கங்கனாவின் அதிர்ச்சி படம்... காங்கிரஸ் பெண் நிர்வாகி மீது தேர்தல் ஆணையத்திடம் தேசிய மகளிர் ஆணையம் புகார்!

கங்கனா ரணாவத்
கங்கனா ரணாவத்

நடிகை கங்கனா ரணாவத் குறித்து அவதூறான பதிவுகளை வெளியிட்ட காங்கிரஸ் நிர்வாகிகள் சுப்ரியா ஸ்ரீனேட், எச்.எஸ்.அஹிர் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி தேசிய மகளிர் ஆணையம், தேர்தல் ஆணையத்துக்கு கடிதம் எழுதியுள்ளது.

காங்கிரஸ் கட்சியின் சமூக ஊடகங்களை நிர்வகிக்கும் சுப்ரியா ஸ்ரீனேட்டின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருந்து நடிகை கங்கனா ரணாவத் மேலாடை மட்டும் அணிந்திருக்கும் ஒரு புகைப்படம் வெளியானது. இந்த பதிவானது, மக்களவைத் தேர்தலில் கங்கனா ரணாவத் போட்டியிடுவதைக் குறிப்பிட்டு அவரை அவமதிக்கும் வகையில் வெளியிடப்பட்டிருந்தது.

இந்நிலையில் இந்த விவகாரம் சர்ச்சையான நிலையில் அந்த பதிவு உடனடியாக நீக்கப்பட்டது. இந்த விவகாரம் குறித்து பதிலளித்த சுப்ரியா ஸ்ரீனேட், தனது முகநூல் மற்றும் இன்ஸ்டாகிராம் கணக்குகளைப் பலர் பயன்படுத்துவதாகவும், அதில் யாரோ ஒருவர் இந்த பதிவை வெளியிட்டுவிட்டதாகவும், தற்போது அது நீக்கப்பட்டதாகவும் தெரிவித்தார்.

சுப்ரியா ஸ்ரீனேட், எச்.எஸ்.ஆஹிர்
சுப்ரியா ஸ்ரீனேட், எச்.எஸ்.ஆஹிர்

இதேபோல் கிசான் காங்கிரஸின் மாநில இணை ஒருங்கிணைப்பாளர் எச்.எஸ்.ஆஹிரும் கங்கனா குறித்து அவதூறான கருத்துகளை வெளியிட்டு சர்ச்சையில் சிக்கினார். இந்நிலையில் இவர்கள் இருவர் மீதும் நடவடிக்கை எடுக்கக் கோரி தேசிய மகளிர் ஆணையம் (என்சிடபிள்யூ), இந்திய தேர்தல் ஆணையத்துக்கு கடிதம் எழுதியுள்ளது.

இது தொடர்பாக என்சிடபிள்யூ இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், "கங்கனா ரணாவத் மீது சமூக ஊடகங்களில் அவதூறான கருத்துகளை வெளியிட்ட சுப்ரியா ஸ்ரீனேட் மற்றும் அஹிர் ஆகியோரின் சமீபத்திய அவமரியாதையான கருத்துகளை தேசிய மகளிர் ஆணையம் கடுமையாக கண்டிக்கிறது.

இத்தகைய கருத்துக்கள் ஒரு தனிநபரின் கண்ணியத்தை மீறுவது மட்டுமல்லாமல், பெண்களுக்கு எதிரான தவறான கருத்து மற்றும் அவமரியாதை கலாச்சாரத்தையும் நிலைநிறுத்துகின்றன. இந்த சம்பவத்தில் தொடர்புடைய இரு நபர்கள் மீதும் உடனடி மற்றும் கடுமையான நடவடிக்கை எடுக்குமாறு தேசிய மகளிர் ஆணையத் தலைவர் ரேகா ஷர்மா, இந்திய தேர்தல் ஆணையருக்கு கடிதம் எழுதியுள்ளார்.அத்துடன் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்த விரிவான அறிக்கையை மூன்று நாட்களுக்குள் ஆணையத்துக்கு தெரிவிக்க வேண்டும் என தேசிய மகளிர் ஆணையம் கோருகிறது.” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் வாசிக்கலாமே...

தூத்துக்குடியில் கதறியழுத மூதாட்டி... கண்ணீரைத் துடைக்க முதல்வர் ஸ்டாலின் செய்த காரியம்!

எங்க தொகுதிக்கு என்னதான் ஆச்சு?... கலங்கும் மயிலாடுதுறை காங்கிரஸ்!

அனல் பறக்கும் தூத்துக்குடி... இன்று ஒரே நாளில் மு.க.ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமி பிரசாரம்!

தேச தந்தையை பாதுகாக்க நன்கொடை தந்தை என்ன செய்வார்? பாஜக மீது காங்கிரஸ் தாக்கு

அநியாயம் பண்ணாதீங்க...விஜய் ரசிகர்களிடம் கதறிய இயக்குநர் வெங்கட்பிரபு!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in