கணவன், 4 வயது மகனை விட்டு விட்டு காதலனுடன் எஸ்கேப்பான கர்ப்பிணி... எல்லை மீறிய இன்ஸ்டா பழக்கம்!

கர்ப்பிணி
கர்ப்பிணி

கோழிக்கோட்டில் தன் கணவரையும், 4 வயது மகனையும் விட்டு விட்டு காதலனுடன் நாட்டை விட்டு கர்ப்பிணி பெண் தப்பிக்க முயற்சி செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கேரள மாநிலம், கோழிக்கோடு மாவட்டம் தாமரச்சேரி பகுதியைச் சேர்ந்த 24 வயது பெண்ணுக்கு கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இந்த தம்பதியருக்கு 4 வயதில் குழந்தை உள்ளது. மேலும், அந்த பெண் தற்போது இரண்டு மாத கர்ப்பிணியாக உள்ளார்.

இன்ஸ்டாகிராம்
இன்ஸ்டாகிராம்

இந்த நிலையில், அந்த பெண்ணுக்கு இன்ஸ்டாகிராம் மூலம் வடகரையைச் சேர்ந்த இளைஞருடன் தொடர்பு ஏற்பட்டது. இந்த பழக்கம் தகாத உறவானது. இந்த நிலையில், கடந்த 10-ம் தேதி மாலை காருடன் வந்த அந்த இளைஞர், கர்ப்பிணியாக உள்ள அந்த பெண்ணை அழைத்துச் சென்று விட்டார். அவர்கள் இருவரும் வெளிநாடு தப்பிச் சென்றதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், தனது மனைவியை 10-ம் தேதி முதல் காணவில்லை என்று அவரது கணவர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரில், வீட்டின் அருகில் காரில் ஏறிச் சென்ற தனது மனைவி, அதன்பின் வீடு திரும்பவில்லை என்று புகாரில் கூறியிருந்தார். இந்த சம்பவம் குறித்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

கேரளா போலீஸ்
கேரளா போலீஸ்

இதற்கிடையே வடகரையைச் சேர்ந்த இளைஞருடன், கர்ப்பிணி பெண் காவல் நிலையத்தில் ஆஜரானார். இதையடுத்து அவரது கணவர் மற்றும் உறவினர்கள் காவல் நிலையம் வரவழைக்கப்பட்டனர். அப்போது தன் காதலுடன் செல்வதாகவும், கணவருடன் இருக்கப் பிடிக்கவில்லை என்று அவரது மனைவி கூறினார்.

பின்னர் அந்த பெண் மாஜிஸ்திரேட் முன் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது அவர் காதலனுடன் ஆஜர்படுத்தப்பட்டார். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணைக்குப் பின் அவர்கள் இருவரும் விடுவிக்கப்பட்டனர். இந்த சம்பவம் கோழிக்கோட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் வாசிக்கலாமே...
ஐபிஎல் சூதாட்ட கும்பல் சிக்கியது: இருவர் கைது; ரூ.2.47 லட்சம் பறிமுதல்!

வாக்களித்துவிட்டு ஊர் திரும்பியவர்களுக்கு நேர்ந்த சோகம்... விபத்தில் 6 பேர் பலி!

ஒருதலைக் காதலால் கர்நாடகாவில் அடுத்த பயங்கரம்... வீடு புகுந்து இளம்பெண் குத்திக் கொலை!

காதலனுக்காக வீட்டின் உரிமையாளரை கொலை செய்த இளம்பெண்... பெங்களூருவில் பரபரப்பு!

அதிர்ச்சி... நடிகை ராக்கி சாவந்த் மருத்துவமனையில் அனுமதி!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in