பாங்காக் டூ பெங்களூரு... விமானத்தில் அனகோண்டா பாம்புகளை கடத்தி வந்தவர் கைது!

விமான பயணியிடம் பறிமுதல் செய்யப்பட்ட மஞ்சள் நிற அனகோண்டா
விமான பயணியிடம் பறிமுதல் செய்யப்பட்ட மஞ்சள் நிற அனகோண்டா

பாங்காக்கிலிருந்து பெங்களூருவுக்கு விமானத்தில் 10 மஞ்சள் அனகோண்டா பாம்புகளை கடத்தி வந்த நபரை சுங்கத் துறையினர் கைது செய்தனர்.

கர்நாடகா மாநிலம் பெங்களூருவின் கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்தில் நேற்று வழக்கம்போல் பயணிகளின் உடைமைகளை சுங்கத்துறையினர் சோதனை செய்தனர். அப்போது ஒரு நபரின் உடைமைக்குள் 10 மஞ்சள் நிற அனகோண்டா பாம்புகள் இருப்பதை கண்டு திகலடைந்தனர். இதைத் தொடர்ந்து அந்த நபரை சுங்கத் துறை அதிகாரிகள் கைது செய்தனர்.

பெங்களூரு கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையம்
பெங்களூரு கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையம்

இது தொடர்பாக சுங்கத் துறை சார்பில் எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், ‘பெங்களூரு சுங்கத் துறையினர், பாங்காக்கில் பாம்புகளை கடத்தி வந்த பயணியை தடுத்து நிறுத்தி கைது செய்தனர். அவரிடம் விசாரணை நடந்து வருகிறது. வனவிலங்கு கடத்தலை பொறுத்துக்கொள்ள மாட்டோம்’ என குறிப்பிட்டுள்ளனர்.

இந்தியாவில் வனவிலங்கு வர்த்தகம் மற்றும் கடத்தல் சட்டவிரோதமானது. கடந்த ஆண்டு, சுங்கத் துறைக்கு கிடைத்த ரகசிய தகவலின்பேரில் ஒரு பயணியிடம் நடத்தப்பட்ட சோதனையில் பாங்காக்கில் இருந்து குட்டி கங்காரு உள்பட 234 வன விலங்குகளை பெங்களூரு விமான நிலையத்தில் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

பிளாஸ்டிக் பெட்டியில் அடைத்து வைக்கப்பட்டிருந்த அந்த குட்டி கங்காரு மூச்சுத் திணறலால் இறந்துவிட்டது. கங்காரு தவிர மலைப்பாம்புகள், பச்சோந்திகள், உடும்புகள், ஆமைகள் மற்றும் முதலைகள் ஆகியவை டிராலி பைகளில் மறைத்து கடத்திவரப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இதையும் வாசிக்கலாமே...

+2க்கு பின்... பிசினஸ், காமர்ஸ், டிஜிட்டல் மார்க்கெட்டிங்... படிப்புகளுக்கு என்ன வாய்ப்பு?

பச்சைப் பட்டு உடுத்தி வைகையாற்றில் இறங்கினார் கள்ளழகர்... விண்ணதிர ஒலித்த 'கோவிந்தா' முழக்கம்!

“விஜயதாரணி ஆசைப்படலை... பேராசைப்பட்டார்...” ஹசீனா சையத் விளாசல்!

நள்ளிரவில் மாட்டுவண்டி பயணம்... 300 ஆண்டு பாரம்பரிய நிகழ்ச்சியில் பக்தர்கள் பரவசம்!

பெரும் சோகம்... காசாவில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 18 குழந்தைகள் உள்பட 22 பேர் பலி!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in