பிரம்மோஸ் ஏவுகணைகள்
பிரம்மோஸ் ஏவுகணைகள்

இந்தியாவின் பிரம்மோஸ் ஏவுகணைகள்... இனி பிலிப்பைன்ஸ் வாயிலாக சீனாவை மிரட்டும்

இந்தியாவில் தயாரான பிரம்மோஸ் ஏவுகணைகளை பிலிப்பைன்ஸ் கொள்முதல் செய்துள்ளது. தென் சீனக்கடலில் சீனாவின் ஆதிக்கத்தை எதிர்கொள்ளும் வகையில், இந்தியாவின் பிரம்மோஸ் ஏவுகணைகள் பிலிப்பைன்ஸ் தேசத்துக்கு உதவ இருக்கின்றன.

பிரதமர் மோடி தேர்தல் பிரச்சாரக் கூட்ட மேடைகளில் எல்லாம் இந்த பிரம்மோஸ் புகழ் பாடிக்கொண்டிருக்கிறார். ”ஒரு காலத்தில் ஆயுதங்கள் மற்றும் போர்த்தளவாடங்களுக்காக அயல் நாடுகளில் கையேந்திக் கொண்டிருந்த இந்தியா, இன்று சொந்தமாக அவற்றை உற்பத்தி செய்கிறது. மேலும் அவற்றை அயல் நாடுகளுக்கு விற்கும் அளவுக்கும் முன்னேறி உள்ளது” என்ற மோடியின் பேச்சுக்கு உதாரணமாகி இருக்கிறது பிலிப்பைன்ஸ் செல்லும் பிரம்மோஸ் ஏவுகணைகள்.

பிலிப்பைன்ஸ் செல்லும் பிரம்மோஸ் ஏவுகணைகள்
பிலிப்பைன்ஸ் செல்லும் பிரம்மோஸ் ஏவுகணைகள்

இதற்காகாக அந்நாட்டுடன் 375 மில்லியன் டாலர் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, இந்தியா இன்றைய தினம் முதல் தொகுதி பிரம்மோஸ் சூப்பர்சோனிக் க்ரூஸ் ஏவுகணைகளை பிலிப்பைன்ஸுக்கு வழங்கி உள்ளது. தென் சீனக் கடலில் சீனாவின் அதிகரித்து வரும் ராணுவ ஆக்கிரமிப்பு குறித்த உலகளாவிய கவலைகளுக்கு மத்தியில், இந்தியா பிலிப்பைன்ஸ் உடனான தனது உறவுகளை வலுப்படுத்தி உள்ளது. அதற்கு பிரம்மோஸ் ஏவுகணைகள் ஒப்பந்தம் வழி செய்துள்ளது.

பிரம்மோஸ் ஏவுகணை வழங்கப்பட்டதை அடுத்து, பிலிப்பைன்ஸ் கடற்படை அதிகாரிகளுக்கு இந்திய அதிகாரிகள் இனிப்புகள் வழங்கினர். பிலிப்பைன்ஸ் தேசத்திலும் பிரம்மோஸ் வருகையை முன்னிட்டு இனிப்புகள் பரிமாறி மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர். பிலிப்பைன்ஸ் ராணுவமும் இது தொடர்பாக மகிழ்ச்சி தெரிவித்துள்ளது. இந்த இந்திய ஏவுகணைகள், சீனாவின் ஆக்கிரமிப்பை எதிர்கொள்ள உதவும் என்றும் பிலிப்பைன்ஸ் நம்புகிறது.

இந்திய விமானப் படையின் ராணுவப் போக்குவரத்து விமானம், பிரம்மோஸ் ஏவுகணைகளை சுமந்து பிலிப்பைன்ஸ் நாட்டு கடல் படைகளுக்கு கொண்டு சென்றன. பிரம்மோஸ் ஏவுகணையை இந்தியா ஏற்றுமதி செய்வது இதுவே முதல் முறையாகும். பிலிப்பைன்ஸை அடுத்து அர்ஜென்டினா உள்ளிட்ட ஒரு சில நாடுகளும் இந்தியாவின் பிரம்மோஸ் ஏவுகணைகளை வாங்க ஆர்வம் காட்டி வருகின்றன.

இந்திய-ரஷ்ய கூட்டு படைப்பான பிரம்மோஸ் சூப்பர்சோனிக் க்ரூஸ் ஏவுகணைகளை நீர்மூழ்கிகள், கப்பல்கள், விமானங்கள் மற்றும் தரை தளங்களில் இருந்தும் ஏவலாம். இந்த ஏவுகணைகள் ஒலியை விட கிட்டத்தட்ட மூன்று மடங்கு வேகத்தில் பாய்ந்து இலக்கைத் தாக்கும் வல்லமை படைத்தவை.

ஹைட்ரோகார்பன்களின் மிகப்பெரிய ஆதாரமான தென் சீனக் கடல் முழுவதும் சீனா உரிமை கோருவது குறித்து உலகளாவிய கவலைகள் அதிகரித்து வருகின்றன. சீனாவின் இந்த அத்துமீறலால் பிலிப்பைன்ஸ் மட்டுமன்றி வியட்நாம், புருனே உட்பட பிராந்தியத்தில் உள்ள பல நாடுகளும் பாதிப்புகளுக்கு ஆளாவதாக புலம்பி வருகின்றன.

இதையும் வாசிக்கலாமே...


#Election2024: ரஜினி முதல் விஜய் வரை... வாக்களித்த பிரபலங்கள் லிஸ்ட்!

கோவையில் பரபரப்பு... திமுக நிர்வாகியை குண்டுக்கட்டாக தூக்கிச்சென்ற போலீஸார்!

பள்ளியில் பாடம் நடத்தாமல் ஃபேஷியல் செய்த தலைமை ஆசிரியை... வைரலாகும் வீடியோ!

ஜோதிகா மிஸ்ஸிங்... குடும்பத்துடன் வாக்களிக்க வந்த நடிகர்கள் சிவக்குமார், சூர்யா, கார்த்தி!

பொள்ளாச்சி, கள்ளக்குறிச்சியில் ஹை ஸ்பீடு... ஒரு மணி நிலவரப்படி 46 சதவீத வாக்குப் பதிவு!

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in