காங்கிரஸ் எம்எல்ஏக்கள் அமளியால் ஆளுநர் திணறல்... பஞ்சாப் சட்டப் பேரவையில் பரபரப்பு!

பஞ்சாப் சட்டப் பேரவையில் உரையை வாசிக்கும் ஆளுநர்
பஞ்சாப் சட்டப் பேரவையில் உரையை வாசிக்கும் ஆளுநர்

பஞ்சாப் சட்டப் பேரவையில் விவசாயிகள் பிரச்சினையை எழுப்பி, ஆளுநர் உரையை வாசிக்க விடாமல் எதிர்க்கட்சியான காங்கிரஸ் எம்எல்ஏ-க்கள் அமளியில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

பஞ்சாப் சட்டப் பேரவையில் பட்ஜெட் கூட்டத் தொடர் இன்று தொடங்கியது. அப்போது பேரவையில் அம்மாநில ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் தனது உரையை வாசிக்கத் தொடங்கினார். உடனடியாக, எதிர்க்கட்சியான காங்கிரஸ் எம்எல்ஏ-க்கள் எழுந்து, அவையில் விவசாயிகளின் பிரச்சினைகளை எழுப்பி கோஷம் போட்டனர். இந்த சலசலப்புக்கு மத்தியில், ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் தனது உரையிலிருந்து சில வரிகளை மட்டும் வாசித்தார். பின்னர் சலசலப்பு அதிகரித்ததால், மீதமுள்ளவற்றை வாசித்ததாக கருத வேண்டும் என கூறினார்.

பேரவையில், பஞ்சாப் காங்கிரஸ் தலைவர் அமரீந்தர் சிங் ராஜா வாரிங், பேசுகையில், "விவசாயிகளின் போராட்டத்தில், ஹரியாணா பாதுகாப்புப் படையினர், போலீஸார் தாக்குதலில் உயிரிழந்த இளம் விவசாயி சுப்கரன் சிங்குக்கு ஆளுநர் அஞ்சலி செலுத்தினால் நன்றாக இருக்கும்" என்றார்.

பஞ்சாப் சட்டப் பேரவை கூட்டம்
பஞ்சாப் சட்டப் பேரவை கூட்டம்

எதிர்க்கட்சித் தலைவர் பிரதாப் சிங் பஜ்வா பேசுகையில், "பஞ்சாப் மாநிலத்துடனான எல்லையை ஹரியாணா சீல் வைத்துள்ளது. உங்களால் உங்கள் விவசாயிகளைப் பாதுகாக்க முடியவில்லை" என்றார். தொடர்ந்து, விவசாயிகளின் பிரச்சினைகளை முதலில் விவாதிக்க வேண்டும் என காங்கிரஸ் உறுப்பினர்கள் வலியுறுத்தினர்.

இதற்குப் பதிலளித்த ஆளுநர் பன்வாரிலால், "அவை நிகழ்ச்சி நிரல் படி, இந்த விஷயங்களைப் பற்றி விவாதிக்க உங்களுக்கு போதுமான நேரம் இருக்கிறது. நான் எனது உரையை வாசிக்க வேண்டும் . எனது உரைக்குப் பிறகு, நீங்கள் எந்தப் பிரச்சினையையும் எழுப்பலாம்” என்றார்.

விவசாயிகள் பிரச்சினையை முன்வைத்து, பஞ்சாப் பேரவையில் ஆளுநர் உரையை வாசிக்க விடாமல் காங்கிரஸ் முடக்கியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் வாசிக்கலாமே...

பொதுத்தேர்வில் வெற்றிக்கான முக்கிய குறிப்புகள்!

70 கோடி வெச்சிருந்தா வரலாம்... வேட்பாளர்களுக்கு அதிமுக விதிக்கும் நிபந்தனை!

நள்ளிரவில் மோடி வீட்டில் நடந்த கூட்டம்... 550 வேட்பாளர்கள் பட்டியல் பரிசீலனை!

டாக்காவில் நள்ளிரவில் நடந்த கோரம்... அடுக்குமாடிக் கட்டிடத்தில் பயங்கர தீ: 43 பேர் உடல் கருகி பலி!

ஆபாச வீடியோ மிரட்டல் விவகாரத்தில் திமுகவுக்குத் தொடர்பா?: தருமபுரம் ஆதீனம் விளக்கம்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in