பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு ரெடியாகும் ரெட் கார்னர் நோட்டீஸ்... கர்நாடகா அரசியலில் பரபரப்பு!

ரெட் கார்னர் நோட்டீஸ்
ரெட் கார்னர் நோட்டீஸ்

ஆபாச வீடியோ வழக்கில் ஜேடிஎஸ் எம்.பியும், ஹாசன் தொகுதி தற்போதைய வேட்பாளருமான பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு ரெட் கார்னர் நோட்டீஸ் பிறப்பிக்க சிறப்பு புலனாய்வுக்குழு (எஸ்ஐடி) தயாராகி வருகிறது.

கர்நாடகாவின் ஹாசன் எம்.பி.,யான பிரஜ்வல் ரேவண்ணாவின் சர்ச்சை வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பரவி பேசுபொருளாக மாறியது. இந்த விவகாரம் தற்போது அரசியலில் பெரும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. அதேநேரம், குற்றம் தொடர்பாக விசாரிப்பதற்காக கர்நாடக அரசு சிறப்பு விசாரணைக் குழுவை(எஸ்ஐடி) அமைத்துள்ளது. அக்குழு விசாரணையை தொடங்கியுள்ள நிலையில் பிரஜ்வல் ரேவண்ணா வெளிநாட்டுக்கு தப்பிச் சென்றுள்ளார்.

பிரஜ்வல் ரேவண்ணா
பிரஜ்வல் ரேவண்ணா

ஆபாச வீடியோக்கள் வெளியான அன்றே அவர் ஜெர்மனி சென்றதாக சொல்லப்படுகிறது. பிரஜ்வால் ரேவண்ணா வெளிநாட்டிற்கு தப்பிச் சென்றுள்ள நிலையில் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என அவரது வீட்டில் நோட்டீஸ் ஒட்டப்பட்டுள்ளது. ஆனால், தனக்கு கால அவகாசம் வழங்க வேண்டும் என்று தனது வழக்கறிஞர் மூலம் கோரிக்கை விடுத்தார்.

பிரஜ்வல் ரேவண்ணா மீதான பாலியல் முறைகேடு வழக்குத் தொடர்பாக எஸ்-பி சீமா லட்கர் தலைமையிலான சிறப்பு புலனாய்வுக் குழுவினர் ஹோலனர்சிபூரில் பல இடங்களுக்குச் சென்று நேற்று ஆய்வு நடத்தினர். இதற்கிடையில், மைசூரு மாவட்டம், கே.ஆர்.நகர் காவல்நிலையத்தில், ரேவண்ணா மீதான கடத்தல் வழக்குத் தொடர்பாக, ஹோலநரசிப்பூர் போலீஸார், நகரில் உள்ள அவரது வீட்டில் சோதனை நடத்தினர்.

பிரஜ்வல் ரேவண்ணா, எச்.டி.ரேவண்ணா
பிரஜ்வல் ரேவண்ணா, எச்.டி.ரேவண்ணா

இந்த நிலையில், வழக்கு விசாரணையில் இருந்து தப்பித்து வரும் பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு எதிராக ரெட் கார்னர் நோட்டீஸ் பிறப்பிக்க எஸ்ஐடி தயாராகி வருகிறது. மறுபுறம் பவானி ரேவண்ணாவுக்கு எஸ்ஐடி சம்மன் அனுப்பியுள்ளது என்றும் கூறப்படுகிறது.

மைசூரு கே.ஆர்.நகர் காவல்நிலையத்தில் பெண் கடத்தல் மற்றும் சட்ட விரோதமாக காவலில் வைக்கப்பட்டதாகப் பதிவு செய்யப்பட்ட வழக்குத் தொடர்பாக, முன்னாள் அமைச்சர் எச்.டி. ரேவண்ணா தாக்கல் செய்த முன்ஜாமீன் மனு மீதான விசாரணை பெங்களூரு மக்கள் பிரதிநிதிகள் சிறப்பு நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வருகிறது. அவர் சிறப்பு புலனாய்வுக்குழு (எஸ்ஐடி) முன்பு ஆஜராக வேண்டும் என்று நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

பிரஜ்வல் ரேவண்ணா, குமாரசாமி, மோடி, தேவகவுடா
பிரஜ்வல் ரேவண்ணா, குமாரசாமி, மோடி, தேவகவுடா

இந்த நிலையில், கடந்த இரண்டு நாட்களாக ரேவண்ணா மாயமாகியுள்ளார். அவர் எச்.டி.தேவகவுடாவின் இல்லத்திலோ, பசவனகுடியில் உள்ள அவரது இல்லத்திலோ இல்லை என எஸ்ஐடி கூறியுள்ளது. கைது செய்யப்படலாம் என்ற அச்சத்தில் அவர் தப்பிச் சென்றிருக்கலாம் என அதிகாரிகள் சந்தேகம் தெரிவித்துள்ளனர்.

ஜாமீன் கிடைத்தால் எஸ்ஐடி விசாரணைக்கு வருவோம், இல்லையெனில் உயர் நீதிமன்றத்தை அணுகுவோம் என்று ரேவண்ணாவின் வழக்கறிஞர் கூறியுள்ளார். இதனால் எச்.டி.ரேவண்ணா கைது செய்யப்படலாம் என்ற பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இதையும் வாசிக்கலாமே...

ஜாக்கிரதை... இன்று அக்னி நட்சத்திரம் தொடக்கம்... 40 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவாகலாம்!

தேனியில் யூடியூபர் சவுக்கு சங்கர் அதிரடியாக கைது... பெண் காவலர்கள் குறித்த அவதூறு பேசியதாக வழக்கு!

மாடியிலிருந்து வீசி எறிந்து பச்சிளம் குழந்தை கொலை... தாய் உள்ளிட்ட மூவர் கைது!

200 அடி பள்ளத்தில் கவிழ்ந்த சுற்றுலா வேன்... சிறுமி பலி.. 30 பேர் படுகாயம்!

கேரள ராணுவ அதிகாரியின் மகன் பெங்களூருவில் கடத்தல்... பணத்திற்காக நண்பர்கள் போட்ட பிளான்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in