
தெலங்கானா மாநில தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் கலந்து கொண்ட பிஆர்எஸ் கட்சியின் பெண் உறுப்பினர்களுக்கு பீரும், பிரியாணியும் வழங்கியுள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
தெலங்கானா சட்டப்பேரவைத் தேர்தல் வரும் 30-ம் தேதி நடைபெற உள்ளது. இங்குள்ள 119 தொகுதிகளில் 2,290 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். தெலங்கானாவில், தொடர்ந்து 2வது முறையாக பாரத் ராஷ்ட்ர சமிதி கட்சியின்(பிஆர்எஸ்) ஆட்சி நடக்கிறது. சந்திரசேகர ராவ் முதல்வராக உள்ளார்.
இந்நிலையில், வரவுள்ள சட்டமன்ற தேர்தலிலும் வெற்றி பெற்று மூன்றாவது முறையாக ஹாட்ரிக் சாதனைப் படைக்க தீவிரமாக பணியாற்றி வருகிறார். காங்கிரஸ் கட்சியும், பாஜகவும் தெலங்கானாவில் கால் ஊன்ற தீவிரமாக முயற்சிகளைச் செய்து வருகின்றன.
கடந்த இரண்டு தேர்தல்களில் எளிதாக வெற்றி பெற்ற சந்திரசேகர ராவுக்கு, இம்முறை காங்கிரஸ் கட்சி பெரும் தலைவலியாக மாறியுள்ளது. காங்கிரஸ் கட்சிக்கு அங்கு பெருகியுள்ள செல்வாக்கால், இரு கட்சிகளுக்கும் இடையே பெரும் போட்டி நிலவி வருகிறது.
தேர்தலுக்கு இன்னும் 10 நாட்களே உள்ள நிலையில், பிரச்சாரம் சூடு பிடித்துள்ளது. காங்கிரஸ் கட்சி சார்பில் ராகுல் காந்தி, அக்கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜூன கார்கே உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர். பாஜக சார்பில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, பிரதமர் மோடி உள்ளிட்டோர் பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்.
ஆளுங்கட்சியான பிஆர்எஸ் கட்சியின் தலைவரும், அம்மாநில முதல்வருமான சந்திரசேகர ராவ், அவரது மகள் கவிதா உள்ளிட்டோர் சூறாவளி பிரச்சாரம் மேற்கொண்டுள்ளனர்.
இந்நிலையில், அக்கட்சியினர் தேர்தல் பிரசாரத்தில் கலந்து கொள்ள வரும் பெண்களுக்கு பிரியாணியும், பீரும் வழங்கியுள்ளதாக கூறப்படுகிறது. இதுதொடர்பான வீடியோ தற்போது வைரலாக சமூக வலைதளத்தில் பரவி வருகிறது.
அதில். பிஆர்எஸ் பெண் உறுப்பினர்கள் ஓவ்வொருவரும் பிரியாணி சாப்பிட்டுக்கொண்டிருக்க, அவர்கள் அருகிலேயே பீர் பாட்டிலும் வைக்கப்பட்டுள்ளது. சில பெண்கள் பீர் குடித்துக் கொண்டே சாப்பிடுகின்றனர். பெண்களை முன்னேற்றுவோம், பெண்களுக்கு முக்கியத்துவம் அளிப்போம் என பேசி வரும் பிஆர்எஸ் கட்சி சொன்ன முன்னேற்றம் இதுதானா என பலரும் சமூக வலைதளங்களில் அந்தக் கட்யை கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.
இதையும் வாசிக்கலாமே...
சேலையில் ஒய்யாரமாய் வலம் வரும் பிரபல நடிகை
உஷார்... சிக்கன் பிரியாணியால் சுயநினைவை இழந்த 3 பேர்!
மணி ரத்னத்தால வாழ்க்கையே போச்சு.. நாசம் பண்ணிட்டார்... பொதுவெளியில் புலம்பிய பிரபலம்!
கொதிக்கும் சாம்பாரில் தவறி விழுந்த 2ம் வகுப்பு மாணவி உயிரிழப்பு