தைரியமிருந்தால் ஆவணங்களை காட்டுங்கள்... அமலாக்கத் துறைக்கு ஹேமந்த் சோரன் சவால்!

ஹேமந்த் சோரன்
ஹேமந்த் சோரன்

“தைரியமிருந்தால் ஆவணங்களை காட்டுங்கள்” என தன்னை கைது செய்த வழக்கில் ஆவணங்களை வெளியிட அமலாக்கத் துறைக்கு ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரன் சவால் விடுத்துள்ளார்.

ரூ.600 கோடி நிலமோசடி தொடர்பான சட்ட விரோத பணப் பரிமாற்ற வழக்கில் ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரன் அமலாக்கத் துறையால் கடந்த 31-ம் தேதி கைது செய்யப்பட்டார்.

இதன் காரணமாக, அம்மாநிலத்தில் சம்பாய் சோரன் புதிய முதல்வராக பதவியேற்றார். இதைத் தொடர்ந்து சம்பாய் தலைமையிலான அரசு அம்மாநில சட்டப் பேரவையில் இன்று நம்பிக்கை வாக்கெடுப்பை சந்தித்து வருகிறது.

ஹேமந்த் சோரனும் ஒரு உறுப்பினர் என்பதால் அவர், நீதிமன்ற அனுமதியின் பேரில் இன்றைய நம்பிக்கை வாக்கெடுப்பில் பங்கேற்க பலத்த பாதுகாப்புடன் சட்டப் பேரவைக்கு அழைத்து வரப்பட்டார்.

ஹேமந்த் சோரன்
ஹேமந்த் சோரன்

இந்நிலையில், சட்டப் பேரவையில் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரன் பேசுகையில், "இன்று நான் 8.5 ஏக்கர் நில மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளேன். அவர்களுக்கு (அமலாக்கத் துறை) தைரியம் இருந்தால், என் பெயரில் பதிவு செய்யப்பட்ட நிலத்தின் ஆவணங்களைக் காட்டுங்கள். அது நிரூபிக்கப்பட்டால், நான் அரசியலில் இருந்து விலகுகிறேன்” என்றார்.

தான் கைது செய்யப்பட்ட வழக்கில் ஆவணங்களை வெளியிடுமாறு ஹேமந்த் சோரன் கூறியுள்ளது அமலாக்கத் துறைக்கு மட்டுமின்றி பாஜகவுக்கும் பொருந்தும் என அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

இதையும் வாசிக்கலாமே...

'இந்திய இசைக்குழுவினருக்கு கிராமி' விருது... குவியும் பாராட்டுகள்!

அதிர்ச்சி... சைதை துரைசாமி மகன் என்ன ஆனார்? ஆற்றில் கார் கவிழ்ந்து விபத்து!

ஓட ஓட விரட்டி பிரபல ரவுடி வெட்டிக் கொலை... சென்னையில் பயங்கரம்!

நெருங்கும் தேர்தல்... கட்சித்தாவும் 15 எம்எல்ஏக்கள்...  அரசியலில் பரபரப்பு!

ப்பா... தூக்கம் போச்சு... ரசிகர்களை கிறங்கடித்த சோபிதா துலிபாலா!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in