கர்நாடகாவை கதற வைக்கும் குரங்கு காய்ச்சல்... சிக்கமகளூருவில் மூதாட்டி பலி!

குரங்கு காய்ச்சலால் உயிரிழந்த ரத்னா.
குரங்கு காய்ச்சலால் உயிரிழந்த ரத்னா.

கர்நாடகாவில் குரங்கு காய்ச்சல் வேகமாக பரவி வரும் நிலையில் சிக்கமகளூருவில் மூதாட்டி ஒருவர் உயிரிழந்துள்ளார். இதன் மூலம் அப்பகுதியில் பலி எண்ணிக்கை நான்காக அதிகரித்துள்ளது.

கர்நாடகா மாநிலத்தில் கடந்த பிப்ரவரி மாதத்தில் இருந்து குரங்கு காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. வனத்தில் இருந்து அதிகம் பரவும் இந்த நோயால் முதியோர் அதிகம் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதனால் திடீர் காய்ச்சல், உடலில் கடுமையான தசைவலி மற்றும் தலைவலி ஆகியவை ஏற்படுகிறது. குரங்கு காய்ச்சல் அறிகுறிகளுக்கேற்ப சிகிச்சை அளிக்கப்படுகிறது.

கர்நாடக மாநிலத்தில்12 KFD என்ற குரங்கு காய்ச்சல் நான்கு மாவட்டங்களில் இதுவரை கண்டறியப்பட்டுள்ளது. இதையொட்டி மாநிலத்தில் 8,556 பேருக்கு சோதனை நடத்தப்பட்டது. இதில் 214 பேர் குரங்கு காய்ச்சல் நோயால் பாதிக்கப்பட்டது தெரிய வந்தது. இதில் 148 பேர் குணமடைந்துள்ளனர். இதில் 9 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்த நிலையில் கொப்பா, என்.ஆர்.புரா, சிருங்கேரி தாலுகாக்களில் முதியவர்கள் பலர் குரங்கு காய்ச்சல் நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில், சிக்கமகளூருவில் உள்ள கொப்பா தாலுகா பிந்தரவல்லி கிராமத்தைச் சேர்ந்த ரத்னா(68) என்ற மூதாட்டி இன்று உயிரிழந்துள்ளார். கடும் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு மணிப்பாலில் உள்ள தனியார் மருத்துவமனையில் ரத்னா அனுமதிக்கப்பட்டிருந்தார்.

ஆனால், அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவருக்கு நடந்த ரத்தப் பரிசோதனையில் குரங்கு காய்ச்சல் நோய் இருந்தது உறுதி செய்யப்பட்டது. இதன் மூலம் சிக்கமகளூருவில் குரங்கு காய்ச்சலால் பலியானோர் எண்ணிக்கை நான்காக அதிகரித்துள்ளது அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் வாசிக்கலாமே...

தூத்துக்குடியில் கதறியழுத மூதாட்டி... கண்ணீரைத் துடைக்க முதல்வர் ஸ்டாலின் செய்த காரியம்!

எங்க தொகுதிக்கு என்னதான் ஆச்சு?... கலங்கும் மயிலாடுதுறை காங்கிரஸ்!

அனல் பறக்கும் தூத்துக்குடி... இன்று ஒரே நாளில் மு.க.ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமி பிரசாரம்!

தேச தந்தையை பாதுகாக்க நன்கொடை தந்தை என்ன செய்வார்? பாஜக மீது காங்கிரஸ் தாக்கு

அநியாயம் பண்ணாதீங்க...விஜய் ரசிகர்களிடம் கதறிய இயக்குநர் வெங்கட்பிரபு!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in