அரசு நிதியை சுருட்ட இப்படியா?... அண்ணனுக்கும், தங்கைக்கும் திருமணம்: இடைத்தரகர்களின் மோசடி அம்பலம்!

திருமணம்
திருமணம்

அரசின் திருமண நிதியைப் பெறுவதற்காக அண்ணனுக்கும், தங்கைக்கும் இடைத்தரர்கள் திருமணம் செய்து வைத்த மோசடிச் சம்பவம் உத்தரப்பிரதேசத்தில் தற்போது அம்பலமாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரப்பிரதேச அரசு
உத்தரப்பிரதேச அரசு

நலிந்த மக்களின் வாழ்க்கை மேம்படுவதற்காக இந்தியாவின் ஒவ்வொரு மாநிலத்திலும் பல்வேறு திட்டங்களை மாநில அரசுகள் நடைமுறைப்படுத்தி வருகின்றன. அப்படி வழங்கப்படும் திட்ட உதவிகள் லட்சக்கணக்கான குடும்பங்களின் வாழ்க்கையில் ஒளி ஏற்றியுள்ளது.

ஆனால், உத்தரப்பிரதேச மாநிலத்தில், முக்கிய மந்திரி சமுகிக் விவாஹ யோஜனா (Mukhya mantri Samuhik Vivaah Yojana) என்ற திட்டம் தொடர்ந்து விமர்சனத்திற்கு உள்ளாக்கி வருகிறது.

உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்
உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்

உத்தரப்பிரதேசத்தில் இந்த திட்டத்தின் கீழ் ஏழை, எளிய மக்களுக்கு திருமணம் நடத்தி நலத்திட்ட உதவிகளை அம்மாநில அரசு வழங்கி வருகிறது. இந்த திட்டத்தின் கீழ் திருமணம் செய்யும் தம்பதிகளுக்கு வீட்டு உபயோகப் பொருட்களும், 35,000 ரூபாயும் வழங்கப்படுகிறது.

இந்த நிதியைப் பெறுவதற்காக இடைத்தரகர்கள், திருமணமானவர்களுக்கு மீண்டும் திருமணம் செய்து வைப்பது உத்தரப்பிரதேசத்தில் புதிதல்ல. ஆனால், தற்போது அரசின் திருமண உதவியை மோசடி செய்வதற்காக ஏற்கெனவே திருமண அண்ணனுக்கு அவரது தங்கையைத் திருமணம் செய்து வைத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரப்பிரதேச மாநிலம் மகாராஜ்கஞ்ச் மாவட்டத்தில் உள்ள லட்சுமிபூர் தொகுதியில் முதல்வரின் திருமணத் திட்டத்தின் கீழ் 38 ஜோடிகள் மார்ச் 5-ம் தேதி திருமணம் செய்து கொண்டனர். இந்த திருமணத்தின் திருமணமான தம்பதிக்கு வீட்டு உபயோகப்பொருட்களும், 35 ஆயிரம் ரூபாயும் வழங்கப்பட்டது. இதில் திருமண நாளில், ஒரு மணமகன் மண்டபத்திற்கு வரவில்லை. எதிர்பாராத திருப்பமாக, இடைத்தரகர்கள் ஏற்கெனவே முடிவு செய்யப்பட்ட மணமகனுக்குப் பதில் அவரது சகோதரனுக்கு திருமணத்தை நடத்த ஏற்பாடு செய்தனர். அதன்படி ஏற்கெனவே திருமணமான அண்ணனுக்கும், அவரது சகோதரிக்கு திருமணத்தை அனைத்து முறைப்படி சடங்குகளுடன் நடத்தியுள்ளனர்.

இந்த விஷயம் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளதால் மகராஜ்கஞ்ச் பகுதி வளர்ச்சி அலுவலர் (BDO), அரசு சார்பில், அந்த தம்பதியருக்கு வழங்கிய பொருட்களைப் பறிமுதல் செய்தார். அத்துடன் வெகுமதியாக அளிக்கப்பட்ட தொகையையும் பெறுவதற்கான நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதுவரை முறையான புகார் எதுவும் வரவில்லை என்றும், தற்போது விசாரணை நடத்தி வருவதாகவும், உரிய நடவடிக்கை எடுப்பதாகவும் மாவட்ட நீதிபதி அனுனய் ஜா தெரிவித்தார். அண்ணனுக்கு தங்கையை திருமணம் செய்து வைத்த திருமண மோசடி குறித்து தான் உத்தரப்பிரதேசத்தில் தற்போது பேச்சாக உள்ளது.

இதையும் வாசிக்கலாமே...

திருமணம் செய்யலைன்னா தற்கொலை செய்துப்பேன்... இளைஞரை மிரட்டிய பெண் கைது!

தொழுகை நடத்திய வெளிநாட்டு மாணவர்கள் மீது தாக்குதல்: 2 பேர் கைது!

அமெரிக்காவால் மூன்றாம் உலகப் போர் உருவாகும்... ரஷ்யா அதிபர் புதின் எச்சரிக்கை!

'கடவுளே மன்னிச்சுடு... பவ்யமாக மன்னிப்புக் கேட்டு விட்டு கோயிலில் திருடிய திருடன்... வைரலாகும் வீடியோ!

பார்ட்டிகளில் பாம்பு விஷ போதை... பகீர் கிளப்பிய பிரபல யூடியூபர்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in