யார் இந்த நயாப் சிங் சைனி? - ஹரியாணா புதிய முதல்வரின் அரசியல் பின்னணி!

முதல்வராக பதவியேற்ற நயாப் சிங் சைனி
முதல்வராக பதவியேற்ற நயாப் சிங் சைனி

ஹரியாணா மாநிலத்தின் புதிய முதல்வராக பதவியேற்றுள்ள பாஜகவின் நயாப் சிங் சைனியின் அரசியல் பின்னணி குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.

 மனோகர் லால் கட்டார்
மனோகர் லால் கட்டார்

ஹரியாணா மாநிலத்தில் பாஜகவுக்கும், அதன் கூட்டணியில் இருந்த ஜனநாயக் ஜனதா கட்சிக்கும் (ஜேஜேபி) இடையே மக்களவைத் தேர்தல் தொகுதி பங்கீடு விஷயத்தில் கருத்து வேறுபாடு ஏற்பட்டு கூட்டணி முறிந்தது. இதனால் ஜேஜேபி ஆதரவுடன் இருந்து வந்த மனோகர் லால் கட்டார் தலைமையிலான அமைச்சரவை இன்று ராஜினாமா செய்தது. இந்நிலையில் சுயேச்சைகள் ஆதரவுடன் பாஜக மீண்டும் ஆட்சி அமைத்தது. ஆனால் இந்த முறை முதல்வர் பதவிக்கு மனோகர் லால் கட்டாருக்குப் பதிலாக முன்னாள் அமைச்சரான நயாப் சிங் சைனியை பாஜக மேலிடம் தேர்வு செய்தது. அதனை தொடர்ந்து புதிய முதல்வராக நயாப் சிங் சைனி இன்று மாலையில் பதவி ஏற்றுக்கொண்டார் .ஆளுநர் மாளிகையில் பதவியேற்பு நிகழ்வு நடந்தது.

பிரதமர் மோடியுடன் நயாப் சிங் சைனி
பிரதமர் மோடியுடன் நயாப் சிங் சைனி

இந்நிலையில் திடீரென தேசிய அளவில் கவனம் ஈர்த்த நயாப் சிங் சைனியின் அரசியல் வாழ்க்கை குறித்து பலரும் அறிந்துகொள்ள ஆர்வம் காட்டி வருகின்றனர். குருஷேத்ராவைச் சேர்ந்த மக்களவை உறுப்பினரான நயாப் சிங் சைனி (54), ஓபிசி சமூகத்தைச் சேர்ந்தவர். கடந்த ஆண்டு அக்டோபரில் ஹரியாணா பாஜக தலைவராக நியமிக்கப்பட்டார். தற்போது முதல்வர் பதவியிலிருந்து இறங்கியுள்ள மனோகர் லால் கட்டாருக்கு நெருக்கமானவராக அவர் அறியப்படுகிறார்.

நயாப் சிங் சைனியின் அரசியல் வாழ்க்கை கிட்டத்தட்ட 30 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கியது. ஹரியாணாவில் பாஜகவின் அமைப்பை வலுப்படுத்த அவர் பணியாற்றினார். கடந்த 2002-ம் ஆண்டில் அம்பாலாவில் பாஜகவின் இளைஞர் பிரிவின் மாவட்ட பொதுச் செயலாளராக பதவி உயர்வு பெற்றார்.

ஆட்சி அமைக்க ஆளுநரிடம் உரிமை கோரும் நயாப் சிங் சைனி
ஆட்சி அமைக்க ஆளுநரிடம் உரிமை கோரும் நயாப் சிங் சைனி

விவசாயப் பிரிவான கிசான் மோர்ச்சா மாநில பொதுச் செயலாளர் உள்பட பாஜகவின் பல பிரிவுகளுடன் பணியாற்றியுள்ளார். கடந்த 2012-ம் ஆண்டில் கட்சியை வழிநடத்த அம்பாலா மாவட்டத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். கட்சி அளவில் பல பதவிகளை வகித்ததைத் தொடர்ந்து, கடந்த 2014-ம் ஆண்டில் நடைபெற்ற மாநில சட்டப் பேரவைத் தேர்தலில் நாராயண்கரில் இருந்து எம்எல்ஏ-வாக தேர்ந்தெடுக்கப்பட்டார். 2016-ம் ஆண்டில் மாநில அமைச்சராக நியமிக்கப்பட்டார்.

2019-ம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில், நயாப் சிங் சைனி குருஷேத்ரா தொகுதியில் போட்டியிட்டார். அந்தத் தேர்தலில் காங்கிரஸின் நிர்மல் சிங்கை சுமார் 4 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் அவர் தோற்கடித்தார். தற்போது நெருக்கடியான சூழலில் நயாப் சிங் சைனி ஹரியாணாவின் புதிய முதல்வராகியுள்ளார்.

இதையும் வாசிக்கலாமே...

பாஜக அமைச்சரவை திடீர் ராஜினாமா... ஹரியாணாவில் பரபரப்பு!

ஷாக்... பர்தா அணியாமல் சென்ற மனைவி: பிரியாணி கரண்டியால் அடித்துக் கொன்ற கணவன்!

சமகவை பாஜகவுடன் இணைத்தார் சரத்குமார்... மோடி காமராஜர் போல் ஆட்சி நடத்துவதாக புகழாரம்!

1 கோடி பெண்கள் குஷ்புவை கிழிச்சு தொங்கவிடுவாங்க... அமைச்சர் கீதா ஜீவன் ஆவேசம்!

ஷாக்... படிக்கட்டில் பயணம் செய்த கல்லூரி மாணவர்கள் 4 பேர் பலி: லாரி மோதி உயிரிழந்த சோகம்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in