11 வயதில் மாயம்; 22 ஆண்டுக்குப் பிறகு தாயிடம் சாமியாராக வந்த மகன்!

மகன் பிங்குவை கண்டு அழும் தாய் பானுமதி
மகன் பிங்குவை கண்டு அழும் தாய் பானுமதி

உத்தரப் பிரதேசத்தில் 11 வயதில் காணாமல் போன மகன் 22 ஆண்டுகளுக்குப் பின்னர் சாமியாராக திரும்பி வந்தார். ஒரு புறம் மகன் கிடைத்தது தாய்க்கு மகிழ்ச்சியளித்தாலும் மறுபுறம் சாமியராக மாறியதால் அதிர்ச்சி அடைந்தார்.

உத்தரப் பிரதேச மாநிலம் அமேதி அருகே உள்ள கரவுளி யைச் சேர்ந்தவர்கள் ராதிபால் சிங், பானுமதி. இந்த தம்பதியரின் மகன் பிங்கு. கடந்த 2002ம் ஆண்டில் பிங்குவுக்கு 11 வயதாக இருந்தபோது, இவரது விளையாட்டு தனத்தை பெற்றோர் கண்டித்துள்ளனர். இதனால் பிங்கு கோபித்துக்கொண்டு வீட்டை விட்டு வெளியேறினார்.

இதையடுத்து அவரை பெற்றோர் பல இடங்களில் தேடினர். ஆனால் எங்கு தேடியும் பிங்கு கிடைக்கவில்லை. இந்நிலையில் கடந்த 20 ஆண்டுகளாக மாயமாகி இருந்த பிங்கு திடீரென கடந்த வாரம் கரவுளி கிராமத்துக்கு வந்தார்.

ஆனால் அவர் பிங்குவாக வரவில்லை. துறவறம் பூண்டு சாமியாராக திரும்பி வந்தார். நீண்டகாலமாக தேடப்பட்டு வந்த பிங்குவை கண்ட அவரது கிராமத்தினர், ஆச்சரியமடைந்து, தற்போது டெல்லியில் வசிக்கும் பிங்குவின் பெற்றோருக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் உடனடியாக கரவுளி கிராமத்துக்கு வந்து தங்கள் மகனை கண்டு ஆனந்தத்தில் திளைத்தனர். அப்போது, பிங்குவின் உடலில் வடுக்கள் இருந்ததை அவரது பெற்றோர் அடையாளம் கண்டனர்.

காணாமல் போனவர்
காணாமல் போனவர்

இருப்பினும், இந்த சந்திப்பு மிகவும் குறுகிய நேரமே நீடித்தது. தனது குடும்பத்தினர் மற்றும் கிராமவாசிகளின் வேண்டுகோள்களுக்கு மத்தியிலும், பிங்கு தனது தாயிடமிருந்து பிச்சை வாங்கிக்கொண்டு கிராமத்தை விட்டு வெளியேறினார்.

தனது மகன் சேர்ந்த மதப் பிரிவினர் அவரை விடுவிக்க ரூ.11 லட்சம் கேட்பதாக பிங்குவின் தந்தை குற்றம் சாட்டியுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், “என் பாக்கெட்டில் 11 ரூபாய் கூட இல்லை. என்னால் எப்படி ரூ.11 லட்சம் கொடுக்க முடியும்?” என்றார்.

இந்நிலையில் இதுகுறித்து பிங்கு கூறுகையில், "கிராமத்துக்கு எனது வருகை குடும்பத்தில் இணைவதற்காக அல்ல. துறவிகள் தங்கள் தாயிடமிருந்து பிச்சை பெறும் ஒரு சடங்கை நிறைவு செய்யவே" என்றார். இதன்மூலம் பிங்கு துறவறம் பூண்டுவிட்டது அதிகாரப்பூர்வமாக குறிக்கிறது. இதற்கிடையே பிங்கு தனது தாயுடன் அமர்ந்து இசைக் கருவியை வாசிப்பதும், ஆனால் அவரது தாய் அழுவதுமான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இதையும் வாசிக்கலாமே...

அத்தை மகளை/மகனை திருமணம் செய்தால் தண்டனை... சர்ச்சையானது பொது சிவில் சட்டம்!

தமிழக அமைச்சர்கள் மீதான சொத்துக்குவிப்பு வழக்கு: நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் பரபரப்பு தகவல்!

அண்ணாமலை அல்ல, அவரது அப்பனே வந்தாலும் அதிமுகவை அழிக்க முடியாது...கொந்தளித்த ஆர்.பி.உதயகுமார்!

நாளை தை அமாவாசை: பூக்களின் விலை கடும் உயர்வு... 1 கிலோ மல்லி ரூ.2,000/-க்கு விற்பனை!

அண்ணாமலை அவதூறு பேச்சு... உயர் நீதின்றம் அதிரடி உத்தரவு!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in