அதிர்ச்சி...சிராவயல் மஞ்சுவிரட்டில் 13 வயது சிறுவன் பலி!

சிராவயல் மஞ்சுவிரட்டு
சிராவயல் மஞ்சுவிரட்டு

சிவகங்கை மாவட்டம், சிராவயலில் இன்று நடைபெற்ற மஞ்சுவிரட்டில் மாடு முட்டி 13 வயது சிறுவன் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சடலம்
சடலம்

தை பிறந்தது முதல் இன்று மூன்றாவது நாளாக தமிழ்நாட்டின் பல பகுதிகளில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெற்று வருகின்றன. அலங்காநல்லூர் எப்படி ஜல்லிக்கட்டுக்கு பெயர் போனதோ,  அதேபோல மஞ்சுவிரட்டுக்கு சிவகங்கை மாவட்டம், சிராவயல் மிகவும் பெயர் பெற்றது.

ஆண்டுதோறும்  தை மூன்றாம் நாள் நடத்தப்படும் சிராவயல் மஞ்சுவிரட்டு போட்டி  இன்று காலை  தொடங்கியது. அதையொட்டி  முதலில் அக்கிராமத்தில் உள்ள  பெரியநாயகி அம்மன், தேனாட்சி அம்மன் கோயில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது. கிராமமக்கள் மேளதாளத்துடன் மஞ்சுவிரட்டு தொழுவிற்கு வந்தனர். தொழுவில் இருந்த மாடுகளுக்கு வேட்டி, துண்டு அணிவித்து மரியாதை செய்தனர்.

மஞ்சுவிரட்டு
மஞ்சுவிரட்டு

அதன்பின் முதலில் கோயில் காளைகள் அவிழ்த்து விடப்பட்டது.  பின்னர்  மஞ்சுவிரட்டு தொடங்கியது. காளைகள் ஒவ்வொன்றாக அவிழ்த்து விடப்பட்டன. இதனைக் காண ஏராளமான பொதுமக்கள் திரண்டு வந்துள்ளனர். 

இந்த போட்டியில் 271 காளைகள் பங்கேற்றுள்ளன. 81 மாடுபிடி வீரர்கள் இந்த விளையாட்டில் பங்கேற்றுள்ளனர். சுமார் 1,000 போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். நல்ல முறையில் நடந்து கொண்டிருந்த மஞ்சுவிரட்டில் எதிர்பாராத விதமாக அசம்பாவித சம்பவம் நடந்தது.

வலையப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த சிறுவன் பாஸ்கர் (13) தனது நண்பர்களுடன் மஞ்சுவிரட்டு காண்பதற்காக  வந்திருந்தான். அப்போது மஞ்சுவிரட்டில் அவிழ்த்து விடப்பட்ட காளை  ஒன்று அவ்வழியாக ஓடிவந்தபோது அங்கிருந்த சிறுவன் பாஸ்கரை முட்டியது. இதில் நெஞ்சுப் பகுதியில் காயம் அடைந்த பாஸ்கர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.  

சிவகங்கை மருத்துவமனைக்கு சிறுவனின் உடல் கொண்டு செல்லப்பட்டுள்ளது. மஞ்சுவிரட்டு காண வந்த சிறுவன் மாடு முட்டி பலியாகியுள்ள சம்பவம் சிராவயல் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் வாசிக்கலாமே...

புகழ் குன்றா பொன்மனச் செம்மல் |எம்.ஜி.ஆர்., பிறந்தநாள் ஸ்பெஷல்!

உலகப்புகழ் பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு புகைப்படங்கள்!

ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் ட்விட்டர் பக்கம் முடக்கம்!

உலகப்புகழ் பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு... அமைச்சர் உதயநிதி தொடங்கி வைத்தார்!

கலித்தொகையில் இருக்கிறது ஜல்லிக்கட்டு... அமைச்சர் நிர்மலா சீதாராமன் பெருமிதம்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in