எம்.பி-க்களுக்கு மதிய விருந்து அளித்த பிரதமர் நரேந்திர மோடி.
எம்.பி-க்களுக்கு மதிய விருந்து அளித்த பிரதமர் நரேந்திர மோடி.

பிரதமர் நரேந்திர மோடி அளித்த சர்ப்ரைஸ்... 8 எம்.பிக்களுக்கு திடீர் விருந்து!

மத்திய அமைச்சர் எல்.முருகன் உட்பட பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த 8 எம்.பிக்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி மதிய விருந்து அளித்தார்.

எம்.பி-க்களுக்கு மதிய விருந்து அளித்த பிரதமர் மோடி
எம்.பி-க்களுக்கு மதிய விருந்து அளித்த பிரதமர் மோடி

நாடாளுமன்ற கூட்டத்தொடர் பரபரப்புடன் நடைபெற்று வருகிறது. இதில் மத்திய அரசும் எதிர்க்கட்சிகளும் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டு வருகின்றன. இந்நிலையில், இன்று பிற்பகல் மத்திய அமைச்சர் எல்.முருகன் உட்பட 8 எம்.பி-க்களுக்கு பிரதமர் சர்ப்ரைஸ் விருந்து அளித்து அசத்தியுள்ளார். பிற்பகல் 2.30 மணிக்கு மோடி உணவு அருந்தும் போது, சில எம்.பி-க்களை தன்னுடன் உணவு அருந்த வருமாறு அழைப்பு விடுத்தார்.

எம்.பி-க்களுக்கு மதிய விருந்து அளித்த பிரதமர் மோடி
எம்.பி-க்களுக்கு மதிய விருந்து அளித்த பிரதமர் மோடி

நாடாளுமன்ற கட்டிடத்தில் உள்ள உணவகத்தில் நடந்த இந்த விருந்தில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், எம்.பி-க்கள் ஹீனா காவிட், பாங்னான் காக்னாக், ஜம்யங் ஷெரீங் நம்க்யால், தெலுங்கு தேசம் எம்.பி. ராம்மோகன் நாயுடு, பகுஜன் சமாஜ் எம்.பி. ரித்தேஷ் பாண்டே, பிஜு ஜனதா தள எம்.பி. சஸ்மித் பத்ரா ஆகியோர் பங்கேற்றனர்.

பிரதமர் எம்பிக்களுக்கு மதிய விருந்து
பிரதமர் எம்பிக்களுக்கு மதிய விருந்து

இந்த விருந்துக்குப் பிரதமர் அழைக்கும் போது, உங்களுக்குத் தண்டனை அளிக்க விரும்புகிறேன் வாருங்கள் என அழைத்துள்ளார். இதையடுத்து, அந்த 8 பேரும் செல்ல, லிப்டில் சென்ற பிறகே, பிரதமர் தங்களை உணவு அருந்த அழைத்துள்ளார் என்பதை உணர்ந்ததாக எம்.பிக்கள் தெரிவித்துள்ளனர். மேலும், அவர்களுக்குத் தனக்கு மிகவும் பிடித்தமான கிச்சடியைப் பரிமாறியுள்ளார்.

அப்போது, எல்லா நேரமும் நான் பிரதமராக இருக்க மாட்டேன் என கூறியதோடு, கொஞ்சம் நல்ல உணவைச் சாப்பிட வேண்டும் என விரும்பியதாகவும் எம்.பிக்களிடம் தெரிவித்துள்ளார். பிரதமருடன் உணவு அருந்தியது குறித்து சிறப்பான, நட்பான அனுபவம் என எம்.பிக்கள் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளனர்.

இதையும் வாசிக்கலாமே...


ரஜினி மகளை உசுப்பேற்றும் ரசிகர்கள்... ஐஸ்வர்யாவுக்கு தனி கொடி அறிமுகப்படுத்தி அலப்பறை!

அதிர்ச்சி... நேரலையில் சிவசேனா பிரமுகரை சுட்டுக்கொன்றுவிட்டு, கொலையாளியும் தற்கொலை!

ஒலிம்பிக் மெடலுடன் ஈபிள் டவர் பகுதியை எடுத்து செல்லலாம்... பிரான்ஸ் அசத்தல் அறிவிப்பு!

பகீர் வீடியோ... தியேட்டருக்குள் தீவைத்து கொண்டாடிய ரசிகர்கள்!

மின்வாரிய அதிகாரிகள் அலட்சியம்... கால்களை பறிகொடுத்த இளைஞர்!

x
காமதேனு
kamadenu.hindutamil.in