யோகி ஆதித்யநாத்
யோகி ஆதித்யநாத்

டீப்ஃபேக் வீடியோ... யோகி ஆதித்யநாத்தும் சிக்கினார்!

“இணையத்தின் வழியே மருந்துகளை வாங்குவோரை கடவுள் ஆசிர்வதிப்பார்” என உத்தரபிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் பேசுவது போன்ற டீப்ஃபேக் வீடியோ இணையத்தில் வெளியாகி உள்ளது.

இணையத்தின் தேவை நாளுக்கு நாள் அதிகரித்துவிட்டது. முதலில், பேசுவதற்காக, அதாவது ஒருவரை ஒருவர் எளிதில் தொடர்புகொள்வதற்காக தொடங்கப்பட்ட சேவைகள் நாளடைவில் போட்டோக்களை, வீடியோக்களை அனுப்பும் அளவுக்கு வளர்ந்துவிட்டது. இதனால் இதன் சாதக பாதகங்களும் நாளுக்கு நாள் அதிகரித்துவிட்டது.

நமது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை நமக்கு தெரிந்தவருக்கு அனுப்பும் போது, அது சில நேரங்களில் திருடப்பட்டு தவறாக சித்தரிக்கபடுகிறது. இதுகுறித்த குற்றங்களை தடுக்க சைபர் க்ரைம் போலீஸார் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். ஆனாலும் சைபர் குற்றங்கள் அதிகரித்த வண்ணம் தான் உள்ளன.

ராஷ்மிகாவின் டீப் ஃபேக்
ராஷ்மிகாவின் டீப் ஃபேக்

இந்த ரூட்டில் தற்போது டீப் ஃபேக் வீடியோக்கள் பிரபலங்களை அச்சுறுத்தி வருகின்றன. நடிகர்கள், அரசியல் பிரபலங்கள், விளையாட்டு வீரர்கள் ஆகியோரின் முகத்தை வைத்து கற்பனையில் பல ஏஐ புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் வெளியாகின்றன. அண்மையில் ‘ஜெயிலர்’ படத்தில் இடம்பெற்ற ‘காவாலா’ பாடலுக்கு தமன்னா ஆடிய ஒரு ரீல்ஸ் வீடியோவில் சிம்ரனின் முகத்தை வைத்து ‘டீப் ஃபேக்’ வீடியோ தத்ரூபமாக உருவாக்கப்பட்டது.

நடிகை கஜோல், சச்சின் டெண்டுல்கரின் மகள் சாரா டெண்டுல்கர் ஆகியோரின் டீப்ஃபேக் படங்களும் இணையத்தில் வைரலாகின. வில்லங்க வீடியோக்கள் மட்டுமின்றி பல்வேறு தமிழ் பாடல்களை பிரதமர் மோடி பாடுவது போன்ற வீடியோக்களும் வெளியாகின.

இந்த நிலையில், உத்தர பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் பேசும் வீடியோ ஒன்று தற்போது வெளியாகி உள்ளது. அதில், அவர், சர்க்கரை நோய் பாதிப்புக்கான மருந்துகளை விளம்பரப்படுத்துவது போன்ற காட்சிகள் உள்ளன.

41 விநாடிகள் ஓடும் அந்த வீடியோவில், “சர்க்கரை நோய்க்கான மருந்து, இந்திய விஞ்ஞானிகளால் உருவாக்கப்பட்டு உள்ளது. இதனை வலைதளம் வழியே வாங்குபவர்களை கடவுள் கவுரவிப்பார்” என்று ஆதித்யநாத் பேசுவது போல் உள்ளது.

இதுகுறித்து உத்தரபிரதேச மாநில போலீஸார் வழக்குப் பதிவுசெய்து விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில், இணையத்தில் இருந்து அந்த வீடியோ நீக்கப்பட்டுள்ளது.

இதையும் வாசிக்கலாமே...

பாஜக அமைச்சரவை திடீர் ராஜினாமா... ஹரியாணாவில் பரபரப்பு!

ஷாக்... பர்தா அணியாமல் சென்ற மனைவி: பிரியாணி கரண்டியால் அடித்துக் கொன்ற கணவன்!

சமகவை பாஜகவுடன் இணைத்தார் சரத்குமார்... மோடி காமராஜர் போல் ஆட்சி நடத்துவதாக புகழாரம்!

1 கோடி பெண்கள் குஷ்புவை கிழிச்சு தொங்கவிடுவாங்க... அமைச்சர் கீதா ஜீவன் ஆவேசம்!

ஷாக்... படிக்கட்டில் பயணம் செய்த கல்லூரி மாணவர்கள் 4 பேர் பலி: லாரி மோதி உயிரிழந்த சோகம்!

x
காமதேனு
kamadenu.hindutamil.in