மிரட்டும் 'மிதிலி' புயல்: 9 துறைமுகங்களுக்கு வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

புயல்
புயல்

வடமேற்கு வங்கக்கடலில் ’மிதிலி’ புயல் உருவானதை குறிக்கும் வகையில் சென்னை, கடலூர் உள்ளிட்ட 9 மாவட்டங்களில் உள்ள துறைமுகங்களால் 2ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றிட வேண்டுமென சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது.

சென்னை வானிலை ஆய்வு மையம்
சென்னை வானிலை ஆய்வு மையம்

மத்திய மேற்கு வங்கக் கடலில் நிலைக் கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக வலுபெற்றது. இது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவே வலுவிழந்து வரும் 18-ம் தேதி வங்கதேசத்தில் மோங்லா- கோபுபரா இடையே கரையைக் கடக்கும் என இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில், வடமேற்கு வங்கக்கடலில் 'மிதிலி' புயல் உருவானதை குறிக்கும் வகையில் சென்னை, கடலூர், நாகப்பட்டினம், எண்ணூர், காட்டுப்பள்ளி, புதுச்சேரி, காரைக்கால், பாம்பன், தூத்துக்குடி ஆகிய 9 துறைமுகங்களில் 2-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றிட வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது.

ஏற்கெனவே அனைத்து துறை முகங்களிலும் புயல் உருவாகிறது என மீனவர்களுக்கு எச்சரிக்கைவிடும் வகையில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. அதேவேளையில் வடமேற்கு வங்கக்கடல் பகுதியில் மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்ல வேண்டாம் என சென்னை வானிலை ஆய்வு மையம் வலியுறுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் வாசிக்கலாமே...

HBD Geminiganesan|தமிழ் சினிமாவின் காதல் மன்னன்... ‘ஜெமினி கணேசன்’ பிறந்தநாள் ஸ்பெஷல்!

HBD Roja|ஆந்திர அரசியலின் பீனிக்ஸ் பறவை நடிகை ரோஜா பிறந்தநாள் ஸ்பெஷல்!

இன்று வங்கக்கடலில் உருவாகிறது 'மிதிலி' புயல்... வானிலை மையம் எச்சரிக்கை!

அதிர்ச்சி அறிவிப்பு: டெல்லி செல்லும் தென்மாவட்ட ரயில்கள் முழுமையாக ரத்து!

அதிர்ச்சி: பயிற்சியின் போது மாரடைப்பால் 30 வயது விமானி உயிரிழப்பு!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in