புதிய தேர்தல் ஆணையர் யார்? - பிரதமர் மோடி தலைமையிலான குழு நாளை கூடுகிறது!

பிரதமர் மோடி
பிரதமர் மோடி

புதிய தேர்தல் ஆணையரை தேர்வு செய்யும் தேர்வு குழு பிரதமர் மோடி தலைமையில் நாளை கூடுகிறது.

தேர்தல் ஆணையர் அனுப் சந்திர பாண்டே வரும் 14ம் தேதியுடன் ஓய்வுபெற உள்ளார். இதனால் 3 பேர் கொண்ட தேர்தல் குழுவில் ஒரு பதவி காலியாக உள்ளது.

இந்திய தேர்தல் ஆணையம்
இந்திய தேர்தல் ஆணையம்

தலைமைத் தேர்தல் ஆணையர் மற்றும் பிற தேர்தல் ஆணையர்கள் (நியமனம், சேவை நிலைமைகள் மற்றும் பதவிக் காலம்) சட்டத்தின் படி, சட்ட அமைச்சர் தலைமையிலான ஒரு தேடல் குழு மற்றும் இரண்டு மத்திய செயலாளர்கள் அடங்கிய குழு, பிரதமர் தலைமையிலான தேர்வுக் குழுவின் பரிசீலனைக்கு 5 வேட்பாளர்களை பட்டியலிடும்.

பிரதமரால் நியமிக்கப்பட்ட மத்திய அமைச்சர் மற்றும் மக்களவை காங்கிரஸ் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி ஆகியோர் தேர்வுக் குழுவின் உறுப்பினர்களாவர்.

தேடல் குழுவால் ஆரம்பத்தில் பட்டியலிடப்படாத வேட்பாளர்களை பரிசீலிக்கும் அதிகாரம் தேர்வுக் குழுவுக்கு உள்ளது. வரும் ஏப்ரல் - மே மாதங்களில் நடைபெறவிருக்கும் மக்களவைத் தேர்தல் அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தேர்தல் ஆணையர் நியமனம்
தேர்தல் ஆணையர் நியமனம்

இந்நிலையில் அனுப் சந்திர பாண்டே தனது 65வது வயதுடன் பதவியிலிருந்து ஓய்வுபெறுகிறார். புதிய சட்டம் இயற்றப்படுவதற்கு முன்பு, தலைமைத் தேர்தல் ஆணையர் மற்றும் தேர்தல் ஆணையர்களின் நியமனம், அரசாங்கத்தின் பரிந்துரையின் அடிப்படையில் குடியரசுத் தலைவரிடம் இருந்தது.

தற்போதைய நிலையில் அனுப் சந்திர பாண்டே, அருண் கோயல் ஆகியோர் தேர்தல் ஆணையராக பணியாற்றி வருகின்றனர். ராஜீவ் குமார் தலைமை தேர்தல் ஆணையராக உள்ளார்.

இதையும் வாசிக்கலாமே...

நடிகர் விஜய்க்கு ரஜினிகாந்த் திடீர் வாழ்த்து!

முன்கூட்டியே நடக்கிறது பல்கலைக்கழக செமஸ்டர் தேர்வுகள்... தேர்தலையொட்டி அரசு அறிவிப்பு!

பேரிடர் நிவாரண நிதி வழங்குவதில் பாரபட்சம்... மக்களவையில் ஆ.ராசா குற்றச்சாட்டு!

பட்டாசு ஆலையில் பயங்கர விபத்து; தீப்பிழம்பான நகரம்... 6 பேர் பலி, 60 பேர் படுகாயம்!

டெஸ்ட் போட்டி.... இந்திய கிரிக்கெட் அணி புதிய சாதனை!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in