பெட்ரோல், டீசல் விலை அதிரடியாக குறைகிறது... மத்திய அரசு முக்கிய முடிவு!

பெட்ரோல், டீசல் விலை
பெட்ரோல், டீசல் விலை

ரூ.5 முதல் ரூ.10 வரை பெட்ரோல், டீசல் விலையை குறைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

பெட்ரோல், டீசல் விலை
பெட்ரோல், டீசல் விலை

இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை சர்வதேச சந்தைக்கு ஏற்ப நிர்ணயம் செய்யப்பட்டு வருகிறது. இதன் மூலம் எண்ணெய் நிறுவனங்கள் நஷ்டத்தில் இருந்து மீண்டன. இந்நிலையில், பணவீக்கத்தை கட்டுப்படுத்தவும், 2024ம் ஆண்டு தேர்தலை கருத்தில் கொண்டு பெட்ரோல், டீசல் விலையை அதிரடியாக குறைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

கடந்த 2022-ம் ஆண்டு தீபாவளி நேரத்தில் மத்திய அரசு கச்சா எண்ணெய் மீதான சுங்க வரியை கணிசமாக குறைத்தது. இதன் மூலம் பெட்ரோல் - டீசல் விலையும் வெகுவாக குறைந்தது.

பெட்ரோல், டீசல் விலை
பெட்ரோல், டீசல் விலை

அதைத்தொடர்ந்து, நாடு முழுவதும் பல மாநில தேர்தல் நடைபெற்ற நிலையில், கடந்த 600 நாட்களுக்கும் மேலாக பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாற்றமும் இல்லாமல் நீடித்து வருகிறது. இந்நிலையில், இந்திய எண்ணெய் நிறுவனங்களுக்கு பெட்ரோல்-டீசல் விற்பனை மூலம் கடந்த காலாண்டில் ரூ.75 ஆயிரம் கோடி லாபம் கிடைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதுதொடர்பான அறிக்கையை அடுத்த வாரம் எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட உள்ளதாகவும் கூறப்படுகிறது.

பெட்ரோல், டீசல் விலை
பெட்ரோல், டீசல் விலை

இதையடுத்து, தங்களது லாபத்தில் ஒரு பகுதியை வாடிக்கையாளர்களுக்கு சுமையை குறைக்கும் வகையில் வழங்குவதற்கு இந்திய எண்ணெய் நிறுவனங்கள் முடிவு செய்துள்ளன. அதன்படி பெட்ரோல்-டீசல் விலைகளை லிட்டருக்கு ரூ.5 முதல் ரூ.10 வரை குறைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக எண்ணெய் நிறுவனங்கள் தொடர்ந்து ஆலோசனையில் ஈடுபட்டுள்ளன.

அடுத்த மாதம் முதல் விலை குறைப்பு அமலுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த விலை குறைப்பு காரணமாக பண வீக்கம் கட்டுப்படுத்தப்படும். மேலும் மக்களவைத் தேர்தலுக்கு இந்த விலை குறைப்பு மிகப்பெரிய அளவில் கை கொடுக்கும் என்று மத்திய அரசு திட்டமிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் வாசிக்கலாமே...

வரலாறு படைத்தார் பிரக்ஞானந்தா... விஸ்வநாதன் ஆனந்தை முந்தி தரவரிசையில் முதலிடம்!

காதலரை அறிமுகம் செய்த நடிகை சாய் பல்லவியின் தங்கை... குவியும் வாழ்த்துக்கள்!

சோகம்...மகன் தற்கொலை செய்த 13-வது நாளில் தந்தையும் தூக்கிட்டு தற்கொலை!

அரசு மருத்துவமனையில் உயிரிழந்த பிளஸ் 2 மாணவி... தவறனான சிகிச்சை காரணமா?

அதிர்ச்சி...சிராவயல் மஞ்சுவிரட்டில் 13 வயது சிறுவன் பலி!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in