மகாராஷ்டிராவில் தொகுதிப் பங்கீடு: உத்தவ் தாக்கரேவுடன் ராகுல் தீவிர ஆலோசனை!

உத்தவ் தாக்கரே, ராகுல் காந்தி
உத்தவ் தாக்கரே, ராகுல் காந்தி

மகாராஷ்டிராவில் சிவசேனா (உத்தவ் பிரிவு), காங்கிரஸ் இடையே தொகுதி பங்கீடு தொடர்பாக உத்தவ் தாக்கரேவுடன் தொலைபேசியில் ஒரு மணி நேரமாக ராகுல் காந்தி பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.

அகிலேஷ் யாதவ், அர்விந்த் கேஜ்ரிவால், மம்தா பானர்ஜி
அகிலேஷ் யாதவ், அர்விந்த் கேஜ்ரிவால், மம்தா பானர்ஜி

மக்களவைத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், இந்திய கூட்டணியில் மாநில கட்சிகளுடன் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தைகள் தீவிரமாக நடந்து வருகிறது. அர்விந்த் கேஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சி மற்றும் அகிலேஷ் யாதவின் சமாஜ்வாடி கட்சி ஆகியவற்றுடன் காங்கிரஸ் கட்சி சமீபத்தில் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தையை சுமுகமாக முடித்துள்ளது. இதேபோல், மேற்கு வங்கத்திலும் மம்தா தலைமையிலான திரிணமூல் காங்கிரஸ் கட்சியுடன் காங்கிரஸ் தீவிர பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளது.

கடந்த 2019 இறுதியில் நடந்த மகாராஷ்டிரா சட்டப் பேரவைத் தேர்தலில் அதிகாரப் பகிர்வில் உடன்பாடு ஏற்படாததால் உத்தவ் தாக்கரேவின் சிவசேனா, பாஜகவுடனான 25 ஆண்டுகால கூட்டணியை முறித்துக்கொண்டது.

அஜித் பவார், ஏக்நாத் ஷிண்டே
அஜித் பவார், ஏக்நாத் ஷிண்டே

மகாராஷ்டிராவில் உத்தவ் தாக்கரேவின் சிவசேனா, சரத் பவாரின் தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் ஆகிய கட்சிகள் அடங்கிய மகா விகாஸ் அகாதி கூட்டணி உருவானது. இக்கூட்டணியின் முதல்வராக உத்தவ் தாக்கரே பதவி வகித்து வந்தார். அதன் பிறகு கடந்த 2022ல் ஏக்நாத் ஷிண்டே, சிவசேனா கட்சியை உடைத்து பாஜகவுடன் கூட்டணி அமைத்து முதல்வரானார்.

இதேபோல் கடந்த ஆண்டு ஜூலையில் அஜித் பவார், தேசியவாத காங்கிரஸ் கட்சியை உடைத்து பாஜக, சிவசேனா (ஷிண்டே பிரிவு) கூட்டணியில் இணைந்தார். இதேபோல் மகாராஷ்டிராவில் காங்கிரஸ் கட்சியிலிருந்த அசோக் சவான், மிலிந்த் தியோரா போன்ற முக்கிய தலைவர்கள் சமீபத்தில் பாஜகவில் இணைந்தனர்.

இந்நிலையில் மக்களவைத் தேர்தல் நெருங்கியுள்ளதால் இந்தியா கூட்டணியில், உடைபட்ட சிவசேனா (உத்தவ் பிரிவு), தேசியவாத காங்கிரஸ் (சரத்பவார் பிரிவு) மற்றும் காங்கிரஸ் கட்சிகள் தொகுதிப் பங்கீட்டில் தீவிரமாக ஈடுபட்டுள்ளன.

ராகுல் காந்தி, சரத்பவார், உத்தவ் தாக்கரே
ராகுல் காந்தி, சரத்பவார், உத்தவ் தாக்கரே

மும்பையில் உள்ள 6 மக்களவைத் தொகுதிகளில் மும்பை தெற்கு மத்திய, மும்பை வடக்கு மத்திய மற்றும் மும்பை வடமேற்கு ஆகிய 3 தொகுதிகளில் போட்டியிட காங்கிரஸ் விரும்புவதாகவும், ஆனால் மும்பை தெற்கு, மும்பை வடமேற்கு, மும்பை வடகிழக்கு, மும்பை தெற்கு மத்திய ஆகிய 4 தொகுதிகளை உத்தவ் தாக்கரே கேட்டுவருவதாலும் இழுபறி நீடிக்கிறது.

அம்மாநிலத்தில் உள்ள 48 மக்களவைத் தொகுதிகளில் 40 தொகுதிகளில் தொகுதிப் பங்கீடு சுமூகமாக முடிந்துள்ளது. 8 தொகுதிகளில் இழுபறி நீடிக்கிறது. இச்சூழலில் காங்கிரஸ் எம்.பி-ராகுல் காந்தி, உத்தவ் தாக்கரேவை தொலைபேசியில் தொடர்பு கொண்டு கூட்டணி தொடர்பாக சுமார் 1 மணி நேரம் பேச்சுவார்த்தை நடத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதையும் வாசிக்கலாமே...


நாளை மாசி மகம்: இல்லத்தில் தனம் பெருக இதை தானம் பண்ணுங்க!

விடாது துரத்திய விபத்து... தெலங்கானாவில் பெண் எம்எல்ஏ பலி!

அதிகாலையில் அதிர்ச்சி... முன்னாள் முதல்வர் காலமானார்!

லாட்டரியில் ரூ.1,00,00,000 பரிசு... பழநிக்கு பாதயாத்திரை சென்ற கேரள பக்தருக்கு அதிர்ஷ்டம்!

ராமேஸ்வரத்தில் மீனவர்கள் காலவரையற்ற உண்ணாவிரத போராட்டம் அறிவிப்பு!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in