இந்திய அளவில் முதலிடம் பிடித்த கேரளா... எதில் தெரியுமா?

கேரளா
கேரளா

இந்திய அளவில் அதிகமானோர் பாஸ்போர்ட் வைத்திருக்கும் மாநிலங்களில் கேரளா முதலிடம் பிடித்துள்ளது.

வெளியுறவுத் துறை அமைச்சகம்
வெளியுறவுத் துறை அமைச்சகம்

மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் பாஸ்போர்ட் தொடர்பான புள்ளி விவரங்களை சமீபத்தில் வெளியிட்டது. அதன்படி, அதிக எண்ணிக்கையிலான இந்திய பாஸ்போர்ட் கொண்டுள்ளவர்களின் மாநிலமாக கேரளா முதலிடத்தில் உள்ளது.

மிகப்பெரிய மாநிலங்களான உத்தரப்பிரதேசம், மகாராஷ்டிரா மாநிலங்களைக் காட்டிலும் கேரளா முன்னிலை வகிப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

சுமார் 4 கோடி மக்கள் தொகை கொண்ட கேரள மாநிலத்தில் சுமார் 1 கோடி (99 லட்சம்) பாஸ்போர்ட் வைத்துள்ளனர். இந்தியாவின் அதிக மக்கள் தொகை (சுமார் 24 கோடி பேர்) கொண்ட உத்தரப் பிரதேசத்தில் 88 லட்சம் பேர் மட்டுமே பாஸ்போர்ட் வைத்துள்ளனர்.

பாஸ்போா்ட்
பாஸ்போா்ட்

13 கோடி மக்கள்தொகை கொண்ட மகாராஷ்டிரா மாநிலத்தில் 98 லட்சம் பேர் பாஸ்போர்ட் வைத்துள்ளனர். மகாராஷ்டிரா மாநிலம் பெற்ற 2-ம் இடத்தை கூட உத்தரபிரதேசத்தால் எட்ட முடியவில்லை. வெளிநாடுகளில் குடியேறியவர்களுக்கு பெயர் பெற்ற மாநிலமான பஞ்சாப்பில் 70.14 லட்சம் பேர் பாஸ்போர்ட் கொண்டுள்ளனர்.

கேரளாவில் வழங்கப்பட்ட 99 லட்சம் பாஸ்போர்ட்டுகளில் 42 லட்சம் பேர் பெண்கள் ஆவர். இந்த பிரிவிலும் கேரளா முதலிடத்தில் உள்ளது. 40.8 லட்சம் பெண் பாஸ்போர்ட்டுகளுடன் மகாராஷ்டிரா இரண்டாவது இடத்தில் உள்ளது.

உத்தரப் பிரதேசத்தில் 80 சதவீதத்துக்கும் அதிகமான பாஸ்போர்ட் வைத்திருப்பவர்கள் ஆண்கள். அம்மாநிலத்தில் 17.3 லட்சம் பெண்கள் மட்டுமே பாஸ்போர்ட் வைத்திருக்கிறார்கள்.

விமானம்
விமானம்

ஒட்டு மொத்த இந்திய அளவில், 35 சதவீதம் பெண்கள பாஸ்போர்ட் வைத்திருக்கின்றனர். இந்தியாவில் மொத்தம் 8.8 கோடி பாஸ்போர்ட்டுகள் வழங்கப்பட்டுள்ளன. இதில் 3.1 கோடி பெண்கள் பாஸ்போர்ட் கொண்டுள்ளனர்.

வளைகுடா நாடுகளில் தொடங்கி, அமெரிக்கா, கனடா, இங்கிலாந்து, இஸ்ரேல் மற்றும் ஐரோப்பிய நாடுகள் உள்ளிட்ட உலகின் பல்வேறு நாடுகளில் கேரள மாநிலத்தவர்கள் வசிக்கின்றனர். சமீப ஆண்டுகளில், மால்டோவா போன்ற அறியப்படாத நாடுகளுக்கு கூட கேரளத்தினர் செல்லத் தொடங்கியுள்ளனர்.

இதையும் வாசிக்கலாமே...


ரஜினி மகளை உசுப்பேற்றும் ரசிகர்கள்... ஐஸ்வர்யாவுக்கு தனி கொடி அறிமுகப்படுத்தி அலப்பறை!

அதிர்ச்சி... நேரலையில் சிவசேனா பிரமுகரை சுட்டுக்கொன்றுவிட்டு, கொலையாளியும் தற்கொலை!

ஒலிம்பிக் மெடலுடன் ஈபிள் டவர் பகுதியை எடுத்து செல்லலாம்... பிரான்ஸ் அசத்தல் அறிவிப்பு!

பகீர் வீடியோ... தியேட்டருக்குள் தீவைத்து கொண்டாடிய ரசிகர்கள்!

மின்வாரிய அதிகாரிகள் அலட்சியம்... கால்களை பறிகொடுத்த இளைஞர்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in