ஷாக்... படிக்கட்டில் பயணம் செய்த கல்லூரி மாணவர்கள் 4 பேர் பலி: லாரி மோதி உயிரிழந்த சோகம்!

ஷாக்... படிக்கட்டில் பயணம் செய்த  கல்லூரி மாணவர்கள் 4 பேர் பலி: லாரி மோதி உயிரிழந்த சோகம்!

செங்கல்பட்டு மாவட்டம் மேல்மருவத்தூர் அருகே லாரி மோதியதில் பேருந்து படியில் பயணித்த நான்கு கல்லூரி மாணவர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.

திருச்சி -சென்னை தேசிய நெடுஞ்சாலையில் இன்று காலை சென்ற அரசு பேருந்து மீது அதன் பின்னால் வந்த லாரி வேகமாக மோதியது. இந்த விபத்தின் போது பேருந்தின் படிக்கட்டில் பயணித்த நான்கு கல்லூரி மாணவர்களில் மூவர் நிகழ்விடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

மேலும் படுகாயமடைந்த மாணவர் ஒருவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழந்ததாக காவல் துறையினர் தெரிவிக்கின்றனர். விசாரணையில், உயிரிழந்த மாணவர்கள் மோனிஷ், கமலேஷ், தனுஷ் மற்றும் ரஞ்சித் என்பது தெரியவந்துள்ளது.

மாணவர்களின் உடல்களைக் கைப்பற்றி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக போலீஸார் அனுப்பி வைத்தனர். இந்த 4 மாணவர்களும், மதுராந்தகம் பகுதியில் உள்ள மாலோலன் கலைக்கல்லூரியில் படித்து வருவது தெரியவந்துள்ளது. இந்த 4 கல்லூரி மாணவர்களும் மோகல்பாடி, ராமாபுரம் பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என்று விசாரணையில் தெரிய வந்துள்ளது. இந்த விபத்து எப்படி நடந்தது என போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

படியில் பயணித்தால் நொடியில் மரணம் என்ற வாசகம் பொறிக்கப்பட்டும் அதை கண்டுகொள்ளாமல் மாணவர்கள் பயணித்ததால் இன்று அவர்கள் உயிருடன் இல்லை என்பதே பெற்றோரின் வேதனையாக உள்ளது.

இதையும் வாசிக்கலாமே...

சிஏஏ அமல்; பாஜகவையும் அதிமுகவையும் மக்கள் மன்னிக்க மாட்டார்கள் - முதல்வர் ஸ்டாலின் ஆவேசம்!

உளவுத்துறை சொன்ன தகவல்... அண்ணாமலை, அன்புமணிக்கு குறிவைக்கும் திமுக!

கேரளாவில் குடியுரிமை திருத்தச்சட்டம் அமல்படுத்தப் படாது: அதிரடியாக அறிவித்தார் முதல்வர் பினராயி விஜயன்!

சரசரவென சரிந்த எஸ்பிஐ பங்குகள்... உச்சநீதிமன்ற உத்தரவால் கடும் வீழ்ச்சி!

பிரதமர் மோடியின் தமிழக சுற்றுப்பயணத் திட்டத்தில் திடீர் மாற்றம்... பாஜகவினர் ஏமாற்றம்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in