளான்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in