போராட்டத்தில் உயிரிழந்த விவசாயி குடும்பத்துக்கு ரூ.1 கோடி நிவாரணம்: பஞ்சாப் முதல்வர் அறிவிப்பு!

பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான்
பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான்

ரப்பர் குண்டு தாக்குதலில் உயிரிழந்த இளம் விவசாயி சுபாகரன் சிங் குடும்பத்துக்கு ரூ.1 கோடி நிவாரணம், தங்கைக்கு அரசு வேலையும் வழங்குவதாக பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் அறிவித்துள்ளார்.

குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு சட்டப்பூர்வ அங்கீகாரம், விவசாய கடன் தள்ளுபடி, எம்.எஸ்.சுவாமிநாதன் ஆணைய குழு பரிந்துரைகளை அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தேசிய அளவில் ஏராளமான விவசாயிகள் சங்கத்தினர், விவசாயிகள் டெல்லி நோக்கி கடந்த 13ம் தேதி பேரணியை துவங்கினர்.

பஞ்சாப், ஹரியாணா, உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட பல்வேறு மாநில விவசாயிகள் இதில் பங்கேற்றுள்ளனர்.

இந்த விவசாயிகள் பஞ்சாப், ஹரியாணா எல்லைகளில் போலீஸார், பாதுகாப்புப் படையினரால் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளனர். இந்நிலையில் பஞ்சாபின் சங்க்ரூர் மாவட்டத்தில் உள்ள கானோரி எல்லையில், பேரணியில் பங்கேற்ற விவசாயி சுபாகரன் சிங் (21), போலீஸார் ரப்பர் குண்டு தாக்குதலில் உயிரிழந்தார்.

சுபாகரன் சிங்
சுபாகரன் சிங்

இதைத் தொடர்ந்து, விவசாயி சுபாகரன் சிங் குடும்பத்துக்கு ரூ.1 கோடி நிவாரணமும், அவரது சகோதரிக்கு அரசு வேலையும் வழங்குவதாக பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் அறிவித்துள்ளார். மேலும், இந்த விவகாரத்தில் உரிய சட்ட நடவடிக்கையும் எடுக்கப்படும் எனவும் பஞ்சாப் முதல்வர் அறிவித்துள்ளார்.

விவசாயி உயிரிழப்புக்கு துக்கம் அனுசரிக்கும் வகையில் இன்று 'கருப்பு வெள்ளிக்கிழமை' போராட்டமாக கடைப்பிடிக்கப்படும் என பாரதிய கிசான் யூனியன் (பிகேயூ) தலைவர் ராகேஷ் திகாயத் அறிவித்துள்ளார்.

அதே நேரத்தில், போராட்டங்களின் போது அரசு மற்றும் தனியார் சொத்துக்களுக்கு ஏதேனும் சேதம் ஏற்பட்டால், போராட்டக்காரர்களின் சொத்துக்களை முடக்கி, அவர்களின் வங்கிக் கணக்குகளை பறிமுதல் செய்வதன் மூலம் ஈடுசெய்யப்படும் என ஹரியானா காவல்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

இதையும் வாசிக்கலாமே...


நாளை மாசி மகம்: இல்லத்தில் தனம் பெருக இதை தானம் பண்ணுங்க!

விடாது துரத்திய விபத்து... தெலங்கானாவில் பெண் எம்எல்ஏ பலி!

அதிகாலையில் அதிர்ச்சி... முன்னாள் முதல்வர் காலமானார்!

லாட்டரியில் ரூ.1,00,00,000 பரிசு... பழநிக்கு பாதயாத்திரை சென்ற கேரள பக்தருக்கு அதிர்ஷ்டம்!

ராமேஸ்வரத்தில் மீனவர்கள் காலவரையற்ற உண்ணாவிரத போராட்டம் அறிவிப்பு!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in