4ம் கட்ட மக்களவைத் தேர்தல்: வேட்புமனு தாக்கல் துவங்கியது

4ம் கட்ட மக்களவைத் தேர்தல்: வேட்புமனு தாக்கல் துவங்கியது

ஏழு கட்டங்களாக நடைபெறும் மக்களவைத் தேர்தலின் 4ம் கட்ட தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று துவங்கியுள்ளது.

இந்தியாவில் 18வது மக்களவைத் தேர்தல் நாளை (ஏப்ரல் 19) துவங்கி வரும் ஜூன் 1ம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெற உள்ளது. வாக்கு எண்ணிக்கை ஜூன் 4ம் தேதி நடைபெறுகிறது. இந்நிலையில் 4ம் கட்ட மக்களவைத் தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் இன்று முதல் துவங்கியுள்ளது.

மக்களவைத் தேர்தல்
மக்களவைத் தேர்தல்

ஜம்மு - காஷ்மீர் யூனியன் பிரதேசம் மற்றும் 9 மாநிலங்களில் உள்ள 96 தொகுதிகளுக்கு 4ம் கட்ட தேர்தலில் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள 25 மக்களவைத் தொகுதிகளுக்கும், தெலங்கானாவில் உள்ள 17 மக்களவைத் தொகுதிகளுக்கும் 4ம் கட்டத்தில் தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

வாக்குப்பதிவு
வாக்குப்பதிவு

இதில் ஆந்திரப் பிரதேசத்தில் 175 சட்டப் பேரவைத் தொகுதிகளுக்கும் தேர்தல் சேர்த்து நடத்தப்பட உள்ளது. இதேபோல் பல்வேறு கட்டங்களாக தேர்தலை சந்திக்கும் பீகார், ஜார்க்கண்ட், மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா, ஒடிசா, உத்தரப் பிரதேசம், மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களும் 4வது கட்டத்தில் தேர்தலை எதிர்கொள்கின்றன. 4ம் கட்ட தேர்தல் வாக்குப்பதிவானது வரும் மே 13ம் தேதி நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் வாசிக்கலாமே...

கோவையில் பணப்பட்டுவாடா... கையும் களவுமாக சிக்கிய பாஜக பிரமுகர்!

முதற்கட்ட தேர்தலில் மோதும் 8 மத்திய அமைச்சர்கள்... வெற்றி கிடைக்குமா?

தேர்தல் நேரத்திலும் திகு திகு... சென்னையில் 5 இடங்களில் அமலாக்கத்துறை அதிரடி சோதனை!

சிலிண்டர் லாரி உரிமையாளர் சங்கத்தினர் வேலைநிறுத்தம்... தமிழ்நாட்டில் கியாஸ் தட்டுப்பாடு!

பாஜக தலைவரை கடத்திச்சென்ற கிளர்ச்சியாளர்கள்; அருணாச்சலப் பிரதேசத்தில் பரபரப்பு

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in