பீகாரின் ககாரியா தொகுதியில் 2 வாக்குச் சாவடிகளில் இன்று மறு வாக்குப்பதிவு

ககாரியா மக்களவைத் தொகுதியில் 2 வாக்குச் சாவடிகளில் மறு வாக்குப்பதிவு (கோப்புப் படம்)
ககாரியா மக்களவைத் தொகுதியில் 2 வாக்குச் சாவடிகளில் மறு வாக்குப்பதிவு (கோப்புப் படம்)

பீகார் மாநிலம், ககாரியா மக்களவைத் தொகுதியில் உள்ள இரண்டு வாக்குச் சாவடிகளில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளுக்கு மத்தியில் இன்று மறுவாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

மக்களவைத் தேர்தலில் கடந்த 7ம் தேதி 3ம் கட்ட தேர்தல் நடைபெற்றது. இதில் பீகார் மாநிலத்தில் ககாரியா உள்ளிட்ட 5 மக்களவைத் தொகுதிகளுக்கும் வாக்குப் பதிவு நடைபெற்றது.

இந்நிலையில் ககாரியா தொகுதியில் பெல்டவுர் சட்டப் பேரவைத் தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் வாக்குச் சாவடி எண் 182, 183 ஆகியவற்றில் அன்றைய தினம் வாக்குச்சாவடிகளில் ஒரு கும்பல் நுழைந்து வன்முறையில் ஈடுபட்டது. இதில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் சேதப்பட்டன. மேலும் வாக்குச்சாவடி மையமும் சூறையாடப்பட்டு வாக்குப்பதிவு பாதிக்கப்பட்டது. இது தவிர சஹ்ரான் கிராமத்தில் வசிப்பவர்கள், சாலை வசதி கோரி, கடந்த 7ம் தேதி தேர்தல் புறக்கணிப்பு செய்தனர்.

இந்நிலையில் இந்த இரு வாக்குச் சாவடிகளிலும் மறு வாக்குப்பதிவு நடத்த உத்தரவிடப்பட்டது. அதன்படி, இன்று அந்த இரு வாக்குச் சாவடிகளிலும் பலத்த பாதுகாப்புடன் மறு வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. காலை 7 மணிக்குத் தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற உள்ளது.

ககாரியா மக்களவைத் தொகுதியில் பிரதானமாக, சிராக் பாஸ்வானின் லோக் ஜனசக்தி கட்சி (ராம் விலாஸ்), மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இடையே பலத்த போட்டி நிலவுகிறது.

மறைந்த ராம் விலாஸ் பாஸ்வானின் லோக் ஜனசக்தி கட்சி சார்பில் தொடர்ச்சியாக இரண்டு முறை இத்தொகுதியில் வெற்றி பெற்ற தற்போதைய எம்பி- மெஹபூப் அலி கைசருக்கு இந்த முறை வாய்ப்பு மறுக்கப்பட்டுவிட்டது.

வாக்குப்பதிவு
வாக்குப்பதிவு

இவருக்குப் பதிலாக சிராக் பாஸ்வானின் எல்ஜேபி (ராம் விலாஸ்) சார்பில் ராஜேஷ் வர்மா வேட்பாளராக உள்ளார். இதனால் அதிருப்தி அடைந்த மெஹபூப் அலி கைசர் ராஷ்ட்ரீய ஜனதா தளம் (ஆரஜேடி) கட்சியில் சேர்ந்துவிட்டார். கைசரின் மகன் யூசுப் சலாவுதீன், ககாரியா மக்களவைத் தொகுதியின் கீழ் உள்ள சிம்ரி பக்தியார்பூர் தொகுதியின் ஆர்ஜேடி எம்எல்ஏ ஆவார்.

ககாரியா மக்களவைத் தொகுதி மிகக் குறைந்த எண்ணிக்கையிலான (18.40 லட்சம்) வாக்காளர்களைக் கொண்டுள்ளது. கடந்த 7ம் தேதி நடந்த தேர்தலில் இத்தொகுதியில் 58.20 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.

இதையும் வாசிக்கலாமே...

பத்ம விருது பெற்றவர்களுக்கு ராஜ உபசரிப்பு... இரவு விருந்தளித்த அமைச்சர் அமித் ஷா!

கல்லூரி செமஸ்டர் தேர்வுகள் திடீர் ஒத்திவைப்பு... அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு!

நீட் தேர்வு முறைகேடு: பள்ளி ஆசிரியர் உள்பட 3 பேர் மீது வழக்கு!

494 மதிப்பெண்கள் எடுத்த மாணவர் தற்கொலை... மதிப்பெண்கள் குறைந்ததாக விபரீதம்!

பிகினி உடையில் ‘கங்குவா’ நாயகி... தெறிக்க விடும் நெட்டிசன்கள்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in