பேடிஎம் பேமெண்ட்ஸ் பேங்க் மீது கடும் நடவடிக்கை... ரிசர்வ் வங்கி ஆளுநர் அதிரடி அறிவிப்பு!

பேடிஎம் விவகாரம்
பேடிஎம் விவகாரம்

பேடிஎம் பேமெண்ட்ஸ் பேங்க் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) கவர்னர் சக்திகாந்த தாஸ் கூறியுள்ளார்.

பேடிஎம் பேமெண்ட்ஸ் பேங்க், ரிசர்வ் வங்கி விதிகளை மீறியதைத் தொடர்ந்து வரும் மார்ச் 1ம் தேதி முதல், பேமெண்ட்ஸ் பேங்க் கணக்குகள் அல்லது டிஜிட்டல் வாலட்டுகளில் புதிய வைப்புகளை (டெபாஸிட்) பெறுவதை நிறுத்துமாறு பேடிஎம்-க்கு ரிசர்வ் வங்கி கடந்த வாரம் உத்தரவிட்டது.

சரியான ஆவணங்கள் இல்லாமல் பேடிஎம் பேமென்ட்ஸ் பேங்க்-ல் உருவாக்கப்பட்ட நூற்றுக்கணக்கான கணக்குகள் காரணமாக இந்திய ரிசர்வ் வங்கி அந்நிறுவனம் மீது கடுமையான கட்டுப்பாடுகளை விதித்தது. வாடிக்கையாளரை தெரிந்துகொள்ளும் 'கேஒய்சி’ ஆவணங்கள் முறையாக இல்லாத கணக்குகள் மூலம் பல கோடி ரூபாய் மதிப்பிலான பணப் பரிவர்த்தனைகள் மோசடியாக நடந்திருக்கலாம் எனவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

மேலும், ஆயிரத்துக்கும் மேற்பட்ட பயனர்களின் நிரந்தர கணக்கு (பான்) எண் பல்வேறு கணக்குகளில் இணைக்கப்பட்டிருப்பது கண்டறியப்பட்டது.

ஆர்பிஐ கவர்னர் சக்திகாந்த தாஸ்
ஆர்பிஐ கவர்னர் சக்திகாந்த தாஸ்

பேடிஎம் பேமெண்ட்ஸ் பேங்க், ரிசர்வ் வங்கியின் நடவடிக்கையை எதிர்கொண்டுள்ள நிலையில் பேடிஎம் சிஇஓ விஜய் சேகர் ஷர்மா, மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் மற்றும் ரிசர்வ் வங்கி உயர் அதிகாரிகளை கடந்த 6ம் தேதி சந்தித்துப் பேசினார்.

இந்நிலையில், டெல்லியில் இன்று செய்தியாளர்களை சந்தித்த ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் கூறுகையில், “பேடிஎம் மட்டுமல்ல; பொதுவான கண்காணிப்பை நான் மேற்கொள்ள விரும்புகிறேன். எங்கள் மேற்பார்வை அமைப்பு மற்றும் அணுகுமுறையை தீவிரப்படுத்தியுள்ளோம். விதிமீறலின் தீவிரத்தை கருத்தில் கொண்டு கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

பேடிஎம்
பேடிஎம்

ரிசர்வ் வங்கியின் அனைத்து நடவடிக்கைகளும் முறையான ஸ்திரத்தன்மை, வாடிக்கையாளர்களின் நலன்களைப் பாதுகாப்பது ஆகியவற்றை அடிப்படையாக கொண்டவை. நடவடிக்கைகள் எப்போதும் சூழ்நிலையின் தீவிரத்தன்மையின் அடிப்படையில் இருக்கும்” என்றார்.

இதேபோல், ரிசர்வ் வங்கியின் துணை கவர்னர் சுவாமிநாதன் கூறுகையில், "பேடிஎம் பேமென்ட்ஸ் வங்கியை கண்காணித்து வருகிறோம். நிலைமைக்குத் தகுந்த நடவடிக்கைகள் எடுக்கப்படும்" என்றார்.

இதையும் வாசிக்கலாமே...

தமிழக அமைச்சர்கள் மீதான வழக்குகள்: நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் இன்று விசாரிக்கிறார்!

இலங்கை கடற்படை அட்டூழியம் தொடர்கிறது... தமிழக மீனவர்கள் 19 பேர் கைது!

8-ம் வகுப்பு படித்தவர்களுக்கு சுகாதாரத்துறையில் வேலை: பிப்.22 வரை விண்ணப்பிக்கலாம்!

நடிப்பை உதறித் தள்ளி புத்த மதத்தைத் தழுவிய நடிகை... ரசிகர்கள் அதிர்ச்சி!

கணவரைப் பிரிந்தார் சூர்யா பட நடிகை!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in