'பால்தாக்கரேவுக்கும் பாரத ரத்னா வழங்க வேண்டும்': மகாராஷ்டிராவில் ஒலிக்கும் குரல்கள்!

பால் தாக்கரே
பால் தாக்கரே

ஒன்றுபட்ட சிவசேனா கட்சியின் நிறுவனரான பால்தாக்கரேவுக்கும் பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என மகாராஷ்டிராவில் அரசியல் தலைவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

பாரத ரத்னா விருது
பாரத ரத்னா விருது

முன்னாள் பிரதமர்கள் சவுத்ரி சரண் சிங், பி.வி.நரசிம்ம ராவ், வேளாண் விஞ்ஞானி எம். எஸ். சுவாமிநாதன் ஆகியோருக்கு பாரத ரத்னா விருது வழங்கப்படும் என பிரதமர் நரேந்திர மோடி நேற்று அறிவித்தார். இதற்கு முன்னதாக சமீபத்தில் பீகார் முன்னாள் முதல்வர் கர்பூரி தாகூர், பாஜக மூத்த தலைவர் எல்.கே. அத்வானி ஆகியோருக்கும் பாரத ரத்னா விருதுகளை பிரதமர் நரேந்திர மோடி அறிவித்திருந்தார்.

இந்த நிலையில் மகாராஷ்டிரா மாநிலத்தில் சிவசேனா கட்சி நிறுவனரான பால் தாக்கரேவுக்கும் பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என சிவசேனா (உத்தவ் தாக்கரே பிரிவு) எம்.பி-சஞ்சய் ரவுத், மகாராஷ்டிரா நவநிர்மான் சேனா தலைவர் ராஜ் தாக்கரே ஆகியோர் மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

இது தொடர்பாக எக்ஸ் தளத்தில் சஞ்சய் ரவுத் வெளியிட்டுள்ள பதிவில், “கர்பூரி தாகூர், எல்.கே.அத்வானி ஆகியோருக்குப் பிறகு, சவுத்ரி சரண் சிங், பி.வி. நரசிம்ம ராவ், எம்.எஸ். சுவாமிநாதன் ஆகியோருக்கும் பாரத ரத்னா விருது அறிவிக்கப்பட்டுள்ளது. மற்ற தலைவர்களும் காத்திருக்கிறார்கள்.

ஆனால், நாடு முழுவதும் பரவி வரும் இந்து அலையின் பின்னணியில் உள்ள உண்மையான சிற்பி பால் தாக்கரேவை பிரதமர் ஏன் மறந்துவிட்டார்? பால்தாக்கரேவால் தான் பிரதமர் மோடி அயோத்தியில் ராமர் கோயிலின் பிரதிஷ்டை விழாவை நடத்த முடிந்தது என்பதை நினைவில் கொள்ளுங்கள்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

ராஜ் தாக்கரே
ராஜ் தாக்கரே

இதேபோல், ராஜ் தாக்கரே எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “இந்த நாட்டின் சிற்பியாகவும், நாடு முழுவதும் உள்ள அனைத்து இந்துக்களின் பெருமையை வெளிக்கொணர்ந்த ஒரு தனித்துவமான தலைவருமான பால்தாக்கரே பாரத் ரத்னா விருதுக்கு தகுதியானவர். அவருக்கும் பாரத் ரத்னா விருது வழங்கி கவுரவிக்க வேண்டும்” எனக் கூறியுள்ளார்.

இதையும் வாசிக்கலாமே...

தொடக்கக் கல்வித்துறையில் 1768 காலிப்பணியிடங்கள்...பிப்.14 முதல் விண்ணப்பிக்கலாம்!

அதிகாலையில் அதிர்ச்சி... சுற்றுலா பேருந்து மீது லாரி மோதி 8 பேர் பலி!

கதறும் பயணிகள்... கிளாம்பாக்கத்தில் நடுரோட்டில் அமர்ந்து பொதுமக்கள் விடியவிடிய போராட்டம்!

தமிழ்நாட்டில் 27 இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை!

அரபிக்குத்து பாட்டுக்கு பெல்லி டான்ஸில் தெறிக்க விட்ட கீர்த்தி ஷெட்டி... வைரலாகும் வீடியோ!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in