பதவி நாற்காலியில் நீடிக்க எந்த எல்லைக்கும் பாஜக செல்லும்... மல்லிகார்ஜுன கார்கே பரபரப்பு கடிதம்!

மல்லிகார்ஜுன கார்கே
மல்லிகார்ஜுன கார்கே

அதிகார போதையில் இருக்கும் எதேச்சதிகார ஆட்சி, நாற்காலியில் நீடிக்க எந்த எல்லைக்கும் செல்ல முடியும் என்பது முழு தேசத்திற்கும் தெரியும் என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கூறியுள்ளார்.

இந்தியாவில் மக்களவை தேர்தலுக்கான மூன்றாம் கட்ட வாக்குப்பதிவு இன்று நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், வாக்குப்பதிவு தரவுகளில் உள்ள முரண்பாடுகள் மற்றும் வாக்காளர் எண்ணிக்கையை வெளியிடுவதில் உள்ள தாமதம் குறித்தும் இந்தியா கூட்டணி தலைவர்களுக்கு அகில இநதிய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கடிதம் எழுதியுள்ளார்.

இந்தியா கூட்டணி
இந்தியா கூட்டணி

அந்த கடிதத்தில், இந்திய தேர்தல் ஆணையத்தின் வாக்குப்பதிவு தரவுகளில் கூறப்படும் முரண்பாடுகள் மற்றும் காலதாமதத்திற்கு எதிராக குரல் எழுப்ப வேண்டும் என்று கூறியுள்ளார். மேலும் துடிப்பான ஜனநாயகத்தின் கலாச்சாரத்தைப் பாதுகாக்கவும். மற்றும் அரசியலமைப்பு சுதந்திரத்தைப் பாதுகாப்பதும் அவசியம் என்று வலியுறுத்தியுள்ளார்.

அதற்காக தனது கடிதத்தின் மூலம் 6 கேள்விகளை அவர் எழுப்பியுள்ளார். இதுவரை இந்திய தேர்தல் ஆணையம் (இசிஐ) வெளியிட்ட 1-ம் கட்டம் மற்றும் 2-ம் கட்ட வாக்குப்பதிவு தரவுகளில் உள்ள முரண்பாடுகள் மற்றும் பதிவு செய்யப்பட்ட வாக்காளர் பட்டியலை வெளியிடாதது குறித்து கேள்வி எழுப்பியுள்ள கார்கே, இந்திய தேர்தல் ஆணையத்தின் நம்பகத்தன்மை எல்லா நேரத்திலும் மிகக் குறைவு என்று குறிப்பிட்டுள்ளார்.

சில ஊடகச் செய்திகளின்படி, அடுத்தக்கட்ட இறுதிப் பதிவு செய்யப்பட்ட வாக்காளர் பட்டியல் பகிரங்கப்படுத்தப்படவில்லை என்பது உண்மையல்லவா? தேர்தல்களை நடத்துவதில் அடிப்படைத் தவறான நிர்வாகத்திற்கு தேர்தல் ஆணையம் பொறுப்பேற்குமா என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார். கடந்த தேர்தல்களுடன் ஒப்பிடும்போது, ​​நடந்துகொண்டிருக்கும் தேர்தல்களில் உள்ள முரண்பாடுகளையும் அவர் பட்டியலிட்டுள்ளார்.

மல்லிகார்ஜுன கார்கே
மல்லிகார்ஜுன கார்கே

அதிகார போதையில் இருக்கும் எதேச்சதிகார ஆட்சி, நாற்காலியில் நீடிக்க எந்த எல்லைக்கும் செல்ல முடியும் என்பது முழு தேசத்திற்கும் தெரியும் என்று கூறியுள்ள கார்கே, இத்தகைய முரண்பாடுகளுக்கு எதிராக கூட்டு, ஒற்றுமை மற்றும் சந்தேகத்திற்கு இடமின்றி செயல்படுமாறு அனைத்துக் கட்சித் தலைவர்களையும் அவர் வலியுறுத்தியுள்ளார். அத்துடன், இந்திய தேர்தல் ஆணையத்தின் சுதந்திரத்தை உறுதி செய்வோம், பொறுப்பேற்கச் செய்வோம் என்றும் அந்த கடிதத்தில் கூறியுள்ளார்.

இதையும் வாசிக்கலாமே...

சவுக்கு சங்கர் உயிருக்கு ஆபத்து... வக்கீல் பரபரப்பு பேட்டி!

திடீர் பரபரப்பு... தொழில்நுட்ப கோளாறால் சுனிதா வில்லியம்ஸின் விண்வெளி பயணம் கடைசி நேரத்தில் ஒத்தி வைப்பு!

அதிர்ச்சி... பல்கலைக்கழக தண்ணீர் தொட்டியில் இளம்பெண் சடலம்!

காலாவதியான பீர் குடித்த இருவருக்கு உடல்நலக்குறைபாடு... டாஸ்மாக் நிர்வாகம் அலட்சியம்!

பகீர் வீடியோ... 15வது மாடியில் இருந்து குதித்து மருத்துவமனை ஊழியர் தற்கொலை! பெற்றோர்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in