‘நாடு மாற்றத்தை நோக்கி நகர்கிறது’... 17வது மக்களவையின் கடைசி உரையில் பிரதமர் மோடி பெருமிதம்!

பிரதமர் மோடி
பிரதமர் மோடி

17வது மக்களவையின் கடைசி நாள் அமர்வில் உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, இந்த மக்களவையில் மேற்கொள்ளப்பட்ட சாதனைகளை பட்டியலிட்டார்.

பொதுத் தேர்தலுக்கு முன்னதாக 17வது மக்களவையின் கடைசி அமர்வு இன்றுடன் முடிவடைகிறது. இந்த அமர்வில் பிரதமர் நரேந்திர மோடி கடைசியாக பேசியதாவது, “17வது மக்களவை பல தலைமுறைகளின் காத்திருப்பை பூர்த்தி செய்துள்ளது. இந்த ஐந்து ஆண்டுகள் நாட்டில் சீர்திருத்தம், செயல்பாடு மற்றும் மாற்றம் தொடர்பானதாக அமைந்தது. பல சீர்திருத்தங்கள் முக்கிய திருப்பமாக இந்த ஆண்டில் நிகழ்ந்துள்ளன.
370-வது பிரிவை ரத்து செய்தல்,முத்தலாக்கிற்கு தடை ஆகியவை முதல் சிறப்புமிக்க ஜி-20 கூட்டத்தை நடத்துவது வரை பல பிரச்சினைகளில் நாடு மாற்றத்தை நோக்கி நகர்ந்து வருகிறது.

புதிய நாடாளுமன்றக் கட்டிடம்
புதிய நாடாளுமன்றக் கட்டிடம்

நாடாளுமன்றத்துக்கு புதிய கட்டிடம் தேவை என அனைவரும் கூறினர். ஆனால் அது குறித்து ஒருபோதும் முடிவு எடுக்கப்படவில்லை. நாங்கள் அதை முடிவு செய்தோம். அதன் காரணமாக நாம் இன்று புதிய நாடாளுமன்றத்தில் அமர்ந்திருக்கிறோம். திருநங்கைகளுக்கு பத்ம விருதுகளை வழங்கியுள்ளோம்.

பல தலைமுறையினர் ஒரே அரசியலமைப்பு பற்றி கனவு கண்டனர். 17வது மக்களவை, 370வது பிரிவை ரத்து செய்தது. அரசியலமைப்பை உருவாக்குவதில் பங்கு வகித்த மக்கள் இன்று நம்மை ஆசீர்வதித்திருக்க வேண்டும். காஷ்மீர் மக்கள் சமூக நீதியிலிருந்து வெகு தொலைவில் இருந்தனர். இன்று, நாங்கள் அதை அவர்களிடம் கொண்டு சென்றுள்ளோம்” இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

இதையும் வாசிக்கலாமே...


அடேயப்பா... தேர்தல் விளம்பரத்திற்கு ஒரே வருடத்தில் ரூ.432 கோடி செலவழித்த பாஜக!

ஆபரேஷன் தியேட்டரில் ப்ரீ-வெட்டிங் ஷூட்... அரசு மருத்துவர் டிஸ்மிஸ்!

ஹரிஹரனின் இசைக் கச்சேரியில் குளறுபடி... கூட்ட நெரிசலில் சிக்கி பலர் காயம்!

நடிகர் மிதுன் சக்கரவர்த்தி மருத்துவமனையில் அனுமதி!

அட கொடுமையே... மருத்துவமனையில் நோயாளிகள் முன்பாக நடனமாடி ‘ரீல்ஸ்’ வெளியிட்ட மாணவர்கள்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in