கடும் கோடையின் கொடுமை... கருப்பு அங்கிக்கு விடை கோரிய வழக்கறிஞர்கள்; கல்கத்தா உயர் நீதிமன்றம் அனுமதி

கல்கத்தா உயர் நீதிமன்றம்
கல்கத்தா உயர் நீதிமன்றம்

நீதிமன்றத்தில் வழக்காடும் வழக்கறிஞர்களின் தனித்துவ அடையாளமான கருப்பு அங்கிக்கு, இந்த கோடை முடியும் வரை விடை தர கல்கத்தா உயர் நீதிமன்றம் அனுமதி தந்துள்ளது.

காலனியாதிக்கத்திலிருந்து விடுபட்டு சுதந்திர தேசமான பிறகும், அதன் எச்சங்களில் இருந்து இந்தியா இன்னமும் முழுமையாக விடுபடவில்லை. குறிப்பாக நீதிமன்ற நடவடிக்கைகள் தொடர்பாக இந்த விவாதங்கள் அவ்வப்போது வெளிப்படும். அதிலும் ’மை லார்ட்’ என்று அழைப்பதற்கு எதிராக பல நீதிபதிகள் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.

கருப்பு அங்கியில் வழக்கறிஞர்கள்
கருப்பு அங்கியில் வழக்கறிஞர்கள்

இந்த வரிசையில் வழக்கறிஞர்கள் அணிந்து கொள்ளும், இந்திய தட்பவெப்ப நிலைக்கு சற்றும் பொருந்தாத கருப்பு அங்கியையும் சொல்லலாம். நீதிமன்ற வளாகத்தில் வழக்கறிஞர்களின் பிரத்யேக அடையாளமாக அவர்களை அலங்கரித்திருக்கும் கருப்பு அங்கி, அதன் மறுபக்கத்தில் மோசமான பாதிப்புகளை உள்ளடக்கி இருக்கிறது.

வெப்பத்தை அதிகம் ஈர்க்கக்கூடிய கருப்பு நிறம், கனமான அங்கி, நீதிமன்ற நடவடிக்கைகள் முடியும்வரை அதனை அணிந்திருக்க வேண்டிய நெருக்கடி உள்ளிட்டவை, இதர காலங்களை விட கோடையில் வழக்கறிஞர்களை வெகுவாக இம்சிக்க கூடியவை. அதிலும் காற்றோட்டத்துக்கு வழி குறைவான பழங்கால கட்டிடங்களை உள்ளடக்கிய நீதிமன்றத்தில், வெம்மை மிகுந்த கோடையில் கருப்பு அங்கி அணிந்து உலவுவது வழக்கறிஞர்களை தண்டனையாக உணரச் செய்பவை.

இவற்றிலிருந்து விடுபட கல்கத்தா உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள், கோடை முடியும் வரையிலேனும் கருப்பு அங்கியிலிருந்து விடுதலை வேண்டி நீதிமன்றத்தை கோரி இருந்தனர். கொல்கத்தாவில் தற்போதைய கோடை வெயில் 40 டிகிரி செல்சியஸை மிகுந்து இருப்பதாலும் வழக்கறிஞர்கள் இவ்வாறு கோரிக்கை வைத்தனர். இந்த வெப்பநிலை தொடரும் என்பதோடு, கோடையின் மத்தியில் மென்மேலும் உயரவும் கூடும் என்ற வானிலை அறிக்கையும் வழக்கறிஞர்களை அதிகம் சோதித்தன.

வெயில்
வெயில்

இதற்கிடையே வழக்கறிஞர்கள் கோரிய கருப்பு அங்கியிலிருந்து விலக்கு அளித்து, கல்கத்தா உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தலைமை நீதிபதி டி.எஸ்.சிவஞானம் இதற்கான உத்தரவினை இன்று பிறப்பித்தார். ”தற்போதைய கடும் கோடையை கருத்தில் கொண்டு கோடை விடுமுறை முடியும் வரை வழக்கறிஞர்களுக்கு நீதிமன்ற வளாகத்தில் கருப்பு அங்கியிலிருந்து விலக்கு அளிக்கப்படுகிறது” என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ஜூன் 9 வரை இந்த விலக்கு நடைமுறையில் இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் வாசிக்கலாமே...


#Election2024: ரஜினி முதல் விஜய் வரை... வாக்களித்த பிரபலங்கள் லிஸ்ட்!

கோவையில் பரபரப்பு... திமுக நிர்வாகியை குண்டுக்கட்டாக தூக்கிச்சென்ற போலீஸார்!

பள்ளியில் பாடம் நடத்தாமல் ஃபேஷியல் செய்த தலைமை ஆசிரியை... வைரலாகும் வீடியோ!

ஜோதிகா மிஸ்ஸிங்... குடும்பத்துடன் வாக்களிக்க வந்த நடிகர்கள் சிவக்குமார், சூர்யா, கார்த்தி!

பொள்ளாச்சி, கள்ளக்குறிச்சியில் ஹை ஸ்பீடு... ஒரு மணி நிலவரப்படி 46 சதவீத வாக்குப் பதிவு!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in