பிரதமர் நரேந்திர மோடியின் சொத்து மதிப்பு அதிகரிப்பு... ஆனால், சொந்த வாகனம் இல்லை!

பிரதமர் நரேந்திர மோடி
பிரதமர் நரேந்திர மோடி

பிரதமர் நரேந்திர மோடியின் சொத்து மதிப்பு ரூ.3.02 கோடி என இன்று அவர் தாக்கல் செய்த பிரமாண பிரமாண பத்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. கடந்த தேர்தலை விட சொத்து மதிப்பு அதிகமாகியுள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உத்தரப்பிரதேச மாநிலம், வாரணாசி மக்களவைத் தொகுதியில் தொகுதியில் போட்டியிட பிரதமர் நரேந்திர மோடி இன்று தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.

வேட்புமனு தாக்கல் செய்த மோடி
வேட்புமனு தாக்கல் செய்த மோடி

அப்போது பாமக தலைவர் அன்புமணி, ஜி.கே.வாசன் உள்ளிட்ட தேசிய ஜனநாயக கூட்டணிக் கட்சித்தலைவர் பிரதமர் மோடியைச் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர். வேட்புமனு தாக்கலுக்கு முன் வாரணாசி கால பைரவர் கோயிலில் பிரதமர் மோடி வழிபாடு செய்தார்.

வேட்புமனு தாக்கல் செய்த போது தனது சொத்து விவரங்கள் அடங்கிய பிரமாணப்பத்திரத்தையும் பிரதமர் நரேந்திர மோடி தாக்கல் செய்துள்ளார். இதில் மோடியின் சொத்து மதிப்பு எவ்வளவு என்பது பற்றிய விவரம் வெளியாகியுள்ளது.

பிரதமர் மோடியின் சொத்து மதிப்பு ரூ.3.02 கோடி என பிரமாணப் பத்திரத்தில் கூறப்பட்டுள்ளது. மேலும் பிரதமர் மோடியிடம் சொந்தமாக வாகனம் இல்லை என்றும், மோடியின் பெயரில் அசையா சொத்துக்கள் எதுவும் இல்லை என்றும் பிரமாணப் பத்திரத்தில் குறிப்பிட்டுள்ளார்.

வேட்புமனு தாக்கல் செய்த மோடி
வேட்புமனு தாக்கல் செய்த மோடி

தனது வங்கிக் கணக்கில் நிரந்தர வைப்புத் தொகையாக ரூ.2.85 கோடியை அவர் டெபாசிட் செய்துள்ளார். 2019 தேர்தலை விட இந்த முறை பிரதமர் மோடியின் சொத்து மதிப்பு சுமார் ரூ.50 லட்சம் உயர்ந்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதாவது கடந்த தேர்தலில் 2.51 கோடியாக இருந்த சொத்து மதிப்பு தற்போது ரூ.3.02 கோடியாக உயர்ந்துள்ளது. மேலும் ரூ.2.67 லட்சம் மதிப்புள்ள 4 தங்க மோதிரங்கள் வைத்திருப்பதாகவும் வேட்பு மனுவில் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

இதையும் வாசிக்கலாமே...

விடுதலைப்புலிகள் அமைப்பின் மீதான தடை மேலும் 5 ஆண்டுகளுக்கு நீட்டிப்பு... மத்திய அறிவிப்பு!

கர்ப்பிணிகளுக்கான ஃபேஷன் ஷோ... ரேம்ப் வாக்கில் கலக்கிய அமலாபால்!

தனுஷை விட ஐஸ்வர்யா மோசம்; முன்னாள் கணவர் ஓரினச்சேர்க்கையாளர் ...பகீர் கிளப்பும் பாடகி சுசித்ரா!

அதிகரிக்கும் வெயில்; காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை திறந்தவெளி கட்டுமானப் பணிகளுக்கு கட்டுப்பாடு!

கோவையில் பரபரப்பு... பாலியல் வழக்கில் கைதான சிறுவன் தற்கொலை முயற்சி!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in