ஜார்க்கண்ட் சலோ... 4-வது நாளாக நடைப்பயணத்தைத் தொடரும் ராகுல்காந்தி!

ராம்கர் மாவட்டத்தில் ராகுல் காந்தி
ராம்கர் மாவட்டத்தில் ராகுல் காந்தி

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் 'பாரத் ஜோடோ நியாய யாத்திரை', ஜார்க்கண்டின் ராம்கர் மாவட்டத்தில் இன்று காலை மீண்டும் தொடங்கியது.

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, 'பாரத் ஜோடோ நியாய யாத்திரை' நடைப்பயணத்தை கடந்த ஜனவரி 14 முதல் மேற்கொண்டு வருகிறார். மக்களவை தேர்தலை முன்னிட்டு இரண்டாம் கட்டமாக ராகுல் மேற்கொண்டு வரும் இந்த நடைப்பயணம் மணிப்பூரில் தொடங்கி, மகாராஷ்டிரத்தில் முடிக்கும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது.

இதுவரை மணிப்பூர், அசாம், மேகாலயா, மேற்கு வங்கம், பீகார் ஆகிய மாநிலங்களை ராகுல் காந்தியின் நடைப்பயணம் கடந்துள்ளது. இதைத் தொடர்ந்து தற்போது ஜார்க்கண்ட் மாநிலத்தில் அவர் நடைப்பயணம் மேற்கொண்டு வருகிறார்.

நேற்று இரவு ராம்கர் மாவட்டத்தின் சித்து-கன்ஹு மைதானத்தில் நடைப்பயண குழுவினர் தங்கினர். இன்று காலை மகாத்மா காந்தி சவுக்கில் இருந்து மீண்டும் நடைப்பயணத்தைத் தொடங்கிய ராகுல், சுடுபாலு பள்ளத்தாக்கு நோக்கி செல்கிறார்.

அங்கு சுதந்திர போராட்ட வீரர்களான ஷாஹீத் ஷேக் பிகாரி, டிக்கைட் உமரோ சிங் ஆகியோருக்கு ராகுல் காந்தி அஞ்சலி செலுத்துவார் என மாநில காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ராஜீவ் ரஞ்சன் தெரிவித்துள்ளார்.

பாரத் ஜோடா நியாய யாத்திரையில் ராகுல் காந்தி
பாரத் ஜோடா நியாய யாத்திரையில் ராகுல் காந்தி

ராஞ்சி மாவட்டத்தில் உள்ள இர்பாவை அடைந்த பிறகு, இந்திரா காந்தி கைத்தறி பதப்படுத்தும் மைதானத்தில் நெசவாளர்களுடன் ராகுல் காந்தி கலந்துரையாடுவார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மதிய உணவு இடைவேளைக்குப் பிறகு இந்த யாத்திரை, ராஞ்சியின் ஷாஹீத் மைதானத்தை அடையும். அங்கு ராகுல் காந்தி பொதுக் கூட்டத்தில் உரையாற்ற உள்ளார்.

அசாமில் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா தலைமையிலான கூட்டணி அரசு சட்டப் பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பை எதிர்கொண்டுள்ள நிலையில் அங்கு 4-வது நாளாக ராகுல் காந்தி நடைப்பயணம் மேற்கொண்டுள்ளார்.

ஜார்க்கண்ட் மாநிலத்தில் ராகுல் காந்தியின் நடைப்பயணம், இரண்டு கட்டங்களாக 8 நாள்களில் 13 மாவட்டங்களில் நடைபெறுகிறது. அம்மாநிலத்தில் மொத்தம் 804 கி.மீ. நடைப்பயணத்துக்கு திட்டமிடப்பட்டுள்ளது.

இதையும் வாசிக்கலாமே...

'இந்திய இசைக்குழுவினருக்கு கிராமி' விருது... குவியும் பாராட்டுகள்!

அதிர்ச்சி... சைதை துரைசாமி மகன் என்ன ஆனார்? ஆற்றில் கார் கவிழ்ந்து விபத்து!

ஓட ஓட விரட்டி பிரபல ரவுடி வெட்டிக் கொலை... சென்னையில் பயங்கரம்!

நெருங்கும் தேர்தல்... கட்சித்தாவும் 15 எம்எல்ஏக்கள்...  அரசியலில் பரபரப்பு!

ப்பா... தூக்கம் போச்சு... ரசிகர்களை கிறங்கடித்த சோபிதா துலிபாலா!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in