பாரத் ரத்னா விருதுகள் குறித்து பிரதமர் மோடி அறிவிப்புகள் வெளியிடுவதைத் தொடர்ந்து, இந்தியா கூட்டணியிலிருந்து தலைவர்கள் அடுத்தடுத்து பாஜக முகாமுக்குத் தாவி வருவது எதிர்க்கட்சியினரை அதிர்ச்சியடையச் செய்துள்ளது.
முன்னாள் பிரதமர் சவுத்ரி சரண் சிங்கிற்கு பாரத ரத்னா வழங்கப்படும் என பிரதமர் நரேந்திர மோடி இன்று அறிவித்துள்ளார். இந்நிலையில், சவுத்ரி சரண் சிங்கின் பேரனும், ஆர்எல்டி தலைவருமான ஜெயந்த் சவுத்ரி செய்தியாளர்களிடம் கூறியாதவது: “இப்போது என்னால் மோடியை எப்படி நிராகரிக்க முடியும்? சரண் சிங்கிற்கு பாரத ரத்னா விருது அறிவிக்கப்பட்டுள்ள இன்றைய தினம் எனக்கு ஒரு பெரிய நாள்.
மேலும் இது ஒரு உணர்ச்சிகரமான தருணம். குடியரசுத் தலைவர், அரசு மற்றும் பிரதமர் மோடிக்கு நான் நன்றி தெரிவிக்க விரும்புகிறேன். ஏனெனில் இது அவரது தொலைநோக்குப் பார்வையின் ஒரு பகுதியாகும். மக்களின் உணர்வுகள் இந்த முடிவுடன் இணைந்துள்ளது.
தொகுதிகள் அல்லது வாக்குகளைப் பற்றி பேசுவது இந்த நாளின் முக்கியத்துவத்தை குறைக்கும். நான் வாழ்த்து தெரிவிக்கும்போது, பிரதமர் மோடி ஒரு முடிவை எடுத்துள்ளார். இது அவர் தேசத்தின் அடிப்படை உணர்வுகளையும், குணத்தையும் புரிந்துள்ளார் என்பதை நிரூபிக்கிறது” என்றார்.
பாஜகவின் என்டிஏ கூட்டணியில் ஆர்எல்டி இணைய உள்ளதாக வெளியான தகவல்கள் குறித்து கேள்வியெழுப்பியதற்கு, “அதில் ஏதாவது பிரச்சினையா? இன்று உங்கள் கேள்விகளை நான் எப்படி மறுக்க முடியும்” என தெரிவித்தார்.
இதேபோல் பீகார் முன்னாள் முதல்வர் கர்பூரி தாக்கூருக்கு பாரத் ரத்னா விருது அறிவிக்கப்பட்ட சில நாள்களிலேயே அம்மாநில முதல்வரும், ஐக்கிய ஜனதா தள தலைவருமான நிதிஷ் குமார், இந்தியா கூட்டணியிலிருந்து விலகி பாஜக கூட்டணியில் இணைந்தார். கர்பூரி தாக்கூர் நிதிஷ் குமாரின் அரசியல் குருநாதர் போன்று கருதப்படுகிறார்.
தற்போது, சரண் சிங்கிற்கு பாரத் ரத்னா விருது அறிவிப்பு வெளியான அதே நேரத்தில் இந்தியா கூட்டணியில் இருந்து ஆர்எல்டி, பாஜக கூட்டணிக்கு மாறியுள்ளது. முன்னதாக கடந்த ஜனவரி 19 அன்று, சமாஜ்வாடி கட்சி, ஆர்எல்டி-க்கு 7 தொகுதிகளை ஒதுக்கீடு செய்திருந்தது. இந்நிலையில் என்ன மாயம் நேர்ந்ததோ, ஜெயந்த் சவுத்ரி பாஜக முகாமுக்கு தாவியுள்ளார். இதனால் இந்தியா கூட்டணி கட்சியினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
இதையும் வாசிக்கலாமே...
ரஜினி மகளை உசுப்பேற்றும் ரசிகர்கள்... ஐஸ்வர்யாவுக்கு தனி கொடி அறிமுகப்படுத்தி அலப்பறை!
அதிர்ச்சி... நேரலையில் சிவசேனா பிரமுகரை சுட்டுக்கொன்றுவிட்டு, கொலையாளியும் தற்கொலை!
ஒலிம்பிக் மெடலுடன் ஈபிள் டவர் பகுதியை எடுத்து செல்லலாம்... பிரான்ஸ் அசத்தல் அறிவிப்பு!
பகீர் வீடியோ... தியேட்டருக்குள் தீவைத்து கொண்டாடிய ரசிகர்கள்!
மின்வாரிய அதிகாரிகள் அலட்சியம்... கால்களை பறிகொடுத்த இளைஞர்!